Tuesday, 11 March 2014

விரைவில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...!



ஒவ்வொரு முறையும் ரஜினி சார்பாக நான் தான் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறேன், அதனால் விரைவில் ரஜினி தனது ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று வேண்டிகோள் வைத்தார் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்.

நேற்று நடந்த கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் டைரக்டர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ரஜினி தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து மாநில மாநாடு போல் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கேட்டுக் கொண்டார்.

“ரஜினிகூட நான் 25 படம் வேலை செஞ்சிருக்கேன்.. அப்பவும் போலத்தான் இப்பவும் இருக்கிறார்.. அவருக்கு லைட் பாயும் ஒண்ணும் தான், நானு ஒண்ணு தான். டைரக்டர் ஷங்கரும் ஒண்ணு தான். அல்லோர்கிட்டேயும் ஒரே மாதிரி பாசத்தோடு தான் பழகுவார். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை பார்ப்பதே அபூர்வம்.

ரஜினி என் படத்துல நடிக்கும் போதுதான் லவ் பண்ணினார்.. என் படத்துல நடிக்கும் போது தான் கல்யாணம் செஞ்சார். என் படத்துல நடிக்கும் போது தான் புள்ளை பெத்துக்கிட்டார்… அவருடைய மனைவி லதாவை விட அதிகமா நான் தான் அவர் கூட இருந்திருக்கேன்.. நானும், அவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறோம்.

ரஜினிய அவருடைய ரசிகர்கள் பல காலமாக பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு முன்னர் பல ரசிகர் மன்ற கூட்டங்களுக்கு ரஜினி என்னையே அவர் சார்பாக பேசி விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைப்பார். நானும் போய் ரஜினி சார்பாக பேசிவிட்டு வருவேன். ஆனால் ஒவ்வொரு முறை போகும் போதும் என்னசார் நீங்க மட்டும் தான் வர்றீங்க. ஒரு தடவையாவது தலைவரை கூட்டிட்டு வாங்க… என்று செல்லமாக கோபித்துக் கொள்வார்கள்.

அதனால் இந்த மேடையில் ரஜினிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ப்ளீஸ் நீங்க சீக்கிரம் உங்க ரசிகர்களை நேரில் சந்திக்க வேண்டும். அதற்கு இந்த ‘கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவை ரஜினி தனது ரசிகர்களை ஒரு மாபெரும் ரசிகர் மன்ற மாநாடாக நடத்த வேண்டும் என்று அவரை கேட்டுக் கொள்கிறேன்..” என்று பேசினார்.

அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ரஜினி கோச்சடையான் வெற்றி விழாவை ரசிகர்கள் மாநாடாக நடத்துவேன், அதில் எனது ரசிகர்களை நேரில் சந்திப்பேன் என்றார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment