Monday 17 March 2014

நீயா,நானா போட்டியில் 40....!




திரைப்படத்துறைக்கு இந்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய கலைஞர்களுக்கு மதிப்பு மிக்க விருதுகள்.


61வது தேசிய விருதுக்கான பரிசீலனையில் நடுவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் 30 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.


இந்த விருதினை பெற இந்த ஆண்டு 40 தமிழ் படங்கள் மோதுகிறது.


அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் தேசிய விருதுக்கு மோதுவது இதுவே முதல் முறை.


6 மெழுகுவர்த்திகள்,

ஆதலால் காதல் செய்வீர்,

ஹரிதாஸ்,

விடியும் முன்,

மரியான்,

மூடர்கூடம்,

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,

 பண்ணையாரும் பத்மினியும்,

தங்க மீன்கள்,

தலைமுறைகள்

ஆகியவை போட்டியில் இருக்கும் முக்கிய படங்கள்.

பொழுதுபோக்கு படத்துக்கான பிரிவில்

 கோலிசோடா,

எதிர் நீச்சல்,

குட்டிப்புலி,

பாண்டியநாடு,

ராஜா ராணி,

சூதுகவ்வும்

படங்கள் போட்டியிடுகிறது.

இதில் இன்னும் வெளிவராத இனம், நெடுஞ்சாலை, ராமானுஜன் ஆகிய படங்களும் கலந்து கொள்கின்றன. தங்க மீன்கள், தலைமுறைகள், ஹரிதாஸ், விடியும் முன் படங்களுக்கு விருதுகள் கிடைக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது.

பழம் நழுவி வாயில் விழும்போது விடுவேனா...!



திரு திரு துறு துறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. தற்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார்.


யாமிருக்க பயமேன் காமெடி த்ரில்லர் படம். இதில் ஹீரோ கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருக்கிறார். இது த்ரில்லர் படம் என்பதால் அதில் கொஞ்சம் கிளாமரைச் சேர்க்க முடிவு செய்தார் இயக்குனர் டீகே.


நைனிடாவில் படப்பிடிப்பு நடந்தபோது கிருஷ்ணாவுக்கும், ரூபாவுக்கும் டூயட் பாடலை அங்கு படமாக்கினார்கள். அதில் கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்குமாறு இயக்குனர் கேட்டுக் கொண்டபோதும் அப்படி நடிக்க முடியாது என்று ரூபா மஞ்சரி மறுத்துவிட்டாராம்.


கதைக்கு தேவையென்றால் நடிக்கலாம். திடீரென்னு திணித்தால் நடிக்க முடியாது. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டாராம். படத்தின் இன்னொரு நாயகியான ஓவியாவிடம் இயக்குனர் டீகே கேட்க, உடனே ஓகே சொன்னாராம் ஓவியா.


 மலைகிராமம் ஒன்றில் வாழும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கும் ஓவியா கிளாமராக நடித்திருக்கிறார்.


ஹீரோ கிருஷ்ணாவுக்கு அவரது பூர்வீக சொத்தான ஒரு பெரிய பங்களா கிடைக்கிறது. அதை ரிசார்ட்சாக மாற்றுகிறார்.


அங்கு வந்து தங்குபவர்களுக்கு ஒரு பிரச்னை வருகிறது. சிங்கிள் ரூம் எடுத்து தங்கினால் கூடவே இன்னொருவர் உடன் தங்குகிறார்.


டபுள் ரூம் எடுத்து தங்கினால் மூன்றாவதாக ஒருவர் வந்து தங்குகிறார். அந்த புதிய நபர் யார் என்பதை பயங்காட்டி சொல்லும் படமாம். படப்பிடிப்புகள் பணிகள் முடிந்து விட்டது. மே மாதம் ரிலீசாகிறது.

‘அனைத்து தவறும் என் மீது தான் ' - தவறை உணர்ந்த கௌதம்...!



அஜித் - கௌதம் - ஹாரிஸ்! பவர்-ஃபுல் கூட்டணி?

கௌதம் மேனனால் ஹாரிஸ் ஜெயராஜ் வளர்ந்தாரா? ஹாரிஸ் ஜெயராஜால் கௌதம் மேனனால் வளர்ந்தாரா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல், அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தாலே போதும் என்று ரசிகர்கள் எண்ணத்தக்க வகையில் சமகாலத்தில் வளர்ந்தவர்கள் ஹாரிஸும் கௌதமும்.


 ’மின்னலே’ திரைப்படத்தில் துவங்கிய இவர்கள் நட்பு வாரணம் ஆயிரம் திரைப்படம் வரை, கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நல்லவிதத்தில் இருந்தது.


 விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஹாரிஸிடம் சொல்லமலே கௌதம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தபிறகு அந்த நட்பு தொடரவில்லை. ‘என் மீது தான் தவறு என்று கௌதம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாலும் ஹாரிஸ்-கௌதம் கூட்டணி மீண்டும் இணையாமல் போனது.


ஹாரிஸ் இல்லாமல் கௌதம் படங்களின் பாடல்கள் தோல்வியடைந்தன என்று சொல்லமுடியாத விதத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா என்று தான் கௌதமின் கூட்டணி இருந்தது என்றாலும் ஹாரிஸ்-கௌதம் கூட்டணியில் உருவான பாடல்களின் தாக்கம் மற்றவர்களின் பாடல்களில் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்து.


 தற்போது அஜித்-கௌதம் இணைந்திருக்கும் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. முன்பு ஒருமுறை அளித்த பேட்டியில் ‘அனைத்து தவறும் என் மீது தான். ஹாரிஸ் என்னுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்தால் எனக்கும் சம்மதம் தான். ஹாரிஸுடன் மீண்டும் இணைவதில் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று கூறியிருந்தார்.


அதுமட்டுமில்லாமல் அஜித்-கௌதம்-ஹாரிஸ் ஆகியோரின் கூட்டணி புதிதாக திட்டமிடப்பட்ட கூட்டணியல்ல. கௌதம்மிடம் இதற்கான திட்டம் எப்போதோ இருந்தது. ஆனால் சில காரணங்களால் செயல்படுத்தமுடியாமல் போய்விட்டது என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

விஸ்வரூபம் எடுக்கும் முருகதாஸ் வீடியோ விஷயம்...!



கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் முகநூலில் வேகமாக பரவிய விஷயம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இளம் நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோ காட்சி.


இதை ஆரம்பத்தில் பெரிது படுத்தாமல் விட்ட முருகதாசுக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருகிறது. போகும் இடமெல்லாம் விடியோவில் இருப்பது உண்மையிலேயே நீங்கதானே?


என கேட்டு தெரிந்த முகங்கள் அனைத்தும் அவரை துரத்துகின்றனர்.


இதுவரை முருகதாஸ் இந்த வீடியோ பற்றி பெரிதாக எதுவும் கருத்து தெரிவிக்காமல் விட்டதால் சினிமா வட்டாரத்தில் முருகதாஸ் விஷயத்தை மூடிமறைக்க பார்க்கிறார்


என கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.முருகதாஸின் மனைவி கூடா அவரிடம் சரியாக பேசுவதில்லையாம்.


சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியால்,

எனவே போலியாக வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்போவதாக முருகதாஸ் முடிவெடுத்துள்ளார்.


ஏற்கனவே த்ரிஷா வீடியோ விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


தற்போது முருகதாஸ் வீடியோ விஷயம் விஸ்வரூபம் எடுக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.

''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் ரெடி...!



நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?


கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது.


ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர்
கிடைத்துவிடும்.


மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.


''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில்,


மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.


இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.


செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.


தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...



நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.


ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது... அது என்ன தெரியுமா....?


நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.


இனி ஒவ்வொரு முறையும் நமது தேசியக்கொடி ஏற்றத்தைக் காணும் போதும், இதை உங்களது மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


அன்று அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்குஅனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்று எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டு தான் இருந்திருப்போம்...!


ஒற்றுமையுடன் பெற்ற சுதந்திரத்தை
ஒற்றுமையுடன் பாதுகாப்போம்...


இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை
இரத்தம் சிந்தாமல் பாதுகாப்போம்...


நமது சுதந்திற்க்காக உயிர் தியாகம் செய்த
நமது முன்னோர்களை நினைவு கூறுவோம்..


"இந்தியனாய் பிறந்தமைக்கு பெருமை படுவோம்"


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையெனில் ஓங்கிடும் தாழ்வு.


நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறுவோம்.


தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

நீ வாங்குற அஞ்சுக்கும்,பத்துக்கும் இது தேவையா சிவகார்த்திகேயா...!



சிவகார்த்திகேயன் என்ற ஒரே ஒரு ஹீரோவுக்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘குண்டர்கள்’ சத்யம் தியேட்டரை சூழ்ந்து கொண்டு அடாவடித்தனம் செய்ததால் ஆடியோ பங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரை ஹீரோவாகப் போட்டு சில கோடிகளை செலவழித்தால் போதும். பல கோடிகளை கல்லா கட்டி விடலாம் என்பது தான் தயாரிப்பாளர்களின் பெருங்கனவு.


இதனால் சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள்.


அதிலும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் சிவகார்த்திகேயனை தனது கம்பெனி ஆர்டிஸ்ட்டைப் போலவே ஆக்கி விட்டார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அடுத்தடுத்து மினிமம் பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார்.


சிவகார்த்திகேயனை வைத்து மதன் தயாரித்த எல்லா படங்களுமே நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தவிர கார் வாங்கிக் கொடுப்பது, அவரது சொந்த விஷயங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வது என்று அவரை அப்படியே வளைத்துப் போட்டிருக்கிறார்.


இந்த நிலையில் இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா மோத்வானி நடித்த ‘மான்கராத்தே’ படத்தின் ஆடியோ பங்ஷன் நடைபெற்றது. இந்தப்படத்தை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரித்திருக்கிறார்.


பொதுவாக இதுபோன்ற விழாக்களுக்கு பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் வந்தால் எந்த இடைஞ்சலும் இல்லாமல் விழாவுக்கு செல்ல அனுமதியளிப்பார்கள். ஆனால் ‘மான் கராத்தே’ ஆடியோ பங்ஷனில் பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் உள்ளே நுழைந்தபோது ‘பவுன்சர்கள்’ என்று சொல்லப்பட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.


இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தி சேகரிக்க எங்களுக்கே இடம் இல்லேன்னா யாருக்காக இந்த பங்ஷனை நடத்துறீங்க..? என்று வந்திருந்த பத்திரிகையாளர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வந்திருந்த திரையுலக பிரபலங்களையும் குண்டர்கள் உள்ளே விடாமல் தடுத்ததால் அவர்களும் கோபத்துடன் விழா நடந்த இடத்தை விட்டு வெளியேறினர்.


பத்திரிகையாளர்ளிடம் ஐ.டி கார்டையும், திரையுலக பிரபலங்களிடம் இன்விடேஷனையும் கேட்டு பார்த்து உள்ளே அனுமதித்த சத்யம் தியேட்டர் ‘திறமைசாலி’? ஊழியர்கள் ரோட்டில் வந்தவன், போனவனையெல்லாம் எந்த முறையான பரிசோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்து விட்டார்கள் போலும். சுமார் 500 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த தியேட்டரில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் குழுமியிருந்தார்கள். இதனால் 9 மணி ஆடியோ பங்ஷனுக்கு சுமார் 9:30 மணிக்குள்ளாகவே பார்க்கிங் ஏரியா நிரம்பி வழிந்தது.


ரசிகர்கள் என்ற போர்வையில் விழாவுக்கு முறையான அனுமதி பெறாத அள்ளக்கைகளே பத்திரிகையாளர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சீட்டுகளில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு விசிலடிச்சான் குஞ்சுகளாக மாறியிருந்தனர்.


 அதுமட்டுமில்லாமல் இது குறித்து விழாக்குழுவினர்களிடம் புகார் அளித்தும் கூட அவர்களும் அந்த அள்ளக்கை கூட்டத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறினர்.


இது ஒருபுறமிருக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் விஜய்டிவி மட்டுமே எந்த இடைஞ்சலும் இல்லாமல் விழாவை நான்கு மூலைகளிலும் கேமராக்களை வைத்துக் கொண்டு வளைத்து வளைத்து படம் பிடித்துக் கொண்டிருந்தனர். விழா நடந்த மேடைக்கு அருகில்


சிவகார்த்திகேயனை பாதுகாக்க வந்திருந்த குண்டர்கள் அத்தனை பேரும் தூண்கள் போல நின்று கொண்டிருந்ததால் வந்திருந்த மற்ற டிவி சேனல்கள் விழாவை சிறப்பான முறையில் படம் பிடிக்க முடியாமல் கொதித்துப் போய் வெளியேறினார்கள்.


இதே சத்யம் தியேட்டரில் தான் போன வாரம் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் நடந்தது. அந்த விழாவுக்கு மும்பையிலிருந்து நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப் உட்பட சிவகார்த்திகேயனை விட நூறு மடங்கு ரசிகர்களிடையே பிரபலமான திரையுலக பிரபலங்கள் பலரும் வந்திருந்தார்கள். அப்பேர்ப்பட்ட விழாவில் கூட மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் சரியான முறையில் எந்தவித கெடுபிடியும் காட்டப்படாமல் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதுகாப்புக்காக குண்டர்கள் வரவழைக்கப்படவில்லை.


ஆனால் நடித்து அரை டஜன் படங்கள் மட்டுமே ரிலீசாகியிருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயனின் பாதுகாப்புக்கு 50-க்கும் மேற்பட்ட குண்டர்களா…? என்று விழாவுக்கு வந்தவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்ததோடு இதெல்லாம் ‘ரொம்ப டூ மச்’ என்றும் செம நக்கலடித்தனர்.


 எப்போதுமே எளிமைக்கு சொந்தக்காரர் போல தன்னை காட்டிக்கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸும் மும்பை ஸ்டைலில் விழாவை நடத்தை ஆசைப்பட்டு கடைசியில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களையும், மீடியாக்களின் வெறுப்பையும் சம்பாதித்தது தான் மிச்சம்.


சத்யம் தியேட்டரில் இதுவரை ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், விக்ரம் சூர்யா என எத்தனையோ முன்னணி ஹீரோக்கள் கலந்து கொண்ட ஆடியோ பங்ஷன்கள் நடந்துள்ளது. ஆனால் அந்த பங்ஷன்கள் எல்லாமே எந்தவித முரண்பாடும் இல்லாமல், சிக்கலும் இல்லாமல், மிக நேர்த்தியாக, அமைதியான முறையில் தான் நடந்துள்ளது.


அதையெல்லாம் பார்த்து பழக்கப்பட்ட திரையுலகினருக்கு ‘மான் கராத்தே’ படத்தின் ஆடியோ பங்ஷன் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா… என்று முணுமுணுக்க வைத்ததோடு, அவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு எந்த முறையான திட்டமிடலும் இல்லாமல் நடந்தேறியது.


புகழின் போதை தலையின் உச்சிக்கு ஏறி, ஒரு கட்டத்தில் காணாமல் போனவர்களின் கண்ணீர் கதைகள் தமிழ்சினிமாவில் ஆயிரம் உண்டு.

இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்தும் கூட ரசிகர்களின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன் எப்படி இந்த மோசமான புகழ் போதையில் சிக்கினார் என்பதே அவரின் நலம் விரும்பிகளின் நியாயமான கேள்வி?

அவருக்கு ஓகே 'னா எனக்கு ஓகே தான்...!



இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் மென்மேலும் எதிர்பார்புக்களைக் கிளப்பிவருகிறது.


இவ்வாண்டின் மாபெரும் வெற்றிப்படமாக இப்படம் அமையலாம் என்றும் தற்போதிருந்தே விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் இப்படம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் கதை விஷாலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகத்தான் இருக்கும் என்று பெரும்பாலானோர் கருதிவரும் நிலையில்,


இப்படத்தின் கதையினை மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை மனதில் வைத்து உருவாக்கியதாக இப்படத்தின் இயக்குனர் திரு கூறியுள்ளாராம்.


மோகன்லாலிடம் இப்படத்தின் கதையினைக் கூறி அவரது ஒப்புதலையும் பெற்றுவிட்ட பிறகு, இக்கதையினைக் கேள்விப்பட்ட விஷால் தானே நடிப்பதாக முன்வந்தாராம்.


விஷாலுடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் பணியாற்றியிருப்பதால், அந்த நட்பின் அடிப்படையில் நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷால் நடிப்பது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.


இவ்வாண்டின் மாபெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பிவரும் இப்படம் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தனை எதிர்பார்ப்புக்களையும்
சமாளிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

தனுஷை விட்டு ஷங்கருடன் இணையும் அனிருத்...!



தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய “3” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.


அறிமுகப்படத்தில் இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடலின் மூலம் உலகப்புகழும் பெற்றார்.


 எல்லோராலும் பாராட்டப்படும் இசையைக்
கொடுத்துவரும் அனிருத் மளமளவென முன்னணி இசையமைப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.


இக்காலகட்டத்தின் இளைஞர்கள் மனதிற்குப் பிடித்த பாடல்களைத் தருவதில் அனிருத் முதலிடத்தில் இருப்பதாகப் பாராட்டப்படுகிறார்.


இவர் இசையமைத்த அனைத்துப் படங்களுமே ஹிட்டாகியிருப்பதுடன், பாடல்களும் மெஹா ஹிட்டாக அமைந்துவருகின்றன.


 இதனால் முன்னணி இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றுவருகிறார் அனிருத்.

கடந்த 2012 ஆம் ஆண்டுதான் திரைத்துறைக்குள் காலடி பதித்தார். இரண்டே ஆண்டுகளில் முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் ஆகியோரது படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதோடு, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.


விரைவில் ஷங்கர் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

அடுத்த நாடகத்தை தொடங்கிய சிம்பு...!



காதல் அழிவதில்லை படம் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார். 2002–ல் இப்படம் வந்தது. மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்போது வாலு, இது நம்மஆளு, வேட்டைமன்னன் படங்களில் நடித்து வருகிறார்.


காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். நயன்தாராவை காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். அதுவும் முறிந்து போனது. டி.வி. நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்று பேசிய அவர் சினிமா பிடிக்கவில்லை என்றார். அவர் கூறியதாவது:–


சினிமாவில் எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். எனவே படப்பிடிப்புகளில் நடக்கும் தவறுகளை உடனே கண்டுபிடித்துவிடுவேன். தற்போது சினிமா எனக்கு பிடிக்கவில்லை. சினிமாவை தாண்டி வேறு ஏதாவது செய்யலாமா என்று யோசிக்கிறேன்.


ரஜினிசார் மாதிரி ஆக வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது ஆசையாக இருந்தது. ஆனால் 29 வயதுக்கு மேல் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கிறது. சினிமா என்ற வட்டத்துக்குள் சிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதில் இருந்து வெளியேற நினைக்கிறேன். சினிமாவை தாண்டி ஏதாவது செய்ய வேண்டும்.


பணம் பிடிக்கவில்லை. பணம் நல்லவர்களையும் கெட்டவர்கள் ஆக்குகிறது. மனிதாபிமானம் இல்லை. பொறாமை இருக்கிறது. இதற்கெல்லாம் பணம்தான் காரணம். சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையு-ம் எனக்கு கிடையாது.

இவ்வாறு சிம்பு கூறினார்.

மேடை நாகரீகம் தெரியாத சிவகார்த்திகேயன் பேச்சால் முகம் சுளித்த பிரபலம்...!



சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில், திருக்குமரன் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு பலத்த சலசலப்புக்கிடையே இன்று நடைபெற்றது.


விழாவில் இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் பிரபு சாலமன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, சதீஷ், இசையமைப்பாளர் அனிருத், படத்தின் இயக்குனர் திருக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,


‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையது ரொம்ப லக்குதான்.


இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.


எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்த பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.


அப்புறம், இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன். அது ஒரு பெரிய தப்பா.


ஹன்சிகாவுக்கு மேட்ச்சா , இந்த படத்துக்காக என்னை கலரா காட்டறதுக்கு கேமிராமேன் கூட ஃபாரின் போயிட்டு 20 லைட்டுலாம் வாங்கிட்டு வந்தாரு.
மத்த படத்துலலாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டென்ட்தான் இருப்பாங்க.


ஆனால், இந்த படத்துல 10 பேர் கூடவே வருவாங்க. இவர் யாருங்கன்னு கேட்டால், அவர்தான்ங்க உங்க ஹேரை சரி செய்வாரு, இவருன்னு கேட்டால் அவர்தான்ங்க உங்க சட்டை பட்டனை சரி செய்வாருங்க, இவருன்னு கேட்டால் உங்களுக்கு மேக்கப் போட்ட பிறகு துளி ஆயில் கூட வராம டச்சப் பண்ணுவாருன்னு , மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி பார்த்துக்கிட்டாங்க.


ஹன்சிகா கூட நடிக்கிறதுல ஒரே ஒரு வருத்தம்தான், எப்பவுமே இங்கிலீஷ்லயே பேசிக்கிட்டிருப்பாங்க. இந்த படத்தை நம்பி வந்ததுக்கு அவங்களுக்கு நன்றி.


நான், முதல்ல டைரக்டரைப் பார்த்துட்டு கொரியாவுல இருந்து வந்தவரோன்னு நினைச்சேன். அப்புறம், “நான்தாங்க….வாங்க நாம படம் பண்ணிக்கிடுவோம்…”னு மதுரை பாஷைல சொன்னாரு. அவர் பேசறதப் பார்த்தால் எங்க பெரியம்மா பேசுற மாதிரியே இருக்கும்.


“சாப்பிட்டீங்களாடா…வந்து தின்னுட்டுப் போங்கடான்னு…” சொல்ற மாதிரியே இருந்தது. அப்புறம் பார்த்தால் அவர் தேனிப் பக்கத்து ஆளுதான்.
ஆனால், அவர்கிட்ட, “ஃபோட்டோ ஷுட்ல பார்த்துக்குவோம் சார், சரி வரலைன்னா மாத்திக்கிடலாம்னு” நினைச்சேன். ஆனால், ஃபோட்டோ ஷுட்லயே ஒரு மாஜிக் பண்ணிட்டாரு.”


பெரிய பட்ஜெட்டோட செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் பெருசாகும். தியேட்டர்லலாம்  டிக்கட் ரேட் அதிகமாகும் போது, அப்படி கொடுத்து வந்து பார்க்கிறவங்களுக்கு, இந்த படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.
நான் ஆர்ட்டிஸ்டா, ஸ்டாரா, ஹீரோவா அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும் போது என்னைப் பார்த்தால் சந்தோஷப்படணும்.
என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம்.


இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்.


இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியம் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு, இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும் போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்,” என சிவகார்த்திகேயன் பேசினார்.

இன்றய இயக்குனர்களுடன் என்னால் போட்டிபோட முடியவில்லை - மணிரத்னம்...!



சித்தார்த்-அமலாபால் நடித்த, 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது துல்கர் சல்மான்-நஸ்ரியாவை ஜோடி சேர்த்து ''வாயை மூடி பேசவும்'' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.


தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றபோது டைரக்டர்கள் மணிரத்னம், செல்வராகவன், கேயார் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.


அப்போது மணிரத்னம் பேசும்போது, நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு வேலை செய்து கொண்டிருந்தேன். அதன்பிறகு சினிமாவின் மீது ஈர்க்கப்பட்டு இயக்குனர் ஆனேன்.


அப்போதெல்லாம் சினிமாவில் படித்தவர்கள் அதிகமில்லை. ஆனால், இப்போது நிறைய படித்தவர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு துறைகளில் சாதித்தவர்களும்கூட சினிமா படம் எடுக்க வருகிறார்கள். தயாரிப்பாளராக வருகிறார்கள். இது ரொம்ப சந்தோசமாக உள்ளது.


மேலும், வாயை மூடி பேசவும் படத்தின் டிரைலர் ரொம்ப வித்தியாசமாக உள்ளது. எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகவும் உள்ளது.


டைரக்டர் பாலாஜி மோகன் மீது பொறாமை ஏற்படுகிறது. அதோடு, இங்கே பேசியவர்கள் அவருக்கு கோபமே வராது என்றார்கள். அதனால் அது எப்படி என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது.


இந்த படத்தில் எனது தளபதில் படத்தில் நடித்த மம்மூட்டியின் மகன் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அவரைப்பார்க்கையில் எனக்கு வயதாகி விட்டதை என்னால் உணர முடிகிறது என்றார் மணிரத்னம்.

மாதங்களின் பெயர்கள் வந்தது எப்படி?



தமிழன் தந்த நாட்காட்டி தடுமாறியது ஏன்?

பழைய ரோமர்கள் மார்ச் மாதத்தை தொடக்க மாதமாகவும்,பெப்ரவரியை இறுதி மாதமாகவும் கொண்டிருந்தார்கள். அப்போதய பெயர்களின் சரித்திரத்தைப் பார்க்கலாம்.

ஜனவரி-January-என்பது பின்னர் Pompilius என்பவரால், தொடக்கத்திற்கும் முடிவிற்குமான கடவுளின் பெயரான Janus இல் இருந்து உருவானது.

பெப்ரவரி-February-கி.மு.690 அளவில்  Numa Pompilius வினால் வருட முடிவில் கொண்டாப்பட்ட Februa பண்டிகையின் பெயராகும்.

மார்ச் -March- Mars இல் இருந்து வந்ததாம்.அது ரோமானியர்களின் போருக்கான கடவுளாவர்.

ஏப்ரல்-April-மூன்று விளக்கங்கள் உண்டு. April என்பது லத்தின் மொழியில் இரண்டாவது என்பதைக் குறிக்கும்.aperire என்ற லத்தின் மொழிச் சொல்,பூக்கள் உருவாகும் வசந்த காலத்தைக் குறிக்கிறது. மூன்றாவது Aphrodite என்ற பெண் தெய்வத்தைக் குறித்த சொல்லில் இருந்து வந்தது.

மே-May-பூமியில் மரங்களை வளர்க்கும் பென் தெய்வத்தின் பெயரான,Maia என்பதைக் குறிக்கும்.

ஜூன்-June-Juno என்ற திருமணங்களுக்கான பெண் தெய்வத்தின் பெயர்.

ஜூலை-July-ஐந்தாவது என்ற லத்தின் மொழி- Quintilis-என்ற பெயரில் முதலில் அழைக்கப்பட்டு,பின்னர் கி.மு.44 இல் Julius Caesar பெயரில் அழைக்கப்பட்டது.

ஆகஸ்ட்-August-முதலில் லத்தின் மொழியில் ஆறாவது -Sextillia-பின்னர் கி.மு.8 இல் இருந்து
Augustus Caesar பெயரில் இருந்து மாற்றப்பட்டது.

அடுத்து வந்த செப்டெம்பர்-Sebtember-லத்தின் மொழி ஏழு-septem

அக்டோபர்-October- லத்தின் மொழி எட்டு -Octo.

நொவெம்பர்-Novembar-லத்தின் மொழி ஒன்பது -novem

டிசெம்பர்-December-லத்தின் மொழி பத்து-decem


Gregorian calendar என அழைக்கப்படும் தற்போதய முறையான Jan-Dec. 1582 ல் Pope Gregory இனால் கொண்டு வரப்பட்டது.இருப்பினும் 1752 வரை பிரிட்டனும் அதன் காலணியாக இருந்த அமெரிக்காவும் மார்ச் மாதத்தையே தொடக்க மாதமாக கொண்டாடி வந்தது.

முதலில் 304 நாட்களாக இருந்த வருடம் கால மாற்றங்களை சரியாகக் காட்டாததால்,Numa Pompilius மன்னன் ஜனவரி,பெப்ரவரி ஐ சேர்த்து 355 நாட்களாக மாற்றியும் சரிவராததால்,10 நாட்களைக்கொண்ட Mercedinus மாதத்தை உருவாக்கினான்.ஜூலியஸ் சீசர் அதை நீக்கி,12 மாதங்களைக் கொண்ட, 365 நாட்கள் உடைய வருடத்தை உருவாக்கி,பெரவரிக்கு 29 நாட்களைக் கொடுத்தார். பின்னர் Augustus என்பவர் ஆகஸ்ட்டில் 31 நாட்களைப் போட்டு,பெப்ரவரிக்கு 28 நாட்களைக் கொடுத்தார்.

எகிப்தியரின் யூலியன் கலண்டர்(Julian calendar) ஐப் பின்பற்றி வந்த காலத்தில்,16 ம் நூற்றாண்டு வரை,தை 1 - ஜனவரி 14 தான் வருடத்தின் தொடக்கமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.இலங்கையின் ஒரு புள்ளிக் கோட்டை (கடற்கோளுக்கு முன்னரான பழைய இலங்கை) நேரக் கோடாக (கிரீன்விச் போல்) பாவித்து தமிழர்கள் நாட்காட்டியை, அன்று உருவாக்கினார்கள்.ஆனால் தமிழர்களின் மதச் சார்பற்ற இந்த முறையை, அன்றைய 16 ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சபை (13 ஆம் Pope Gregory XIII ) விரும்பாது, ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்கமாக அறிவித்தது.

ஆரிய அரசன் சாலிவாகனன் தான் முதலில் சந்திர நாட்காட்டியை அடிப்படையாக வைத்து சித்திரை ஒன்றை வருடத் தொடக்கமாக அறிவித்து ஆணை பிறப்பித்தான். அடிமைகளாகி விட்ட தமிழர்களும்,அதைத் தொடர்ந்தனர்.இது வரலாறு.

நான் சொன்னால் யார் தான் நம்பப் போகிறீர்கள்.ஆனாலும் அதுதான் உண்மை. எங்கோ இருந்து கொண்டுவரப்பட்ட, ஆரிய இந்துமததை நீங்கள் தலையில் வைத்துக் கொண்டாடினாலும்,உண்மை ஒன்று இருக்கிறதே,அதுதான் தமிழர்களின், ஒன்றெ குலம் ஒருவனே தேவன், என்ற மதமற்ற வள்ளுவனின் இறைக்கொள்கை.
ஜப்பானியர்கள் நமது பொங்கலைப் போல், பொங்கலோ பொங்கல் (FONKARA -FONKARA)  என்று நம்மைப் போல் மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
எல்லாம் அழிக்கப்பட்டு நாம் நிர்க்கதியாய்,ஆரிய அடிமைகளாய் நிற்கிறோம்.

ஏப்ரல் போல்(April fool) ஏன் வந்தது தெரியுமா? முன்னர் ஐரோப்பியர்கள் ஏப்ரல் 1 இல் தான்
புத்தாண்டைக் கொண்டாடினார்கள். 13 ஆம் Pope Gregory ஜனவரி 1 ஐ புத்தாண்டாக அறிவித்த போதும்,ஐரோப்பியர்கள் அதை ஏற்றுக் கொள்ளாது,தொடர்ந்து ஏப்ரல் 1 ஐ கொண்டாடி வந்தனர். பின் அது மாறிய போதும்,ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என அழைத்தார்கள். இருந்தாலும்,அதற்கு முன்னரே பிரான்ஸ் நாட்டில் இந்த முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதாம்.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள், ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

அஜித்,விஜயை பின்னுக்கு தள்ளிய அஷோக் செல்வன்...!



அஷோக் செல்வன் - ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 28 ல் வெளியான தெகிடி திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டது போலவே மெஹா ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக இதன் கதையம்சமும், விமர்சனங்களும் இப்படத்திற்குப் பக்கபலமாக அமைந்து, இந்த வெற்றியைச் சாதகமாக்கியுள்ளது.


இந்த ஆண்டு மெஹா ஸ்டார்களான அஜித்,விஜய் ஆகியோர் நடித்த படங்கள் உள்ளிட்டு மொத்தமாக 30 படங்களுக்கும் மேலாக வெளியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது. இத்தனை வெளியீடுகளிலும் இரண்டே இரண்டு படங்கள்தான் வெற்றிப்படமென அறிவிக்கப்பட்டுள்ளன.


முன்னதாக விஜய் மில்டன் இயக்கத்தில், பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் நடிப்பில் வெளியான கோலிசோடா திரைப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பெருவெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தெகிடியும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.


விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படங்களும் ஹிட் படங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒருதரப்பினர் இவை போலியான தகவல்கள் என்று கூறிவருகின்றனர்.


திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில், நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைப்பில் இப்படம் வெளியானது.

கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகும் படங்கள் - சிறப்புக் கட்டுரை!



இந்த ஆண்டு கோடைவிடுமுறையைச் சிறப்பான முறையில் கொண்டாட மெஹா ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. அவற்றைப் பற்றிய சிறப்புப் பார்வை இதோ...


ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும்
கோச்சடையான் திரைப்படம் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்குவரவிருக்கிறது. சௌந்தர்யா அஸ்வின் இயக்கியிருக்கும் இப்படம்
பர்பாமென்ஸ் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியத் திரைப்படமாகும். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, நடித்து, இயக்கியிருக்கும் விஷ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான விஷ்வரூபம் -2 திரைப்படமும் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாத வெளியீடாக அமையலாம்.


தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றுடன் விஷாலின் நான் சிகப்பு மனிதன், வடிவேலுவின் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன், கவுண்டமணியின் 49-O முதலான படங்கள் இவ்வாண்டு கோடையில் வெளியாகி ரசிகர்களைக் குளிர்விக்கவுள்ளன. இவை தவிர அதிகப் பிரபலமில்லாத திரைப்படங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஜினி, கமல்,விக்ரம்,விஷால்,கவுண்டமணி, வடிவேலு ஆகிய திரைத்துறை ஜாம்பவான்களின் திரைப்படங்கள் இவ்வாண்டு கோடையில் வெளியாகவிருப்பதால் எல்லாத் தரப்பு ரசிகர்களும் கொளுத்தும் கோடையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.