Tuesday, 18 March 2014

“ திரிசா இலியானா நயன்தாரா” - இது நடிகை பேர் இல்லிங்க..இது ஒரு படத்தோட பேரு...!



இசையமைப்பாளராக ஜொலித்துவந்த ஜி.வி.பிரகாஷ்குமார் “ மதயானைக்கூட்டம்” திரைப்படத்தைத் தயாரித்து தயாரிப்பாளரானார்.


அத்துடன் நிற்காமல் தற்பொழுது “பென்சில்” படத்தில் நடித்துவருவதன் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார்.


பென்சில் திரைப்படத்தில் இவரின் நடிப்பினைப் பார்த்த அனைவரும் பாராட்டிவருவதோடு, பிரபல ஹீரோக்களும் இவரைப் பாராட்டிவருகின்றனர்.


இந்நிலையில் நடிப்பதா, இசையமைப்பதா என்ற குழப்பத்தில் இருந்துவந்த ஜி.வி.பிரகாஷ் தற்பொழுது பென்சில் திரைப்படத்திற்குப் பிறகு மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.



பென்சில் படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள இப்படத்திற்கு “ திரிசா இலியானா நயன்தாரா” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், ரிபெல்
ஸ்டுடியோஸ் இப்படத்தினைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


அறிமுக இயக்குனர் ஆதிக் இயக்கவுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.


 இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியால் மனிஷாவாக மாறிய நந்திதா...!



இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிப்பில் உருவாகிவரும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் ”இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் நாயகியான நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார்.


தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணையும் புதிய படம் இடம் பொருள் ஏவல். கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,


இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக வழக்கு எண் 18/9 படத்தில் நாயகியாக நடித்த மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.


ஆனால் முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்ற காரணம் காட்டி படத்திலிருந்து நீக்கப்பட்டார்.


இதனால் மனிஷாவிற்குப் பதிலாக விஜய் சேதுபதியின் ஜோடியாக நந்திதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்பொழுது கொடைக்கானலில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதி - நந்திதா ஜோடி மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருந்தது நினைவுகூறத்தக்கது.


சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற புறப்பட்டார் சூப்பர் ஸ்டார்...!



கோச்சடையான் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்தமாதம் மைசூரில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து படம்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவந்த கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்து,


 அப்படம் தற்பொழுது ரிலீசிற்குத் தயாராகிவருகிறது. கோச்சடையான் திரைப்படத்தின் வேலைகள்


நிறைவடைந்திருப்பதால் ரஜினி தற்பொழுது ஓய்வில் இருந்துவருகிறார்.

கோச்சடையானிற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் எதுவென்று பெரும் பரபரப்புடன் பேசப்பட்டுவந்தது.


 ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் பார்ட் -2


வில் ரஜினி நடிப்பார் என்றும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா பார்ட்-2 வில் நடிப்பார் என்றும் வதந்திகள் பரவிவந்தன.



இந்நிலையில் சமீபமாக வெளியாகியிருக்கும் செய்திகளின் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் - கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணியாற்றவுள்ள புதிய
திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஏப்ரல் மாதத்தில் மைசூரில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஆனால் அப்படம் படையப்பா பார்ட்-2 வாக
இருக்குமா என்பது குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை.


படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருவிருப்பைக் கூட்ட அஞ்சான் படகுழுவினர் செய்த விபரீத வேலை...!



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சுமார் 30 கார்கள்
நொறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யூ.டி.வி.மோசன்பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பைக்
கிளப்பிவருகிறது.


 ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, சுமார் 500 கார்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்சி
சமீபமாகப் படம்பிடிக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30 கார்கள் நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மாபெரும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் சுமார் 80 லட்சம் செலவில் ஒரு மாபெரும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


அஞ்சான் படம் குறித்து எழுந்துவரும் எதிர்பார்ப்புக்களை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும் தகவல்கள் பரவிவருகின்றன. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம், சுதந்திரத் திருநாளன்று வெளியாகவுள்ளது.

இளையராஜா ஃபேன்ஸ் கிளப்பில் இணைய உள்ள முன்னனி நடிகர்,நடிகைகள்...! மிக பிரம்மாண்டமாய்...



இசைஞானி இளையராஜாவிற்கு உலகமுழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம்விருபிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கினைக்கும் அமைப்பு தான் “ILAYARAJA FANS CLUB”


இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது புதல்வர் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் துவங்கப்படும் ஒரு அமைப்பு இது.


இந்த அமைப்பு மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படும் உரிமை கொண்டது.


இசைஞானியின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் அவர்களை நல்வழிப் படுத்திய இசைஞானி அவர்களின் ரசிகர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக நற்பணிகள், சமூக முன்னேற்றத்திற்கென ஆக்கப் பூர்வமான செய்வதென முடிவெடுத்து அதனை இந்த ILAYARAJ FANS CLUB மூலம் செயலாக்க உள்ளனர்.


சாதி, மதம், இனம், அரசியல் போன்ற விசயங்களுக்கு அப்பாற்ப்பட்ட அமைப்பு இது. இதில் ஒருகோடி பேருக்கு மேல் உறுப்பினராக சேர உள்ளனர்.


இதற்கான அறிவிப்பை ஏப்ரல் ஐந்தாம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளனர்.கார்த்திக்ராஜா தலைமையில் “ராஜாவின் சங்கீதா திருநாள்” நிகழ்ச்சி நடைபெறும் ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று “இசைஞானி” என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது.


திரைப்படத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் இணைய உள்ளனர்.