Tuesday, 11 March 2014

அமரா - திரை விமர்சனம்...!



ஊரில் வெட்டி ஆபீசர் வேலை பார்ப்பவர் ஹீரோ அமரன். தம், தண்ணி என்று தெனாவட்டு காட்டும் ஹீரோவை, திருமணத்துக்கு பெண் பார்க்க செல்லும் நண்பன் தவிர்க்கிறான்.


காரணம் தெரிந்து ஷாக் ஆகும் ஹீரோ, திருந்தி வாழ நினைக்கிறார். அத்தை நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்கிறார். அங்கு போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் சம்பத்தை இவர் அடிக்க, வில்லங்கம் விபரீதமாகிறது.


பிறகு அங்கிருந்து சென்னைக்கு எஸ்கேப் ஆகிறார். ரயிலில் ஹீரோயினை சந்திக்க, சினிமா இலக்கணப்படி பார்த்த உடனேயே காதல் வந்துவிடுகிறது. ஹீரோயின் யாரென்று பார்த்தால், சாதிக் கட்சி தலைவரின் மகள்.


காதலை எதிர்க்கிறார் என்பதால், அவரிடமிருந்து எஸ்கேப் ஆகி வருகிறார். இவர்களை ஒருவர் எதேச்சையாக புகைப்படம் எடுக்க, அமைச்சர் மகள் காதலனுடன் ஓட்டம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அமரனை காதலன் என்று அமைச்சர் துரத்த, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.


வெட்டி ஆபீசர் கேரக்டருக்கு பொருந்துகிறார் அமரன். அடுத்த படத்தில் நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அவருக்கான காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறது. ஹீரோயின் ஸ்ருதி அழகாக இருக்கிறார்.


மற்றபடி நடிக்க வாய்ப்பு குறைவு. பிஸ்கட் மயக்கத்தில் ஹீரோவுடன் இருந்துவிட்டு மறுநாள், ‘நீ யாருடா’ என்று எகிறுவது முதல் அவருக்கான காட்சிகள் அழகாக இருக்கிறது. ஆனால், எதுவும் மனதில் பதியவில்லை.


 சாதிக் கட்சி தலைவராக நடித்திருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆறுதல் தருகிறார். சம்பத் பெரிதாக ஏதோ செய்வார் என்று பார்த்தால், ம்ஹும். கஞ்சா கருப்பு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் அருமை. மற்றபடி சொல்வதற்கு எதுவும் இல்லை.

வாழைப்பழ தேங்காய் பிரட் - அதிரடி ரெசிப்பி..!



 குழந்தைகளுக்கு பிரட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பிரட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை வேளையில் குழந்தைகளுக்கு தோசை, இட்லி போன்றவை சாப்பிட்டு போர் அடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு வாழைப்பழத்தையும், தேங்காய் துருவலையும் வைத்து, ஒரு அருமையான சுவையில் பிரட் செய்யலாம்.


இந்த பிரட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ தேங்காய் பிரட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

எண்ணெய் - 1/2 கப்

முட்டை - 3

தயிர் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வாழைப்பழம் - 2 (மசித்தது)

தேங்காய் துருவல் - 1/2 கப் (வறுத்தது)

தேங்காய் துருவல் - 1/2 கப்

வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் செய்முறை:


செய்முறை:

முதலில் மைக்ரோவேவ் ஓவனை 350 டிகிரியில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பின் பிரட் பேனை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பௌலில் சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ், எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு ஸ்பூனை வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் வறுத்த தேங்காய் துருவலை, முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதே கலவையில் மாவை மெதுவாக போட்டு கிளறி விட்டு, அதனை பிரட் பேனில் ஊற்றி, பின் அதன்மேல் தேங்காய் துருவலை தூவி, பிறகு ஒரு அலுமினிய பேப்பரினால் அதனை சுற்றி, ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கும் போது, அதனை ஒரு கத்தியினால் வெட்டும் போது, கத்தியில் மாவானது ஒட்டிக் கொண்டால், மீண்டும் அதனை 30 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது பிரட்டானது ரெடியாகியிருக்கும். அதனை குளிர வைத்து பரிமாறலாம்.

குறிப்பு:

இந்த பிரட்டை சரியாக பராமரித்து வந்தால், 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும். 

பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...!



குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர்.


அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.


 மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர்.


 இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.


ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம்.


இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம். அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு

பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாறு

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.


வெங்காயம்

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

மருத்துவர் ஆலோசனை

தேவையில்லாமல் மருத்துவரை அணுக வேண்டாம். மிகவும் மோசமான நிலையில், பல்லை நீக்கினால் மட்டுமே நல்லது என்ற முடிவு வரும் போது ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். தேவையில்லாமல் பல்லை நீக்கினால் அது பல வித பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும். பல்லை நீக்கியவுடன் எதுவும் தெரியாது. காலம் போகப் போக பல்வலியுடன் தலைவலியும் சேர்ந்து வந்துவிடும். அதனால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும்.

ரோமானிய அழகி சல்மான்கானின்வலையில் விழுந்த கதை இதுதான்...!




நடிகர் சல்மான்கான் ரோமானிய அழகியை காதலிக்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சல்மான்கானுக்கு 48 வயது ஆகிறது. இவரை பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும் சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது.


இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார்


இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–


என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன்.


 விரைவில் என் வாழ்வில் நல்ல விஷயம் ஒன்று நடக்கப்போகிறது. மனித நேயத்தை நான் பின்பற்றுகிறேன். முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பின்பற்றுகிறேன்.


எனது தந்தை பதான் சமூகத்தை சேர்ந்தவர். தாய் இந்து. இரண்டாவது அம்மா கத்தோலிக்க மதம், மைத்துனர் பஞ்சாபி எனது மனைவியை வெளியே இருந்து கொண்டு வர நினைக்கிறேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

தன் சத்தோஷத்திற்கு புது காரணம் சொல்லும் ஹன்சிகா...!



சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு ஹன்சிகா இன்னும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்.


தரணி இயக்கும் 'ராஸ்கல்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், மகிழ் திருமேனி இயக்கும் 'மீகாமன்' படத்தில் ஆர்யாவுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.


ஏற்கனவே 'மான்கராத்தே', 'அரண்மனை' படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அதிக படங்களில் நடிக்க கமிட் ஆவதால் சந்தோஷமாக இருக்கிறாராம்.


சிம்புவின் காதலும், பிரிவும் உங்களைப் பாதிக்கவில்லையா என்று யார் கேட்டாலும், ''இல்லை. முன்பை விட இப்போதுதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று பட்டென்று பதில் சொல்கிறாராம் ஹன்சிகா.