Monday, 24 March 2014

ஷங்க்ரின் ‘ஐ’ லேட்டஸ்ட் தகவல்கள்!



ஷங்கர் படம் என்றால் எதிர்பார்ப்பை பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால், எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சும் அளவில் ‘ஐ’ படம் இருக்கும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.


 ரொமான்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்திற்காக ‘ஹாபிட்’ போன்ற படங்களில் மேக்-அப் பணிகளைக் கவனித்த ‘வேட்டா’ நிறுவனம் ‘ஐ’ படத்தில் பணியாற்றுகிறது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து, இந்தியா முழுவதுமான பார்வை இப்படத்தின் மீது திரும்பி இருக்கிறது.


‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ போன்ற படங்களில் சமூக பிரச்சனைகளையும், ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் காதலையும், ‘எந்திரன்’ படத்தில் சயின்ஸ் ஃபிக்ஷனையும் மையப்படுத்தி படமெடுத்த ஷங்கர், ‘ஐ’ படத்திற்காக இதுவரை போகாத ரூட்டில் பயணித்திருக்கிறாராம். படத்தின் 30 சதவிகித படப்பிடிப்பை சீனாவில் நடத்தியிருக்கிறார்கள்.


‘ஐ’ படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சீனாவிற்கு ‘டேக் ஆஃப்’ ஆகி, இடைவேளை வரை அங்கேதான் பயணிக்குமாம். பெரிய பெரிய பூக்கள் நிறைந்த ஏரியாக்களில் நிறைய தூரம் பயணம் செய்து படமாக்கியிருக்கிறாராம். ‘அந்நியன்’ படத்தில் வரும் ஆம்ஸ்டர்டாம் தோட்டத்தைவிட இதில் வரும் பூந்தோட்டங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்குமாம்.


அதோடு ‘மென் இன் ப்ளாக்’கில் வேலை பார்த்த மேரி வாட், ‘ஐ’ படத்தில் ஒரு பாடல் பண்ணியிருக்கிறாராம். இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக உடலை மெலிய வைத்துள்ள விக்ரம், மேக்-அப் கலைஞர்களின் வேண்டுதலுக்கிணங்க தலையையும் மொட்டையடித்திருக்கிறார்.


படத்தில் வரும் அந்தக் கேரக்டர் மிகவும் பேசப்படும் என்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.


விக்ரமிற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை கோடைவிடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Sunday, 23 March 2014

திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!



சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படம் ‘வேட்டைக்காரன்’. குறுகிய கால தயாரிப்பு. எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனங்கள். கே.வி.மகாதேவன் இசை. 100 நாள் படம். 1965ல் ஸ்ரீதரின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான படம் ‘வெண்ணிற ஆடை’.

 கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என நான்கு பொறுப்பையும் ஸ்ரீதர் கவனித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்தனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். அதேபோல் ஸ்ரீகாந்தை (‘தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த்) ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.


நிர்மலாவுக்கு முக்கிய ரோல் படத்தில் இருந்தது. கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோயின்தான். மெயின் ஹீரோயின் வேடத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என ஸ்ரீதர் குழப்பத்தில் இருந்தார். அப்போதுதான் கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவை பற்றி கேள்விப்பட்டார். அந்த படங்களை பார்த்தார். அவரையே புக் செய்தார். இந்த படம் மூலம்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.


படம் முடிந்து சென்சாருக்கு சென்றது. தேவையே இல்லாமல் ஏதோ ஒரு காட்சிக்காக சென்சார் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து வ¤ட்டது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியாக இருநதது. ஸ்ரீதருக்கோ பெரும் அதிர்ச்சியை இது தந்தது. படத்தில் கவர்ச்சி காட்ச¤கள் அதிகம் போலிருக்கிறது என்ற பேச்சு பரவிவிட்டது. முதல் நாள் முதல் ஷோவில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் பட்டாளம் நிரம்பி வழிந்தது.


படம் முடிந்து போகும்போது தியேடடர் சீட்டுகளை கிழித்து, கலாட்டா செய்துவிட்டு போனார்கள். சில தியேட்டர்களில் பாதி படத்திலேயே கலாட்டா செய்தனர். காரணம், முழு நீள குடும்ப கதை படமிது.


ரசிகர்களின் இந்த செயல்களால் படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துவிட்டனர். மூன்றே வாரத்தில் பல தியேட்டர்களிலிருந்து படத்தை எடுத்தும் விட்டனர். இதற்கிடையே படம் பார்த்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது.


அது படத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஸ்ரீதரின் நேர்மையான உழைப்பை பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. கிராமப்புறங்களில் படம் பிக்அப் ஆக தொடங்கியது. படம் நல்லா இருக்கு எனற டாக் பரவ ஆரம்பிக்கவே வேறு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் ஸ்ரீதர். அதன் பின் படம் நிற்காமல் ஓடு ஓடு என ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அமர்க்களமான ஹிட் என்றால் இதுதான் என சொல்லும்
அளவுக்கு பேசப்பட்டது.


படத்தில், நீராடும் கண்கள் இங்கே... போராடும் நெஞ்சம் அங்கே... நீ வாராதிருந¢தால்... என்னை பாராதிருந்தால்... நெஞ்சம் மாறாதிருப்பேன் இல்லையா...என்றொரு கண்ணதாசனின் பாடல் பதிவாகியிருந்தது. படத்தில் ஸ்ரீகாந்தை பார்த்து ஹீரோயின் பாடும் வரிகள் இவை. இதை மக்கள் ஏற்பார்களா என சந்தேகத்தை ஸ்ரீதருக்கு அவரது உதவியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.


இதனால் இவ்வளவு அழகான பாடல் படத்தில் இடம்பெறாமலே போய்விட்டது. இதன் மெட்டும் மிக அருமையாக இருக்கும். எனக்கு இந்த பாடல் வரிகளை கொடுத்து சம்பளமும் பெற்றுவிட்டதால், அந்த வரிகளை வேறு படத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு தோன்றவில்லை. அவன்தான் கவிஞன் என என்னிடம் ஒருமுறை ஸ்ரீதர் கூறினார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் இந்த ஆண்டில்தான் வெளியானது. தேசிய விருது பெற்ற படமிது. ஜெயகாந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த படம். ஆசியா ஜோதி பிலிம்ஸ் பெயரில் இப்படத்தை தயாரித்தார். பிரபலம் ஆகாத பிரபாகர், வீராசாமி, காந்திமதி நடித்த படம். ஆனால், இதன் கதையும் அதை சொன்ன விதமும் புதுமையானது. நட்சத்திர நடிகர்கள் இல்லை என்பதால் இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை.


 ஜெயகாந்தனே படத்தை வெளியிட்டார். ரிலீசுக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்களும் கேம் ஆடினார்கள். டிக்கெட் நிறைய இருந்தும் தியேட்டரில் ஹவுஸ்புல் என போர்டு வைத்துவிடுவார்கள். இதை நம்பி ரசிகர்கள் திரும்பிவிடுவார்கள். ரசிகர்கள் போனதும் போர்டை எடுத்துவிடுவார்கள். படம் பார்க்க ரசிகர்கள் வரவில்லை எனக் கூறி படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிடுவார்கள். இந்த விஷயத்தை ஜெயகாந்தனே எனனிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.


தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் வெளியான படம் ‘இதயக்கமலம்’. எல்.வி.ப¤ரசாத் தயாரித்தார். அவரது சிஷ்யரான ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கினார். வசனம் ஆரூர்தாஸ். கே.வி.மகாதேவனின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட். ரவிச்சந்திரனுடன் கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடித்த படம். நன்றாக ஓடியது.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு - அதிரடி முடிவு...!



பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர் மவுனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996–ல் நடந்தது.

அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணியை ஆதரித்தார். அந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்தார். அந்த அணி அமோக வெற்றி பெற்று ரஜினியின் அரசியல் செல்வாக்கை வலுவாக பறைசாற்றியது. அதன் பிறகு 1998–ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார்.

அப்போது அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்து நின்றன. அந்த சமயம் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது பாரதீய ஜனதாவுக்கு அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வைத்தது. இதனால் 1999–ல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தார்.

2004–ல் பா.ம.க.வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்தது. கட்சி துவங்குவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது பா.ம.க.வை தோற்கடிக்க எதிர் அணியான பாரதிய ஜனதாவை வெற்றி பெற வைக்கும்படி வாய்ஸ் கொடுத்தார். அதற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக எந்த கட்சிக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுங்கியே இருக்கிறார்.

இந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் நெருக்கமாகி விட்டார். ஜெயலலிதா, கருணாநிதியை சந்தித்தார். எதிர் முகாமில் இருந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோருடனும் நெருக்கமானார். ரஜினி மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு அன்புமணி நேரில் வந்து வாழ்த்தினார். இது போல் பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடியுடனும் நட்பு வைத்து இருக்கிறார்.

எல்லா தலைவர்களுடனும் இந்த நல்லுறவை நீடிக்க செய்வதே அவர் எண்ணமாக இருக்கிறது. எனவே வரும் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பாயும் புகார்கள்....!



மதுரவாயல் அருகே உள்ள வானகரம்–அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.


 ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு போய் உள்ளது. குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதேபோல் குடியிருப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர்கள் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்து பவர் ஸ்டார் சீனிவாசன் தனது சூப்பர் மார்க்கெட் முன்பு செட் அமைத்துள்ளார்.


அதை அகற்றக்கோரி டிசம்பர் மாதம் வரை கெடு விடுத்து இருந்தோம். ஆனால் அவர் அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம்.


இதற்காக எங்களை அவரது தரப்பினர் மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த புகார்கள் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

விக்ரமின் அடுத்த படம்: விஜய் மில்டன் இயக்குகிறார்..!



 விக்ரம் நடிக்கும் புதிய படத்தை ‘கோலிசோடா’ இயக்குநர் விஜய் மில்டன் இயக்கவிருக்கிறார். இந்தப்படத்திற்கு ‘இடம் மாறி இறங்கியவன்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.


விக்ரம் மாறுபட்ட கதாபாத் திரங்களில் நடித்து வரும் ‘ஐ’ படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.


வரும் கோடை விடுமுறை யில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலை யில் இப்படத்தை அடுத்து ஒளிப்பதிவாளரும்,


இயக்கு நருமான விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ‘இடம் மாறி இறங்கி யவன்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.


இந்தப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.


விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ படத்தை இந்த ஆண்டின் வசூல் சாதனை படமாக தயாரிப்பாளர் சங்கம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.