ஸ்பெயின் நாட்டுக்குள் திருட்டுத்தனமாக செல்ல முயலும் ஆட்கள் எல்லை காவல்படை மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. 60 சதவீதமானவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்,
40 சதவீதமானவர்கள் தப்பி உள்ளே சென்றுவிடுகிறார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.
தற்போது மொரக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் எல்லை வழியாக செல்ல முயன்ற ஒருவரை எல்லை காவல்படையினர் பிடித்திருக்கின்றனர். இவர் எப்படி செல்ல முயன்றார் என்பதுதான், காவல்படையினரை அதிர வைத்திருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் பெனி-என்ஸார் எல்லையில், ரெனால்டு-7 கார் கார் ஒன்று வந்தது. அதில் இரு மொராக்கோ நாட்டவர் இருந்தனர். இருவரிடமும் ஒழுங்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் இருந்தன. காருக்குள் வேறு யாரும் இல்லை. அத்துடன் போக விட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஏதோ சந்தேகம் ஏற்பட்டதில், காரை சோதனை போட்டதில், மூன்றாவது நபர் ஒருவர், காருக்குள் அதிர வைக்கும் மறைவிடம் ஒன்றில் இருந்தது தெரிந்தது.
‘அதிர வைக்கும் மறைவிடம்’ எது தெரியுமா? காரின் சீட்!
ஆம். முன் சீட்டுக்கு உள்ளே (சீட்டுக்கு அடியே அல்ல) ஒரு நபர் இருந்தார்.
முன் சீட்டுக்குள் உள்ள குஷன்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு, அதன் ஃபிரேமுக்குள் ஒரு நபரை அமர வைத்து, அதற்குமேல் சீட்டில் மேல் பகுதியை பொருத்தியிருந்தார்கள். சந்தேகம் ஏற்படாமல், அந்த சீட்டில் ஒரு நபர் அமர்ந்து பயணம் செய்திருந்தார்!
கீழேயுள்ள போட்டோவில், சீட்டுக்குள் உள்ள குஷன்கள் அனைத்தையும் எடுத்துவிட்ட, நிலையில் அதன் ஃபிரேம் மட்டும் இருப்பதை பாருங்கள். இதற்குள் ஒரு நபர் எப்படி மறைந்திருந்தார் என்பதை அடுத்த போட்டோவில் பாருங்கள்.
எல்லைக்காவல் அதிகாரிகள் இந்த நபர் சீட் பிரேமுக்கு வெளியே வருவதற்கு உதவி செய்தபின் அவரை கைது செய்தனர். இவரை காரில் மறைத்து வைத்து அழைத்து வந்த இரு மொராக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவரை பிடித்த அதிகாரி, “யாராலும் ஊகிக்க முடியாக மறைவிடத்தில் இருந்து பயணம் செய்திருக்கிறார். ஆனால், அவரது துரதிஷ்டம் எனக்கு சந்தேகம் ஏற்பட்டபோது சீட்டை அமுக்கி பார்த்தேன்.
அப்போதுகூட சீட்டுக்குள் கடத்தல் பொருட்கள் ஏதாவது மறைத்து வைத்திருக்கலாம் என்றுதான் சந்தேகித்தேன். உள்ளே முழுசாக ஒரு ஆள் இருப்பார் என கனவிலும் எண்ணவில்லை” என்றார்.
0 comments:
Post a Comment