Saturday 15 March 2014

அப்பாவுக்கு கொடுத்த வரவேற்பை எனக்கும் கொடுங்கள்! - கேட்கிறார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான்..



தமிழில் 1990ல் மெளனம் சம்மதம் என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் மம்மூட்டி. அதன்பிறகு கே.பாலசந்தர் இயக்கிய அழகன், மணிரத்னம் இயக்கிய


 தளபதி, லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் என சுமார் 15 படங்களில் நடித்தார். ஆக, செண்டிமென்ட், காதல், ஆக்சன் என பலதரப்பட்ட கதைகளில் நடித்த மம்மூட்டிக்கு மலையாளத்தைப்போலவே தமிழிலும் ஒரு நல்ல இடம் இருந்து கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், தற்போது அவரது மகன் துல்கர் சல்மானும் 2012ல் செகண்ட் ஷோ என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார்.


இதையடுத்து, வாயை மூடி பேசவும் என்ற படம் மூலம் தமிழுக்கும் என்ட்ரி கொடுக்கிறார் துல்கர்சல்மான். சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியா நாயகியாக நடித்துள்ளார்.


தமிழுக்கு தான் என்ட்ரி ஆவது குறித்து துல்கர்சல்மான் கூறுகையில், என் அப்பாவுக்கு மலையாள ரசிகர்கள் மத்தியில் இருப்பது போன்று தமிழ் ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.


அதனால்தான் அங்கு பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதும், தமிழிலும் அவர் நடித்தார். அதனால், என் அப்பாவைப்போன்று என்னையும் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படம் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறேன் என்று சொல்லும் துல்கர்சல்மான், நான் மலையாளியாக இருந்தபோதும் சின்ன வயதில் சென்னையில்தான் இருந்தேன்.


அந்த வகையில் நன்றாக தமிழ் பேசும் சென்னை பையன்தான் நான். மேலும், இனி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன். அதனால், என் தந்தை மம்மூட்டிக்கு ஆதரவு கொடுத்தது போன்று தமிழக ரசிகர்கள் எனக்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.

0 comments:

Post a Comment