Wednesday, 19 March 2014

வத்திக்குச்சியிலிருந்து குத்தூசிக்கு மாறியிருக்கும் திலீபன்...!



அஞ்சலியோடு ஜோடியா இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.


பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு பிறகு திலீபன் தற்போது குத்தூசி திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


லஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம். தியாகு தயாரிக்க சீனுராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த சிவசக்தி, தற்போது குத்தூசி திரைப்படத்தை இயக்கிவருகிறாராம்.


மேலும் இப்படத்தை பற்றி பேசிய திலீபன் வத்திக்குச்சி படத்திற்கு பிறகு நிறைய கதை கேட்டேன் என் மனதிற்கு பிடித்தது போல் அமைந்தது குத்தூசி திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்.


பிடிச்சது இருக்கட்டும் திலீபன் நடிச்ச படம் பெயர்கள் வத்திகுச்சி, குத்தூசி எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படி பேர் அமையது.
இத நா கேட்கலங்க நம்ம சினிமா வட்டாரம் கேட்கறாங்க.

இவர் இயக்குனர் முருகதாசின் தம்பியுமாவார்..

தாதாவாகவும் ,ஐ.டி.இளைஞனாகவும் காட்சியளிக்கப்போகிறார் சூர்யா...!



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று
அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.


திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா
நடித்துவருகிறார்.


இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துவருவதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் பரவியிருந்தன. ஆனாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே இருந்துவந்தனர் ரசிகர்கள்.


சமீபமாக பேட்டியளித்துள்ள இயக்குனர் லிங்குசாமி, அஞ்சான் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.


ஒரு வேடத்தில் மும்பையைச் சேர்ந்த தாதாவாகவும், மற்றொரு வேடத்தில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி.இளைஞனாகவும் இவர் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுவரும் இப்படம் தற்பொழுதிருந்தே மாபெரும் எதிர்பார்ப்புக்களைக் கிளப்பிவருகிறது.



இப்படத்தில் சூர்யாவின் வேடங்கள் மிகவும் ஸ்டைலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு வேடங்களுமே வெகுவாகப் பேசப்படும்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகிலாவா அப்படின்னா யாரு..? ப்லேட்டை மாற்றிய அஞ்சலி...!



அஞ்சலியை மீண்டும் காணவில்லை. அமெரிக்காவில் தனது தொழிலதிபர் காதலருடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் திருமணம் செய்யப் போகிறார் என்று ஊடகங்கள் சமீபமாக செய்தி வெளியிட்டு வந்தன.


இன்னும் சிலர், அமெரிக்காவில் இருக்கும் அஞ்சலி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். விரைவில் புதுப்பொலிவுடன் சினிமாவில் நடிப்பார் எனவும் பேசி வந்தனர்.


இந்த இரண்டு விடயங்களுமே அறுதியிட்டு சொன்ன ஒரு விஷயம், அஞ்சலியை காணவில்லை.


இந்நிலையில் ஹைதராபாத்தில் திடீர் பிரசன்னமான அஞ்சலி பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இயக்குனர் சொன்ன கதை பிடித்ததால் உடனே அப்படத்திற்கு கால்ஷீட் தந்ததாகவும் அந்த சந்திப்பின் போது கூறினார்.


ஆனால் அந்த இயக்குனர் யார் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.


ஷகிலாவின் சுயசரிதையில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கிறார் என்ற வதந்தி பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த செய்தியை அவர் மறுத்தார். ஷகிலாவாக நான் நடிக்கவில்லை, ஒருபோதும் நடிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்தார்.


இந்த சந்திப்பின் மூலம், ஷகிலா படத்தில் நடிக்கிறார், அஞ்சலியை காணவில்லை என்ற இரண்டு வதந்திகளுக்கும் அஞ்சலி முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படி பேசி,பேசியே பெரிய ஆளா ஆக்கிடுவாங்க...இவங்க...!



எந்த ஒரு படம் என்றாலும் அதற்கான இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் சத்யம் திரையரங்கில் நடைபெறுவது வழக்கமான ஒன்று .


சமீபத்தில் பிரம்மாண்டமாக கோச்சடையான் இசைவெளியீடும் அங்கு தான் நடைபெற்றது
இதில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் ஸ்டார்ஸ் ஷாரூக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் கலந்துகொண்டபோது கூட எந்த ஒரு சச்சரவும் இல்லை .


ஆனால் நேற்று முன்தினம் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திற்கு அவ்வளவு கூட்டம் சற்று பவர் ஸ்டார் நிகழ்ச்சி தான் ஏதோ அங்கு நடைபெறுகிறதோ என எண்ணும் அளவிற்கு கூட்டம்.


பின்பு தான் தெரிந்தது சிவகார்த்திகேயன், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறங்கியிருக்கிறார் என்பதுதான்.


சொந்த ஊரான திருச்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக கல்லூரி மாணவர்களை இவ்விழாவில் சீன் போடுவதற்காக வண்டி வைத்து இறக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.


கூட்டம் கூட்டமாக தன் சொந்த ஊர் காரர்களையே இறக்கிவிட்டு பாதுகாப்பிற்கு 10 குண்டர்களுடன் வந்து இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


எல்லாம் ஒரு விளம்பரம் தான்!!!!!!!!!!!!!  

அடம்பிடித்த சசிகுமாரை அடக்கிய பாலா...!



இயக்குனரும் நடிகருமான சசிக்குமாரை தாடியில்லாமல் காண்பது என்பது அரிதிலும் அரிது என்பதை விட, தாடியில்லாமல் சசிக்குமார் இல்லை என்றே கூறலாம்.


அப்படிப்பட்ட டிரிம் செய்யப்பட்ட அழகான தாடியுடன் இதுவரை தோன்றிவந்த சசிக்குமார், விரைவில் துவங்கவுள்ள பாலா படத்திற்காக தாடியை எடுக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


பெரும்பாலும் கிராமத்து மற்றும் முரட்டுக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சசிக்குமாருக்கு அவரது தாடி ஒருவகையில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.


அதே சமயம் கொஞ்சம் மாடர்ன் ஹீரோவாக இவர் நடித்த பிரம்மன் படத்திலும் கூட இவர் தாடியுடனேயேதான் நடித்திருந்தார். இப்படியாக இவர் இதுவரை கட்டிக்காத்துவந்த தாடியினை பாலாவின் படத்தில் நடிப்பதற்காகத் தியாகம் செய்யவேண்டிவந்துள்ளது.


பெரும்பாலும் பாலாவின் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எதேனும் ஒருவகையில் தங்களை வருத்திக் கொண்டே நடித்தாகவேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலும் சோகமான அல்லது ஏழ்மையான கதாபாத்திரங்களே பாலாவின் ஹீரோக்களாக இன்றுவரையிலும் இருந்துவந்துள்ளனர்.


பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கவுள்ள திரைப்படம் கரகாட்டக் கலையினை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.


இப்படத்திற்காகத்தான் சசிக்குமார் தாடியை எடுக்கவுள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சசிக்குமாரின் ஜோடியாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கவுள்ளன.