Saturday 15 March 2014

முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் இவர் தான்...!



முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் சாமிக்கண்ணு வின்செண்ட்.

திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய சாமிக்கண் மீது அவரது வெள்ளைக்கார அதிகாரிக்கு அளவு கடந்த பாசம்.

 அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து ஒரு சினிமா புரொஜக்டரையும் சில பிலிம் சுருளையும் கொண்டு வந்தார். பின்னர் அவர் ரிட்டையர்டாகி செல்லும்போது அதனை சாமிக்கண்ணு வின்செண்டிடம் விற்று விட்டுச் சென்றுவிட்டார்.

அதன் பிறகு சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து மேலும் சில படச் சுருள்களை வரவழைத்து அந்த புரொஜெக்டரை வைத்து ஊர் ஊராக சென்று படம் காட்ட ஆரம்பித்தார்.
1914ம் ஆண்டு கோவையில் வெரைட்டி ஹால் என்ற திரையரங்கை கட்டி அதில் நிரந்தரமாக சினிமா காட்ட ஆரம்பித்தார்.

ஆக தமிழ் சினிமா திரையரங்குகளின் தந்தை அவர்தான். அவரது பிறந்த நாளை திரையரங்கு தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கான முயற்சியை ஒன்பது குழி சம்பத் என்ற படத்தை தயாரிக்கும் குழு தொடங்கியிருக்கிறது.

வருகிற ஏப்ரல் 18ந் தேதி சாமிக்கண்ணு வின்செண்டின் பிறந்த நாள். அன்றைய நாளை தியேட்டர் தினமாக அறிவித்து கொண்டாட இருக்கிறார்கள். இதில் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment