Monday 17 March 2014

இன்றய இயக்குனர்களுடன் என்னால் போட்டிபோட முடியவில்லை - மணிரத்னம்...!



சித்தார்த்-அமலாபால் நடித்த, 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது துல்கர் சல்மான்-நஸ்ரியாவை ஜோடி சேர்த்து ''வாயை மூடி பேசவும்'' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.


தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றபோது டைரக்டர்கள் மணிரத்னம், செல்வராகவன், கேயார் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.


அப்போது மணிரத்னம் பேசும்போது, நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு வேலை செய்து கொண்டிருந்தேன். அதன்பிறகு சினிமாவின் மீது ஈர்க்கப்பட்டு இயக்குனர் ஆனேன்.


அப்போதெல்லாம் சினிமாவில் படித்தவர்கள் அதிகமில்லை. ஆனால், இப்போது நிறைய படித்தவர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு துறைகளில் சாதித்தவர்களும்கூட சினிமா படம் எடுக்க வருகிறார்கள். தயாரிப்பாளராக வருகிறார்கள். இது ரொம்ப சந்தோசமாக உள்ளது.


மேலும், வாயை மூடி பேசவும் படத்தின் டிரைலர் ரொம்ப வித்தியாசமாக உள்ளது. எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகவும் உள்ளது.


டைரக்டர் பாலாஜி மோகன் மீது பொறாமை ஏற்படுகிறது. அதோடு, இங்கே பேசியவர்கள் அவருக்கு கோபமே வராது என்றார்கள். அதனால் அது எப்படி என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது.


இந்த படத்தில் எனது தளபதில் படத்தில் நடித்த மம்மூட்டியின் மகன் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அவரைப்பார்க்கையில் எனக்கு வயதாகி விட்டதை என்னால் உணர முடிகிறது என்றார் மணிரத்னம்.

0 comments:

Post a Comment