Monday, 17 March 2014

மேடை நாகரீகம் தெரியாத சிவகார்த்திகேயன் பேச்சால் முகம் சுளித்த பிரபலம்...!



சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில், திருக்குமரன் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு பலத்த சலசலப்புக்கிடையே இன்று நடைபெற்றது.


விழாவில் இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் பிரபு சாலமன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, சதீஷ், இசையமைப்பாளர் அனிருத், படத்தின் இயக்குனர் திருக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,


‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையது ரொம்ப லக்குதான்.


இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.


எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்த பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.


அப்புறம், இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன். அது ஒரு பெரிய தப்பா.


ஹன்சிகாவுக்கு மேட்ச்சா , இந்த படத்துக்காக என்னை கலரா காட்டறதுக்கு கேமிராமேன் கூட ஃபாரின் போயிட்டு 20 லைட்டுலாம் வாங்கிட்டு வந்தாரு.
மத்த படத்துலலாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டென்ட்தான் இருப்பாங்க.


ஆனால், இந்த படத்துல 10 பேர் கூடவே வருவாங்க. இவர் யாருங்கன்னு கேட்டால், அவர்தான்ங்க உங்க ஹேரை சரி செய்வாரு, இவருன்னு கேட்டால் அவர்தான்ங்க உங்க சட்டை பட்டனை சரி செய்வாருங்க, இவருன்னு கேட்டால் உங்களுக்கு மேக்கப் போட்ட பிறகு துளி ஆயில் கூட வராம டச்சப் பண்ணுவாருன்னு , மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி பார்த்துக்கிட்டாங்க.


ஹன்சிகா கூட நடிக்கிறதுல ஒரே ஒரு வருத்தம்தான், எப்பவுமே இங்கிலீஷ்லயே பேசிக்கிட்டிருப்பாங்க. இந்த படத்தை நம்பி வந்ததுக்கு அவங்களுக்கு நன்றி.


நான், முதல்ல டைரக்டரைப் பார்த்துட்டு கொரியாவுல இருந்து வந்தவரோன்னு நினைச்சேன். அப்புறம், “நான்தாங்க….வாங்க நாம படம் பண்ணிக்கிடுவோம்…”னு மதுரை பாஷைல சொன்னாரு. அவர் பேசறதப் பார்த்தால் எங்க பெரியம்மா பேசுற மாதிரியே இருக்கும்.


“சாப்பிட்டீங்களாடா…வந்து தின்னுட்டுப் போங்கடான்னு…” சொல்ற மாதிரியே இருந்தது. அப்புறம் பார்த்தால் அவர் தேனிப் பக்கத்து ஆளுதான்.
ஆனால், அவர்கிட்ட, “ஃபோட்டோ ஷுட்ல பார்த்துக்குவோம் சார், சரி வரலைன்னா மாத்திக்கிடலாம்னு” நினைச்சேன். ஆனால், ஃபோட்டோ ஷுட்லயே ஒரு மாஜிக் பண்ணிட்டாரு.”


பெரிய பட்ஜெட்டோட செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் பெருசாகும். தியேட்டர்லலாம்  டிக்கட் ரேட் அதிகமாகும் போது, அப்படி கொடுத்து வந்து பார்க்கிறவங்களுக்கு, இந்த படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.
நான் ஆர்ட்டிஸ்டா, ஸ்டாரா, ஹீரோவா அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும் போது என்னைப் பார்த்தால் சந்தோஷப்படணும்.
என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம்.


இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்.


இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியம் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு, இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும் போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்,” என சிவகார்த்திகேயன் பேசினார்.

இன்றய இயக்குனர்களுடன் என்னால் போட்டிபோட முடியவில்லை - மணிரத்னம்...!



சித்தார்த்-அமலாபால் நடித்த, 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது துல்கர் சல்மான்-நஸ்ரியாவை ஜோடி சேர்த்து ''வாயை மூடி பேசவும்'' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.


தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றபோது டைரக்டர்கள் மணிரத்னம், செல்வராகவன், கேயார் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.


அப்போது மணிரத்னம் பேசும்போது, நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு வேலை செய்து கொண்டிருந்தேன். அதன்பிறகு சினிமாவின் மீது ஈர்க்கப்பட்டு இயக்குனர் ஆனேன்.


அப்போதெல்லாம் சினிமாவில் படித்தவர்கள் அதிகமில்லை. ஆனால், இப்போது நிறைய படித்தவர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு துறைகளில் சாதித்தவர்களும்கூட சினிமா படம் எடுக்க வருகிறார்கள். தயாரிப்பாளராக வருகிறார்கள். இது ரொம்ப சந்தோசமாக உள்ளது.


மேலும், வாயை மூடி பேசவும் படத்தின் டிரைலர் ரொம்ப வித்தியாசமாக உள்ளது. எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகவும் உள்ளது.


டைரக்டர் பாலாஜி மோகன் மீது பொறாமை ஏற்படுகிறது. அதோடு, இங்கே பேசியவர்கள் அவருக்கு கோபமே வராது என்றார்கள். அதனால் அது எப்படி என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது.


இந்த படத்தில் எனது தளபதில் படத்தில் நடித்த மம்மூட்டியின் மகன் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அவரைப்பார்க்கையில் எனக்கு வயதாகி விட்டதை என்னால் உணர முடிகிறது என்றார் மணிரத்னம்.

மாதங்களின் பெயர்கள் வந்தது எப்படி?



தமிழன் தந்த நாட்காட்டி தடுமாறியது ஏன்?

பழைய ரோமர்கள் மார்ச் மாதத்தை தொடக்க மாதமாகவும்,பெப்ரவரியை இறுதி மாதமாகவும் கொண்டிருந்தார்கள். அப்போதய பெயர்களின் சரித்திரத்தைப் பார்க்கலாம்.

ஜனவரி-January-என்பது பின்னர் Pompilius என்பவரால், தொடக்கத்திற்கும் முடிவிற்குமான கடவுளின் பெயரான Janus இல் இருந்து உருவானது.

பெப்ரவரி-February-கி.மு.690 அளவில்  Numa Pompilius வினால் வருட முடிவில் கொண்டாப்பட்ட Februa பண்டிகையின் பெயராகும்.

மார்ச் -March- Mars இல் இருந்து வந்ததாம்.அது ரோமானியர்களின் போருக்கான கடவுளாவர்.

ஏப்ரல்-April-மூன்று விளக்கங்கள் உண்டு. April என்பது லத்தின் மொழியில் இரண்டாவது என்பதைக் குறிக்கும்.aperire என்ற லத்தின் மொழிச் சொல்,பூக்கள் உருவாகும் வசந்த காலத்தைக் குறிக்கிறது. மூன்றாவது Aphrodite என்ற பெண் தெய்வத்தைக் குறித்த சொல்லில் இருந்து வந்தது.

மே-May-பூமியில் மரங்களை வளர்க்கும் பென் தெய்வத்தின் பெயரான,Maia என்பதைக் குறிக்கும்.

ஜூன்-June-Juno என்ற திருமணங்களுக்கான பெண் தெய்வத்தின் பெயர்.

ஜூலை-July-ஐந்தாவது என்ற லத்தின் மொழி- Quintilis-என்ற பெயரில் முதலில் அழைக்கப்பட்டு,பின்னர் கி.மு.44 இல் Julius Caesar பெயரில் அழைக்கப்பட்டது.

ஆகஸ்ட்-August-முதலில் லத்தின் மொழியில் ஆறாவது -Sextillia-பின்னர் கி.மு.8 இல் இருந்து
Augustus Caesar பெயரில் இருந்து மாற்றப்பட்டது.

அடுத்து வந்த செப்டெம்பர்-Sebtember-லத்தின் மொழி ஏழு-septem

அக்டோபர்-October- லத்தின் மொழி எட்டு -Octo.

நொவெம்பர்-Novembar-லத்தின் மொழி ஒன்பது -novem

டிசெம்பர்-December-லத்தின் மொழி பத்து-decem


Gregorian calendar என அழைக்கப்படும் தற்போதய முறையான Jan-Dec. 1582 ல் Pope Gregory இனால் கொண்டு வரப்பட்டது.இருப்பினும் 1752 வரை பிரிட்டனும் அதன் காலணியாக இருந்த அமெரிக்காவும் மார்ச் மாதத்தையே தொடக்க மாதமாக கொண்டாடி வந்தது.

முதலில் 304 நாட்களாக இருந்த வருடம் கால மாற்றங்களை சரியாகக் காட்டாததால்,Numa Pompilius மன்னன் ஜனவரி,பெப்ரவரி ஐ சேர்த்து 355 நாட்களாக மாற்றியும் சரிவராததால்,10 நாட்களைக்கொண்ட Mercedinus மாதத்தை உருவாக்கினான்.ஜூலியஸ் சீசர் அதை நீக்கி,12 மாதங்களைக் கொண்ட, 365 நாட்கள் உடைய வருடத்தை உருவாக்கி,பெரவரிக்கு 29 நாட்களைக் கொடுத்தார். பின்னர் Augustus என்பவர் ஆகஸ்ட்டில் 31 நாட்களைப் போட்டு,பெப்ரவரிக்கு 28 நாட்களைக் கொடுத்தார்.

எகிப்தியரின் யூலியன் கலண்டர்(Julian calendar) ஐப் பின்பற்றி வந்த காலத்தில்,16 ம் நூற்றாண்டு வரை,தை 1 - ஜனவரி 14 தான் வருடத்தின் தொடக்கமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.இலங்கையின் ஒரு புள்ளிக் கோட்டை (கடற்கோளுக்கு முன்னரான பழைய இலங்கை) நேரக் கோடாக (கிரீன்விச் போல்) பாவித்து தமிழர்கள் நாட்காட்டியை, அன்று உருவாக்கினார்கள்.ஆனால் தமிழர்களின் மதச் சார்பற்ற இந்த முறையை, அன்றைய 16 ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சபை (13 ஆம் Pope Gregory XIII ) விரும்பாது, ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்கமாக அறிவித்தது.

ஆரிய அரசன் சாலிவாகனன் தான் முதலில் சந்திர நாட்காட்டியை அடிப்படையாக வைத்து சித்திரை ஒன்றை வருடத் தொடக்கமாக அறிவித்து ஆணை பிறப்பித்தான். அடிமைகளாகி விட்ட தமிழர்களும்,அதைத் தொடர்ந்தனர்.இது வரலாறு.

நான் சொன்னால் யார் தான் நம்பப் போகிறீர்கள்.ஆனாலும் அதுதான் உண்மை. எங்கோ இருந்து கொண்டுவரப்பட்ட, ஆரிய இந்துமததை நீங்கள் தலையில் வைத்துக் கொண்டாடினாலும்,உண்மை ஒன்று இருக்கிறதே,அதுதான் தமிழர்களின், ஒன்றெ குலம் ஒருவனே தேவன், என்ற மதமற்ற வள்ளுவனின் இறைக்கொள்கை.
ஜப்பானியர்கள் நமது பொங்கலைப் போல், பொங்கலோ பொங்கல் (FONKARA -FONKARA)  என்று நம்மைப் போல் மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
எல்லாம் அழிக்கப்பட்டு நாம் நிர்க்கதியாய்,ஆரிய அடிமைகளாய் நிற்கிறோம்.

ஏப்ரல் போல்(April fool) ஏன் வந்தது தெரியுமா? முன்னர் ஐரோப்பியர்கள் ஏப்ரல் 1 இல் தான்
புத்தாண்டைக் கொண்டாடினார்கள். 13 ஆம் Pope Gregory ஜனவரி 1 ஐ புத்தாண்டாக அறிவித்த போதும்,ஐரோப்பியர்கள் அதை ஏற்றுக் கொள்ளாது,தொடர்ந்து ஏப்ரல் 1 ஐ கொண்டாடி வந்தனர். பின் அது மாறிய போதும்,ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என அழைத்தார்கள். இருந்தாலும்,அதற்கு முன்னரே பிரான்ஸ் நாட்டில் இந்த முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதாம்.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள், ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

அஜித்,விஜயை பின்னுக்கு தள்ளிய அஷோக் செல்வன்...!



அஷோக் செல்வன் - ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 28 ல் வெளியான தெகிடி திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டது போலவே மெஹா ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக இதன் கதையம்சமும், விமர்சனங்களும் இப்படத்திற்குப் பக்கபலமாக அமைந்து, இந்த வெற்றியைச் சாதகமாக்கியுள்ளது.


இந்த ஆண்டு மெஹா ஸ்டார்களான அஜித்,விஜய் ஆகியோர் நடித்த படங்கள் உள்ளிட்டு மொத்தமாக 30 படங்களுக்கும் மேலாக வெளியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது. இத்தனை வெளியீடுகளிலும் இரண்டே இரண்டு படங்கள்தான் வெற்றிப்படமென அறிவிக்கப்பட்டுள்ளன.


முன்னதாக விஜய் மில்டன் இயக்கத்தில், பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் நடிப்பில் வெளியான கோலிசோடா திரைப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பெருவெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தெகிடியும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.


விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படங்களும் ஹிட் படங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒருதரப்பினர் இவை போலியான தகவல்கள் என்று கூறிவருகின்றனர்.


திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில், நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைப்பில் இப்படம் வெளியானது.

கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகும் படங்கள் - சிறப்புக் கட்டுரை!



இந்த ஆண்டு கோடைவிடுமுறையைச் சிறப்பான முறையில் கொண்டாட மெஹா ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. அவற்றைப் பற்றிய சிறப்புப் பார்வை இதோ...


ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும்
கோச்சடையான் திரைப்படம் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்குவரவிருக்கிறது. சௌந்தர்யா அஸ்வின் இயக்கியிருக்கும் இப்படம்
பர்பாமென்ஸ் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியத் திரைப்படமாகும். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, நடித்து, இயக்கியிருக்கும் விஷ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான விஷ்வரூபம் -2 திரைப்படமும் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாத வெளியீடாக அமையலாம்.


தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றுடன் விஷாலின் நான் சிகப்பு மனிதன், வடிவேலுவின் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன், கவுண்டமணியின் 49-O முதலான படங்கள் இவ்வாண்டு கோடையில் வெளியாகி ரசிகர்களைக் குளிர்விக்கவுள்ளன. இவை தவிர அதிகப் பிரபலமில்லாத திரைப்படங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஜினி, கமல்,விக்ரம்,விஷால்,கவுண்டமணி, வடிவேலு ஆகிய திரைத்துறை ஜாம்பவான்களின் திரைப்படங்கள் இவ்வாண்டு கோடையில் வெளியாகவிருப்பதால் எல்லாத் தரப்பு ரசிகர்களும் கொளுத்தும் கோடையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.