Monday 17 March 2014

மேடை நாகரீகம் தெரியாத சிவகார்த்திகேயன் பேச்சால் முகம் சுளித்த பிரபலம்...!



சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில், திருக்குமரன் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு பலத்த சலசலப்புக்கிடையே இன்று நடைபெற்றது.


விழாவில் இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் பிரபு சாலமன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, சதீஷ், இசையமைப்பாளர் அனிருத், படத்தின் இயக்குனர் திருக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,


‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையது ரொம்ப லக்குதான்.


இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.


எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்த பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.


அப்புறம், இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன். அது ஒரு பெரிய தப்பா.


ஹன்சிகாவுக்கு மேட்ச்சா , இந்த படத்துக்காக என்னை கலரா காட்டறதுக்கு கேமிராமேன் கூட ஃபாரின் போயிட்டு 20 லைட்டுலாம் வாங்கிட்டு வந்தாரு.
மத்த படத்துலலாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டென்ட்தான் இருப்பாங்க.


ஆனால், இந்த படத்துல 10 பேர் கூடவே வருவாங்க. இவர் யாருங்கன்னு கேட்டால், அவர்தான்ங்க உங்க ஹேரை சரி செய்வாரு, இவருன்னு கேட்டால் அவர்தான்ங்க உங்க சட்டை பட்டனை சரி செய்வாருங்க, இவருன்னு கேட்டால் உங்களுக்கு மேக்கப் போட்ட பிறகு துளி ஆயில் கூட வராம டச்சப் பண்ணுவாருன்னு , மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி பார்த்துக்கிட்டாங்க.


ஹன்சிகா கூட நடிக்கிறதுல ஒரே ஒரு வருத்தம்தான், எப்பவுமே இங்கிலீஷ்லயே பேசிக்கிட்டிருப்பாங்க. இந்த படத்தை நம்பி வந்ததுக்கு அவங்களுக்கு நன்றி.


நான், முதல்ல டைரக்டரைப் பார்த்துட்டு கொரியாவுல இருந்து வந்தவரோன்னு நினைச்சேன். அப்புறம், “நான்தாங்க….வாங்க நாம படம் பண்ணிக்கிடுவோம்…”னு மதுரை பாஷைல சொன்னாரு. அவர் பேசறதப் பார்த்தால் எங்க பெரியம்மா பேசுற மாதிரியே இருக்கும்.


“சாப்பிட்டீங்களாடா…வந்து தின்னுட்டுப் போங்கடான்னு…” சொல்ற மாதிரியே இருந்தது. அப்புறம் பார்த்தால் அவர் தேனிப் பக்கத்து ஆளுதான்.
ஆனால், அவர்கிட்ட, “ஃபோட்டோ ஷுட்ல பார்த்துக்குவோம் சார், சரி வரலைன்னா மாத்திக்கிடலாம்னு” நினைச்சேன். ஆனால், ஃபோட்டோ ஷுட்லயே ஒரு மாஜிக் பண்ணிட்டாரு.”


பெரிய பட்ஜெட்டோட செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் பெருசாகும். தியேட்டர்லலாம்  டிக்கட் ரேட் அதிகமாகும் போது, அப்படி கொடுத்து வந்து பார்க்கிறவங்களுக்கு, இந்த படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.
நான் ஆர்ட்டிஸ்டா, ஸ்டாரா, ஹீரோவா அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும் போது என்னைப் பார்த்தால் சந்தோஷப்படணும்.
என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம்.


இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்.


இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியம் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு, இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும் போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்,” என சிவகார்த்திகேயன் பேசினார்.

1 comments:

  1. இவரு பேச்சில் அப்படி என்ன அடாவடித்தனம் தெரிகிறது ,தமிழர் நண்டு கதைதான் ,ஒருத்தன் உயர்தால் மற்றவனுக்கு பிடிக்கவே பிடிக்காது ,தமிழனடா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete