Saturday 22 March 2014

’மான் கராத்தே’வுக்கு நாள் குறிச்சாச்சி...!



‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'மான் கராத்தே'.


இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க,


படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரு மடங்காகி உள்ளது.


 ரசிகர்களிடையே இப்போது எழுந்துள்ள கேள்வி படம் எப்போது ரிலீஸ்?


என்பதுதான்!


இந்த கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக இப்படக்குழுவினரும் ரிலீஸ் தேதிதியை அறிவித்திருக்கிறார்கள்!


வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்!


அதற்கு முன்னதாக வருகிற 26-ஆம் தேதி படம் சென்சார் செய்யப்படவிருக்கிறது.


ஆக, ’மான் கராத்தே’வின் ’கவுண்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆனது!

எம்எச்370 விமானம் தேடல்: இரண்டு வாரங்களாக, மலேஷியா ஏர்லைன்ஸ் இருக்கும் இடம்பற்றிய மர்மம் தொடர்கிறது



மீட்பு குழுக்கள், தெற்கு இந்திய பெருங்கடலி ல் காணாமல் போன எம்எச்370 விமானத்தைத் தேடி, செயற்கைக்கோள் இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பைகள் கண்டறியப்பட்டது அங்கு ஒரு பகுதியில் சனிக்கிழமை தங்கள் தேடலைத் தொடங்கியது.

ஆறு விமானம் மற்றும் இரண்டு கப்பல்கள் அந்த பகுதியில் தேடும் போது, ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒரு 24 வரை மீட்டர் (72 அடி) நீளமான பொருட்களை, காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று எச்சரித்தார். அதத் தேடி செல்லும் போது மறைந்துவிட்டது.எனவே அதிகாரிகள் குப்பைகள் மூழ்கிவிட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் 370 முதல் இரண்டு வாரங்களுக்கு போர்டில் இருந்த 239 பேர் காணாமல் போனதாக பிறகும் கூட இந்திய பெருங்கடல் பரந்த பகுதியில் சர்வதேச தேடல் எந்த முடிவையும் எட்டவில்லை.

வெள்ளிக்கிழமை தேடுதலில் வானிலை இது தெற்கு இந்திய பெருங்கடல் சாதகமான உள்ளது என்றும், இப்போது மனித உருவகம் செய்ய சாத்தியம் என்றும் கூறினர்.

எனினும், நேற்று இரவு 7.30 மணிக்கு எபி-3C ஓரியன் தேடல் மற்றும் மீட்பு விமானம் இறங்கிய லெப்டினன்ட் ரஸ்ஸல் ஆடம்ஸ், பத்திரிகையாளரிடம் பேசிய போது, நிலைமைகள் மாறிவிட்டன என்றும் , இன்னும் அவரது போர்க்கப்பலில் எம்எச் 370 அறிகுறிகள் தேடி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்றும் கூறினார்.

6 கோடியில் பிரம்மாண்ட செட் - இது விக்ரமின் ஐ!



தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையிலும் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர்தான். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இருந்து இன்று வரையிலும் அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்துமே பிரம்மாண்டமான காட்சியமைப்புக்களைக் கொண்டவையாகவே இருந்துவருகின்றன.

சியான் விக்ரம், எமிஜேக்சன் நடிப்பில் அவர் இயக்கிவரும் ஐ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி.

அந்த ஒரு பாடல் காட்சியினை தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மஹா பிரம்மாண்டமான பாடல்காட்சியாக உருவாக்கக் கடுமையாக உழைத்துவருகிறது ஐ படக்குழு. பாடல்காட்சியின் பட்ஜெட்டைக் கேட்டு, இளம் இயக்குனர்கள் வாய்பிளந்து நிற்கின்றனர்.

விக்ரம், எமிஜேக்சன் நடனமாடவுள்ள இப்பாடல் காட்சிக்காக சுமார் 6 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுவருவதாகவும், விரைவில்
இப்பாடல்காட்சி படமாக்கப்படும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

தற்போதைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எடுக்கும் மொத்தப் படத்தின் செலவே ஒன்று அல்லது இரண்டு கோடிகளைத் தாண்டாத நிலையில் ஒரு பாடல்காட்சிக்கு மட்டுமே 6 கோடியென்றால் யார்தான் ஆச்சர்யப்படமாட்டார்கள்?

ஐ திரைப்படம் வருகிற மே மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடடே அப்டியா..? : பாஸ்ட்புட் கடைக்காரரின் கதையை திருடிய ‘பப்பாளி’ பட டைரக்டர்!



ஜெயங்கொண்டத்தில் ஹோட்டல் தொழிலில் பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்து திரைப்பட பாடலாசிரியராகும் ஆசையில் குடும்பத்தை பிரிந்து சென்னை வந்து தள்ளுவண்டிக் கடையில் எச்சில் தட்டு கழுவும் வேலை செய்து, பிறகு பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்து, ஒரு நிலையில் முயன்று இப்போது சொந்தமாக சென்னையில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் பாஸ்ட் புட் கடையை சொந்தமாக ஒரு சிறு ஓட்டல் துவங்கி, அதை நிர்வகித்தபடியே தளராத தனது லட்சிய முயற்சிகளின் விளைவாக…. இப்போது வேடப்பன், திருப்புகழ், சோக்குசுந்தரம், இந்திரசேனா, காட்டுமல்லி ஆகிய படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான்.

ஆனால் இவரது வாழ்க்கையை படமாக எடுக்கும் அதே நேரம் இவரால் பலன் பெற்று இவரையே புறக்கணித்து ஏமாற்றி இருக்கிறாராம் “பப்பாளி” என்ற படத்தை இயக்கும் கோவிந்தமூர்த்தி.

நடந்தது என்ன என்பதை ஜெயங்கொண்டானே சொல்கிறார்….

கோவிந்த மூர்த்தி தனது முதல் படமான ‘கருப்பசாமி குத்தகைக்காரர்’ எடுத்து முடித்த சமயத்தில் எனது கடைக்கு வந்து எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு கடைக்கு அடிக்கடி வருவார். சொந்த வீட்டில் சாப்பிடுவது போல சாப்பிட்டு விட்டு போவார். அவர் ஒரு வளரும் இயக்குனர் என்ற நிலையில் அப்போது அதை நான் பெருமையாகவே நினைத்தேன். அவர் தனது அடுத்த படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ ஆரம்பித்த சூழ்நிலையில் நான் பாடலாசிரியர் என்பதை அறிந்து என் படத்தில் உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன். நீங்க நடிக்க கூட செய்யலாம் என்றார். மகிழ்ந்தேன் இரவில் என் கடைக்கு வந்து மணிக்கணக்கில் இருந்துவிட்டு ‘உற்சாகமாக’ கிளம்பிப் போகும் அவருக்கு சிறு செலவும் இருக்காது.

கடையில் அவர் இருக்கும் போது எனக்கு கடன் கொடுத்த பலருடைய அழுத்தங்களுக்கும் நான் ஆளாவேன். அப்போது கூட அவருக்கு ஒரு சிறு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். இந்த நிலையில் ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் அவர் எனக்கு வாய்ப்பு தராதபோதும் அதற்காக நான் வருத்தப்படவில்லை. அவருக்கு பாடலாசிரியர் விஷயத்தில் ஏதாவது நிர்பந்தம் இருக்கலாம். அடுத்த படத்தில் தருவார் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

அடுத்து அவர் கொஞ்சநாள் படம் இல்லாமல் இருந்தபோது, அவருக்கு நான் வழக்கம் போலவே உதவிகள் செய்தேன். இந்த நிலையில் என் குடும்பம் வாழ்க்கை தொழில் பற்றி அடிக்கடி என்னிடம் பேசினார். தள்ளுவண்டி கடை அனுபவங்கள், வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் நான் பட்ட கஷ்டங்கள், மற்ற பிரச்சினைகளை சமாளிப்பது என்று…நான் என் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.

ஒரு நிலையில் அவர் பேசப்பேச, அவர் எனது வாழ்க்கையை அப்படியே கதையாக எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பது புரிந்தது. நானும் அவரும் அதை பலமுறை விவாதிப்போம். நான் பல காட்சிகளாகவும் சொன்னேன். இன்னிக்கு நம்ம நாலு பேருக்கு வணக்கம் வச்சா, நமக்கு நானூறு பேர் வணக்கம் வைப்பாங்க என்பது உட்பட பல வசனங்களையும் சொன்னேன். ஒரு முறை அவர் என்னிடம் நீங்க ஏன் சரவணபவன் முதலாளி மாதிரி ஆவதை லட்சியமாக கொள்ளக்கூடாது. என்று கேட்டார். அதுதான் என் லட்சியம் என்றால் நான் ஊரிலேயே இருந்திருப்பேன். அதை போகிற போக்கில் செய்திருப்பேன்.

படித்து கலெக்டராகவும் ஆகி இருப்பேன். அது மட்டுமல்ல…. ஒரு தள்ளுவண்டிக் கடைக்காரன் கலெக்டர் ஆகா முடியாதா? என்றேன். அன்று அவர் முகத்தில் பூரண திருப்தி. அடுத்த சில நாட்கள் அவர் கடைக்கு வரவில்லை. அவர் புதுப்படம் ஒன்றை ஆரம்பித்து விட்டார் என்று தகவல் மட்டும் வந்தது. அப்பறம் என் கடைக்கு வரவே இல்லை. நான் போன் செய்தபோதும் எடுக்கவே இல்லை. நான் பாடல் எழுதும் திறமையை பலமுறை பாராட்டி இருக்கும் அவரிடம் ஒரே ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பலமுறை அவர் ஆபீசுக்கு நடையாய் நடந்தேன். ஒருமுறை கூட அவர் என்னை சந்திக்கவே இல்லை. பலமணி நேரம் உக்கார வைத்துவிட்டு பார்க்க நேரமில்லை என்று தகவல் சொல்லி அனுப்பி விடுவார். நான் நொந்து போனேன். நான் அவருக்கு செய்த உதவிகளை உடன் அனுபவித்த அவரது உதவியாளர்கள் சிலரே, அவர் என்னை புறக்கணிப்பதை சொல்லி மனசாட்சியோடு மிகவும் வருந்தினார்கள். சரி மனிதர் மாறி விட்டார் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் அண்மையில் ‘பப்பாளி’ படத்தின் கதை என்று அவர் கொடுத்த பேட்டிகளில் ஒரு தள்ளு வண்டி கடைக்காரன் ஐ.ஏ.எஸ். ஆவதுதான் படத்தின் கதை என்று சொல்லி இருக்கிறார். விசாரித்த போது படத்தில் எனது காட்சிகள் நான் சொன்ன வசனங்கள். தொழிலில் எனது மேனரிசம் எல்லாம் இருப்பதாக சொல்கிறார்கள். எனது இந்த 31 வயதுக்குள் எனது வாழ்க்கை படமாவதும் அதில் நான் சொன்ன வசனங்கள் இடம் பெறுவதும் மகிழ்ச்சிதான்.

ஆனால் என்னை வைத்து கதை செய்து இருக்கும் இயக்குனர் கோவிந்த மூர்த்தி அவரே வாக்களித்த படி பாடலாசிரியரான எனக்கு ஒரே ஒரு பாடலாவது கொடுத்து இருக்கலாம். குறைந்த பட்சம் ஒரு முறை சந்தித்து என்னை ஒரு பாட்டு எழுதச்சொல்லி அதன்பிறகு பாட்டு நான் எதிர்பார்க்கும்படி இல்லை என்றாவது சொல்லியிருக்கலாம்.

ஒருவேளை கவிஞர் யுகபாரதிக்கு எல்லாப் பாடல்களையும் தர வேண்டும் என்று அவர் முடிவு செய்து இருந்தால், அவரே முன்பு சொல்லியபடி, என் கதையில் உருவாகும் படத்தில் எனக்கு நடிக்க ஒரு சின்ன கேரக்டராவது தந்திருக்கலாம். அதற்கும் விருப்பமில்லையா..? என்னை ஒரு முறை சந்தித்து எப்படி இருக்கீங்க..? என்று ஒரு வார்த்தையாவது நட்போடு கேட்டிருக்கலாம்.
என்னை முற்றிலுமாக புறக்கணித்தது தான் என்னால் தாங்க முடியவில்லை.

சினிமா என்பது டீம் வொர்க். இங்கே நட்புதான் ஜெயிக்கும் என்கிறார்கள். நான் அவருக்கு கை கொடுத்து எவ்வளவோ உதவியிருக்க, அவர் எனக்கு கைகொடுத்தால் என்ன குறைந்து விடுவார்? ஒருவருக்கு ஒருவர் உதவி இரண்டு பேருமே முன்னேறுவது தப்பா? என்று கலக்கத்தோடு கேட்கிறார் ஜெயங்கொண்டான்.

அஜீத் மற்றும் ரஜினியுடன் மோத முடிவு செய்தது ஏன்? விஷாலின் விறுவிறு பேட்டி



”தீபாவளிக்கு அஜித் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்தோட ‘பாண்டிய நாடு’ படமும் ரிலீஸ் ஆச்சு. இப்போ ‘நான் சிகப்பு மனிதன்’னு ரஜினி பட டைட்டில் வெச்சுக்கிட்டே ‘கோச்சடையான்’ படத்தோட மோதுறீங்களே! இது புது கேம் பிளானா?”

”நான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும்போதே, பட பூஜை போடும் அன்னைக்கே ரிலீஸ் தேதியை அறிவிச்சிடணும்னு உறுதியா இருந்தேன். ‘பாண்டிய நாடு’ தீபாவளி ரிலீஸ்னு நாங்க முடிவு பண்ணபோது, வேற என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும்னு தெரியாது. ‘ஆரம்பம்’ ரிலீஸ் உறுதியானதும், ‘வீம்புக்காகப் படத்தை ரிலீஸ் பண்ணணுமா? ரெண்டு வாரம் கழிச்சு வெளியிடலாமே’னு பலரும் சொன்னாங்க. நல்லதோ, கெட்டதோ, எடுத்த முடிவில் உறுதியா இருப்போம்னு ‘பாண்டிய நாடு’ ரிலீஸ் பண்ணேன். நல்ல பேர்தான் கிடைச்சது. இப்போ ‘நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் இரண்டாவது வாரம் ரிலீஸ்னு முடிவெடுத்திருக்கேன். ஏன்னா, சம்மர் ஹாலிடேஸ் ஆரம்பிக்கிறப்போ நான் நடிச்ச படம் வெளிவர ணும்கிறது, என் ரொம்ப நாள் கனவு!”

”ஏன்… ஏப்ரல் 14-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?”

”அது ஒரு மேஜிக் நாள். ஏன்னா, ஏப்ரல் மாசம் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும். செமத்தியா ஹிட் ஆகும். ‘அயன்’, ‘பையா’, ‘கோ’, ‘ஓ.கே. ஓ.கே.’னு பல படங்கள் ஏப்ரல் மாசம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. அந்த பாசிட்டிவ் வைபரேஷன் என் படத்துக்கும் கிடைக்கணும்!”

” ‘நான் சிகப்பு மனிதன்’ டிரெய்லர்ல தூக்க வியாதியால் அவதிப்படும் கேரக்டர்னு ஆர்வம் உண்டாக்கிறீங்க. பஸ் ஏறி வந்து ரவுடிகளை வெளுக்கும் விஷாலுக்கு பிரேக் கொடுத்துட்டீங்களா?”

” ‘பாண்டிய நாடு’வில் சாதுவா அடக்கி வாசிச்சதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அந்தத் தைரியத்தில்தான் ‘நார்கொலெப்ஸி’ வியாதி பாதிக்கப்பட்டவனா நடிக்கிறேன். இயக்குநர் திருவுக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு நார்கொலெப்ஸி வியாதி இருக்கு. ‘அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவங்க, ரொம்பக் கோபம் வந்தா தூங்கிடுவாங்க’னு திரு சொன்னார். ஆனா, அந்த கேரக்டருக்கு எந்த ரெஃபெரன்ஸும் இல்லை. யூ-டியூப்ல நார்கொலெப்ஸி பாதிக்கப்பட்டவங்க வீடியோ பார்த்துதான், ஹோம்வொர்க் பண்ணேன். அந்த வியாதி காரணமா எனக்கு யாரும் வேலை தர மாட்டாங்க. ஆன்லைன்ல வேலை பார்ப்பேன். அந்த வியாதி பாதிக்கப்பட்டவன் அடிச்சா எப்படி இருக்கும்னு உங்களை யோசிக்க வெக்கிற திரைக்கதை. ரொம்பப் புதுசா இருக்கும் படம்!”

”உங்ககூட நடிக்கிறதுனா லட்சுமி மேனன் கிளாமரா நடிக்கிறாங்க, பாலா படத்துல வரலட்சுமி நடிக்க நீங்க சிபாரிசு பண்றீங்க, ஸ்ருதிக்குக் கதை சொல்லப்போறீங்கனு… பல ஹீரோயின்களோட உங்களைச் சம்பந்தப்படுத்தி செய்தி வந்துட்டே இருக்கே!”

”ஓ… லட்சுமி மேனன்கூட தண்ணிக்கு அடியில் இருக்கிற மாதிரி ஸ்டில் பார்த்துக் கேக்கிறீங்களா? அந்த கேரக்டர்ல சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. நிச்சயம் பரபரப்புக்காகவோ, கிளாமருக்காகவோ அந்த சீன் வெக்கலை. படம் பார்க்கும்போது அது எவ்வளவு அவசியம்னு உங்களுக்குப் புரியும்.

பாலா சார் படத்தில் யாராச்சும் சிபாரிசு பண்ணா, நடிச்சுட முடியுமா என்ன? ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்துதான் வரூவை ஓ.கே. பண்ணாங்க. பாலா சாரின் எல்லாப் படங்களிலும் நான் ஹீரோவா நடிக்கணும். அது மட்டும்தான் என் ஆசை.

ஒரு வழியா முடிவுக்கு வந்த பிரசன்னாவால் நொந்த சினேகா...!



இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று கணவர் பிரசன்னா திடீர் ரெட்கார்டு போட்டதால் நடிகை சினேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் அவர்களது கணவர்கள் விரும்புவதில்லை. ஒரு சில நடிகைகள் தான் இதில் விதிவிலக்கு. மற்றபடி நடிகைகளுக்கு அவர்களது கணவர்கள் ‘ரெட்கார்டு’ போட்டு விடுவார்கள். அதிலும் சில நடிகைகளை அவரது கணவன்மார்கள் ஹீரோயினாக நடிக்க விடுவதில்லை. மாறாக அக்கா, அண்ணி, அம்மா போண்ற கேரக்டர்களுக்கு மட்டுமே பெர்மிஷன் கொடுப்பார்கள்.

நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்த நடிகர் பிரசன்னாவும் இப்போது சினேகாவின் நடிப்பாசைக்கு திடீர் தடை போட்டிருக்கிறாராம். ஏற்கனவே ஜவுளிக்கடை திறப்பு, நகைக்கடை திறப்பு, ரியல் எஸ்டேட் என எல்லாத் திறப்பு விழாக்களுக்கும் போய் பணம் சம்பாதிக்கிறார் சினேகா. கூடவே தேடி வருகிற விளம்பரப்படங்களையும் விட்டு வைப்பதில்லை. எந்த பப்ளிசிட்டியாக இருந்தாலும் கூடவே பிரசன்னாவையும் துணைக்கு அழைத்துச் செல்லும் அவர் பிரசன்னாவுக்கும் சேர்த்து தான் வசூல் செய்கிறார்.

இதற்கிடையே சினேகா தற்போது பிரகாஷ்ராஜ் தயாரித்து வரும் ‘உன் சமையலறையில்’ உட்பட ஒரு தெலுங்கு, ஒரு கன்னடப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரின் இந்த ஹீரோயின் தரிசனத்துக்குத்தான் திடீர் தடை போட்டிருக்கிறார் பிரசன்னா. ஆனால் சினேகாவோ என்னால் நடிக்காமல் இருக்க முடியாது என்று பிரசன்னாவின் பேச்சை மீறி அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார்.

அப்புறமென்ன, ”நான் எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா” என்பது தான் பிரசன்னாவின் ஒரே புலம்பலாக இருக்கிறதாம்

பிரச்னைகளால் நின்று போன பிரபல நடிகர்களின் படங்கள்



தமிழில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களின் பட ஷூட்டிங் சில நாட்கள் நடக்கும். பிறகு பல காரணங்களால் நின்றுவிடும். ஓரிரு படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை நெருங்குவதற்கு முன்பே கைவிடப்படும். அப்படி நாம் கேள்விப்பட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே.


ரஜினியின் ராணா, கமல்ஹாசனின் மருதநாயகம், மர்மயோகி, கார்த்திக் நடித்த மனதில், அத்தை மகன், லிவிங்ஸ்டன் நடித்த லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், பிரபு நடித்த ஆயிரம் பொய் சொல்லி, சத்யராஜ் நடித்த திருநாள், பேட்டை முதல் கோட்டை வரை, குலசேகரனும் கூலிப்படையும், உதயா நடித்த டில்லி, பூங்குயிலே, காதல் சாதி போன்ற படங்களில் ஓரிரு படங்களின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து விட்டது.


ஆதி, ராஜ்கிரண் நடித்த சரித்திரம், சிம்பு நடித்த கெட்டவன், தனுஷ் நடித்த டாக்டர்ஸ், விக்ரம் நடித்த சிந்துபாத், கரிகாலன், சூர்யா நடித்த சென்னையில் ஒரு மழைக்காலம், பிரபுதேவா நடித்த களவாடிய பொழுதுகள், மயூர் நடித்த சத்தமின்றி முத்தமிடு, பலே, சரத்குமார் நடித்த புகழ், விடியல், பிரசாந்த் நடித்த விண்ணோடும் முகிலோடும், என்ன விலை அழகே, பிரகாஷ்ராஜ் நடித்த பிறந்த நாள், நெப்போலியன் நடித்த பரணி, விவேக் ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன், ஜெய் நடித்த அர்ஜுனன் காதலி, வெங்கட் பிரபு மற்றும் சங்கீதா அறிமுகமான பூஞ்சோலை, விஜய் சேதுபதி நடித்த சங்குதேவன், ரம்பா நடித்த விடியும் வரை காத்திரு போன்ற படங்களில், ஓரிரு படங்களின் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு நிறுத்தப்பட்டன.


சில படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில், தவிர்க்க முடியாத பிரச்னை காரணமாக முடக்கப்பட்டுள்ளன. விஷால் நடித்த மதகஜராஜா படத்துக்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளன. ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. 

லேகியம் விற்பனை செய்ய தயாராகிறார் பரத்!



சில சேனல்களை ஓப்பன் பண்ணினால் சித்த வைத்தியர்களின் ஆக்ரமிப்புதான் அதிகமாக உள்ளது. பாட்டி வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்று சொல்லிக்கொண்டு மூலிகை மருந்துகளை விற்பனை செய்கிறார்கள்.


அதிலும் சிலர் செக்ஸ் சம்பந்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்காக செய்யும் பிரசாரங்களை சமீபகாலமாக சில படங்களில் காமெடியாகவும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.


அந்த வகையில், சமீபத்தில் வெளியாகிய நவீன சரஸ்வதி சபதம் படத்தில் பரம்பரை சித்த வைத்தியராகத்தான் நடித்திருந்தார் ஜெய். அவரைத் தொடர்ந்து இப்போது பரத்தும் ஒரு படத்தில் பரம்பரை சித்த வைத்தியராக நடிக்கிறார்.


சசி இயக்கிய 555 படத்திற்கு பிறகு தமிழில் பரத் நடிக்கும் அப்படத்துக்கு ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


முந்தைய படங்களுக்காக தனது உடல்கட்டை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றிய பரத், இப்படத்திற்காக சேனல்களில் தோன்றும் சித்த வைத்தியர்களைப்போன்று தனது பாடிலாங்குவேஜை மாற்றி வருபவர்,


அவர்கள் நோய்களைப் பற்றி எப்படி எப்படி கமெண்ட் கொடுக்கிறார்கள் என்பதையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்.


ஆக, ஜெய்யைத் தொடர்ந்து பரத்தும் லேகியம் விற்பனை செய்ய தயாராகி விட்டார்.

கமல் படத்தில் ரஜினி நடிக்கிறாராமே!



ஆரம்ப காலங்களில் கமல் நாயகனாக நடித்த படங்களில்தான் ரஜினி நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவான பிறகுதான் தனித்துவமாக நடிக்கத் தொடங்கினார்.


இதற்கு கமலும் ஒரு முக்கிய காரணம். நாம் இருவரும் இணைந்து நடிப்பதால் ஒரு சம்பளத்தைதான் இருவருக்குமே பிரித்து தருகிறார்கள்.


அதுவே தனித்தனியாக நடித்தால் இருவருக்கும் தனி சம்பளம் கிடைக்கும் என்று அப்போது ரஜினிக்கு ஐடியா கொடுத்தார்.


அதையடுத்து இருவருமே அதை பின்பற்றி தங்களுக்கென ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனால், பின்னர் எந்தவொரு படத்திலும் ரஜினி-கமல் இருவரும இணையவே இல்லை.


அப்படி இணைந்தால் அந்த படங்களின் பட்ஜெட் 100 முதல் 150 கோடி ஆகும் என்பதால் எந்த படாதிபதியும் ரிஸ்க் எடுக்க துணியவில்லை.


இந்த நிலையில், தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தோன்றுவதாக கூறப்படுகிறது.


அதாவது 21ம் நூற்றாண்டை சேர்ந்தவராக கமல் நடிக்கும் காட்சிகளில் அவரை நடிகனாக உருவாக்கும் வேடத்தில் அவரது குருநாதரான கே.பாலசந்தரே நடிக்கிறார்.


 கமலை அவர் உருவாக்கிய காலத்தில் ரஜினியும் நடித்தவர் என்பதால், ஒரு வீடியோ கான்பரன்சிங் காட்சியில் ரஜினியும் தோன்றுகிறாராம்.

இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ரஜினி ஓ.கே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

சர்ச்சையிலிருந்து மீண்ட சீனு ராமசாமி துவக்கினார் வேலையை...!



திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் ‘இடம் பொருள் ஏவல்’


படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இப்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்தப் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் முடிவடையுமாம்!


இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவிருக்கிறது.


 இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க,


 அவருக்கு ஜோடியாக நந்திதா நடித்து வருகிறார்.


பாடல்களை கவியரசு வைரமுத்து எழுத, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.


’நீர்ப்பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம்,


சீனுராமியும், விஜய் சேதுபதியும் இணையும் முதல் படம்,


யுவன் – வைரமுத்து இணையும் படம் என பல ஸ்பெஷல்கள் உள்ள இப்படத்தின் மீது


இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

அம்பூட்டு நல்லவனாய்யா நீ...... வியக்க வைத்த நடிகர்!



சமீப நாட்களாக திரைத்துறையிலும் சமூகவலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்(விமர்சிக்கப்பட்டவர்) சிவகார்த்திகேயன். தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ‘மான் கராத்தே திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.


அப்போது ‘உங்களது ஒவ்வொரு படத்திலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றதே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய சிவகார்த்திகேயன் “சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் கதைக்கு தேவைப்படுவதால் என் படங்களில் இருக்கிறதே தவிர, 


என் சொந்ஹ முயற்சியால் புகுத்தப்பட்டவை அல்ல. அப்படி இருந்தும் பெரும்பாலும் சிகரெட் பிடிப்பதை நான் படங்களில் தவிர்த்து விடுவேன். படத்திற்காகத்தான் நான் புகைப் பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை செய்கிறேன். 


சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது.(சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது)” என்று கூறினார்.

 மேலும் அவர் அடுத்ததாக நடிக்கும் இரு படங்களின் கதாபாத்திரங்களின் தனிச்சிறப்பே குடிக்காதவன், புகை பிடிக்காதவன் என்பது தானாம். ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை குடித்ததுமில்லை,


 சிகரெட் பிடித்ததுமில்லை என்று கூறியதைக் கேட்ட அனைவரும் அம்பூட்டு நல்லவனாய்யா நீ.... என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை படங்களில் மட்டும் இதுபோன்ற காட்சிகளை தவிர்த்தால் போதும் என்கிறது ரசிகர்களையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் திரையுலகம்.

லிங்குசாமிக்கு வந்த ரூ.200 கோடி மர்ம பணம்...!திடுக்கிடும் பின்ன்னி...!



ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், சூர்யாவின் அஞ்சான், மற்றும் விஜய் சேதுபதி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறார் லிங்குசாமி. ஒரு நேரத்தில் ஒரு படம் தயாரிப்பதே ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய விஷயம்.

அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்கும் முன்னர் கடுமையாக நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். ஆனால் ஒரே தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கின்றார் என்பதே இப்போதைய கோலிவுட்டின் உச்சபட்ச டாக்.

இதுகுறித்து கோலிவுட்டில் பலவித கிசுகிசுக்கள் கசிந்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி லிங்குசாமிக்கு சுமார் 200 கோடி ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை வைத்துதான் லிங்குசாமி இத்தனை படங்களையும் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு தரப்பினரோ மதுரை அன்புவிடம் மொத்தமாக 50 கோடிக்கும் மேல் லிங்குசாமி கடன் வாங்கி ஒவ்வொரு மாதமும் கரெக்டாக வட்டி கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்த இரண்டு கிசுகிசுக்களும் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அஞ்சானை காப்பி அடித்த பென்சில் ...!



லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் படம், ‘அஞ்சான்’.


 இந்தப் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


 பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’


என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன்!


உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’


 என்பது குறிப்பிடத்தக்கது!


 ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும்


‘பென்சில்’ படத்திலும் இந்த கேமராவை பயன்படுத்துகிறார்கள்!


முதலில் வேறு கேமராவை பயன்படுத்தி ‘பென்சில்’


படத்தின் படப்பிடிப்பை துவங்கிய படக்குழுவினர் இப்போது


 ‘ரெட் டிராகன்’ கேமராவை வைத்து பென்சிலை படம் பிடித்து வருகிறார்கள்! 

யாசகன் - திரைவிமர்சனம்...! [‘யாசகன்’ - வித்தியாசமானவன் ]



நடிகர் : மகேஷ்

நடிகை : நிரஞ்சனா

இயக்குனர் : துரைவாணன்

இசை : சதீஷ் சக்ரவர்த்தி

ஓளிப்பதிவு : பாபு

மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தை, சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ். இவர் தந்தை சொல்லை தட்டாத பிள்ளை. தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் கொண்டவர். யாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் உடனே சென்று உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்.

மகேஷ் ஒரு நாள் வேலை தேடி ஒரு கம்பெனிக்கு செல்கிறார். அங்கு புதியதாக திருமணம் ஆன மகேஷின் நண்பரும் வேலை தேடி வருகிறார். மகேஷ் வேலையை விட்டுக் கொடுத்தால் தான் நண்பருக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இந்த மாதிரி பல தியாகங்களை செய்து வருகிறார் மகேஷ்.

இதற்கிடையில் மகேஷ் அப்பாவின் குடும்ப நண்பரின் மகளான நாயகி நிரஞ்சனா, மகேஷையே சுற்றி சுற்றி வருகிறார். முதலில் கண்டுக்கொள்ளாத மகேஷ், பிறகு நிரஞ்சனா காதலை சொன்னவுடன் ஏற்றுக் கொள்கிறார்.

ஒருநாள் மகேஷின் வீட்டு அருகில் இருக்கும் ஒரு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதைக் கண்ட மகேஷ் அவர்களை பின் தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்கிறார்கள். நிறைய பணம் தேவை என்பதால் மனம் வருந்துகிறார் சிறுமியின் தாயார். இவருக்கு ஆறுதல் கூறிவிட்டு பணத்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லுகிறார் மகேஷ்.

சிறுமியை காப்பாற்றுவதற்காக தன் சகோதரியான ஜானவியிடம் பணம் கேட்கிறார். அதற்கு ஜானவி பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். பிறகு தான் உதவி செய்த அனைவரிடமும் சென்று பணம் கேட்கிறார். ஆனால் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. இறுதியாக ஏற்கனவே தான் உதவி செய்த ஒருவரிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்கிறார். அவரும் பணம் தர மறுக்க  மனமுடைந்து அங்கிருந்து செல்கிறார். மகேஷ் பணத்தை கேட்டவரிடம் இருந்த பணம் திடீரென காணாமல் போக, இதற்கு காரணம் மகேஷ் தான் என்று போலீசில் புகார் செய்கிறார் அவர். இதனால் போலீஸ் மகேஷை கைது செய்கிறது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் மகேஷ் வெளியே வருகிறார்.

வெளியில் வரும் மகேஷ், சிறுமி வீட்டிற்குச் சென்று பார்த்தால் சிறுமி இறந்து விடுகிறாள். இதனால் மனமுடைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார் மகேஷ். இதற்கிடையில் நிரஞ்சனாவின் அப்பாவிற்கு பணி இடம் மாற்றம் ஆகி வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்.

மகேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் குடும்பத்தினர் வெறுக்கின்றனர். இறுதியில் மகேசின் மனநிலை சரியானதா? காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

‘அங்காடித் தெரு’ வில் நடித்த மகேஷ், அந்தப் படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான். ஆனால், அது வலுவாக இல்லை என்றே சொல்லலாம். படம் முழுக்க சோர்வாகவே வருகிறார். கேரளத்து வரவான நாயகி நிரஞ்சனா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷின் அக்காவாக வரும் ஜானவி, நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் 2 பாடல்கள் அருமை. பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.

மதுரையில் நடத்த உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ள துரைவாணன், கதாபாத்திர தேர்விலும், கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால் காட்சிகளை ஒருங்கினைப்பில் சற்று தடுமாறியிருக்கிறார். திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘யாசகன்’ - வித்தியாசமானவன். 

’வழக்கு எண் 18/9’ பட்டறையிலிருந்து இன்னொரு படம்!



பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களில் உதவியளராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கும் படம் ’13’. இந்தப் படத்தில் மனோஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷீரா என்ற புதுமுகம் நடிக்கிறார்.


ஷீராவின் பெண் குழந்தைகளாக சதன்யா, ஸ்ரீவர்ஷினி ஆகிய இரு குழந்தைகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக டி.செந்தில், ‘ஆர்.கே.என்டர்டெய்னர்ஸ்’ சார்பாக ஆர்.கே.யோகேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.


பாலாஜி சக்திவேலின் சினிமா பட்டறையிலிருந்து வெளியே வந்து படம் இயக்கும் முதல் மாணவராம் சுரேஷ்! ‘‘ பொதுவாக ‘13’ ன்னாலே அதிர்ஷ்டம் இல்லாத நம்பர்னு சொல்லுவாங்க.


ஆனா இந்த கதையோட திருப்பமே 13-ங்கிற தேதியில நடக்கிற ஒரு மகிழ்ச்சியான, லக்கியான விஷயத்திலிருநந்து ஆரம்பிக்கிற மாதிரி இருக்கிறதால படத்திற்கு ‘13’ன்னு டைட்டில் வைத்திருக்கோம்’’ என்கிறார் இயக்குனர் சுரேஷ்!


இந்தப் படத்திற்கு ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, பவன் இசை அமைக்கிறார். எடிட்டிங்கை பகத்சிங் கவனிக்கிறார்.

மகா கஞ்சனாக மாறிய கஞ்சா கருப்பு



தாமரை மூவீஸ் வழங்க சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காந்தர்வன்”

இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, காதல்தண்டபாணி, நெல்லைசிவா,சபாபதி,ஆண்டமுத்து, வெள்ளைசுப்பையா, செல்லத்துரை,கிரேன் மனோகர், கோவைசெந்தில்குமார், ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அனில் கே.சேகர் ,

இசை – அலெக்ஸ்பால்

எடிட்டிங் – எஸ்.எம்.வி.சுப்பு

பாடல்கள் – கவிஞர் வாலி, விவேகா, முத்துவிஜயன், கவின்சம்பத்

கலை – எம்.ஏ.ராமதுரை , நடனம் – தினா.

ஸ்டன்ட் – தீப்பொறி நித்யா

தயாரிப்பு நிர்வாகம் – நாகராஜன்

கதை,திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சலங்கைதுரை . இவர் கரண் – வடிவேலு நடித்த காத்தவராயன் வெற்றிப் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்:

இந்த படத்திற்காக சமீபத்தில் கதிர் – ஹனிரோஸ் பங்கேற்ற “நெருப்பாய் நெருப்பாய் தெரியுது நிழலே ” என்ற பாடல் காட்சி சென்னையில் படமாக்கப் பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் துவங்கி பாண்டிச்சேரி வரை நடைபெற்றது.

காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். கஞ்சாகருப்பு இந்த படத்தில் படு கஞ்சனாக நடித்திருக்கிறார். இந்தப் பட ரிலீஸுக்கு பிறகு கஞ்சாகருப்புவை கஞ்ச கருப்பு என்று அழைப்பார்கள் அந்த அளவிற்கு படத்தில் அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது.

அதே மாதிரி கதிர் நிச்சயம் பெரிய அளவிற்கு வரக்கூடிய நடிகராக காந்தர்வர் மூலம் மாறுவார் என்று கூறினார் இயகுனர்.