Tuesday, 11 March 2014

வாழைப்பழ தேங்காய் பிரட் - அதிரடி ரெசிப்பி..!



 குழந்தைகளுக்கு பிரட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பிரட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை வேளையில் குழந்தைகளுக்கு தோசை, இட்லி போன்றவை சாப்பிட்டு போர் அடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு வாழைப்பழத்தையும், தேங்காய் துருவலையும் வைத்து, ஒரு அருமையான சுவையில் பிரட் செய்யலாம்.


இந்த பிரட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ தேங்காய் பிரட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

எண்ணெய் - 1/2 கப்

முட்டை - 3

தயிர் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வாழைப்பழம் - 2 (மசித்தது)

தேங்காய் துருவல் - 1/2 கப் (வறுத்தது)

தேங்காய் துருவல் - 1/2 கப்

வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் செய்முறை:


செய்முறை:

முதலில் மைக்ரோவேவ் ஓவனை 350 டிகிரியில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பின் பிரட் பேனை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பௌலில் சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ், எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு ஸ்பூனை வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் வறுத்த தேங்காய் துருவலை, முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதே கலவையில் மாவை மெதுவாக போட்டு கிளறி விட்டு, அதனை பிரட் பேனில் ஊற்றி, பின் அதன்மேல் தேங்காய் துருவலை தூவி, பிறகு ஒரு அலுமினிய பேப்பரினால் அதனை சுற்றி, ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கும் போது, அதனை ஒரு கத்தியினால் வெட்டும் போது, கத்தியில் மாவானது ஒட்டிக் கொண்டால், மீண்டும் அதனை 30 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது பிரட்டானது ரெடியாகியிருக்கும். அதனை குளிர வைத்து பரிமாறலாம்.

குறிப்பு:

இந்த பிரட்டை சரியாக பராமரித்து வந்தால், 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும். 

0 comments:

Post a Comment