Tuesday, 18 March 2014

ஆண்களே உங்கள் வலது கை மோதிர விரல் நீளமா இருக்கா..? ம்.ம். நீங்க அதுல கில்லாடியாம்..!



சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம்.


ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.


நோய்களை அறிந்து கொள்ளலாம்

ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.


விரலும் ஆய்வு முடிவும்


ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம்.

கவர்ச்சிகரமான ஆண்கள்


ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

ஹார்மோன் தூண்டப்படும்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.

ஆண்மை அதிகரிக்கும்


ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உறவில் உற்சாகம்


150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.


என்ன உங்க கை விரலை இப்பவே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?

நெருங்கி வா..முத்தமிடாதே…லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய தாரக மந்திரம்...!



ஆரோகணம் என்ற படத்தை மிகக்குறுகிய பட்ஜெட்டில் எடுத்த இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படவேலையை விறுவிறுப்பாக ஆரம்பித்துவிட்டார்.


தனது அடுத்த படத்திற்கு “நெருங்கி வா.. முத்தமிடாதே” என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார்.


இம்மாதம் 27ஆம் தேதி முதல் படப்பிடிப்பு உறுதியாக ஆரம்பமாகும் என கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன்,


இம்முறை தான் இயக்குவது ஒரு கமர்ஷியல் திரைப்படம் என்றும்,


 அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.


படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்துவிட்டது என்று கூறிய அவர், இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை மாட்லீ புளூஸ் என்பவர் டியூன் அமைத்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்.


மாட்லீ புளூஸ் ஏற்கனவே சுட்டகதை என்ற படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் பெயர்களை முறைப்படி வரும் 20ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும்,

அன்றே அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

‘இது நம்ம ஆளு’வில் மொத்த குடும்பமே இணைகிறார்கள்!



பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார் அல்லவா?


 தான் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் என்பதால் படத்தின் பாடல்களை ஹிட் ஆக்குவதில் குறியாக இருந்து செயல்பட்டு வருகிறார் குறளரசன்!


ஏற்கெனவே பல படங்களுக்காக பாடியுள்ள குறளரசனின் தந்தை டி.ராஜேந்தரையும், அண்ணன் சிம்புவையும் இப்படத்தில் பாட வைக்க திட்டமிட்டுள்ள குறளரசன்,


அதற்காக பிரத்தியேக ட்யூன்களை உருவாக்கி வைத்திருக்கிறாராம்.


இந்த ட்யூன்கள் டி.ஆருக்கும், சிம்புவுக்கும் ரொம்பவும் பிடித்து விட்டுள்ளதாம்!


இதன் பாடல் பதிவு விரைவில் நடைபெறவிருப்பதாகச் சொல்லும் குறளரசனும் படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறாராம்!


ஆக, ‘இது நம்ம ஆளு’வில் மொத்த குடும்பமே இணைகிறார்கள்!

மாயமான மலேசிய விமானம் ராடார் பார்வையில் இருந்து மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்...!



கடத்தப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போவதற்கு சில நிமிடங்கள் முன்பு ராடாரின் பார்வையில் இருந்து தப்பியது எப்படி என்பதை தற்போது மலேசிய விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய விமானம் டேக் ஆப் செய்த சிறிது நேரத்தில் சுமார் 45,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும்,


 அந்த விமானம் திடீரென ராடாரின் பார்வையில் இருந்து மறைவதற்கு முக்கிய காரணம் திடீரென அந்த விமானம் மிகவும் தாழ்வாக அதாவது 5,000 அடி உயரத்தில் பறந்ததாகவும் கூறப்படுகிறது.


விமானம் மிகவும் தாழ்வாக, அதாவது lower altitude என்ற பகுதியில் பறந்தால், அந்த விமானம் ராடாரின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். Higher attitude பகுதியில் பறந்தால் மட்டுமே ராடாரின் தெரியும்.


இந்த விபரங்களை நன்கு தெரிந்த, அனுபவமுள்ள பைலட், வேண்டுமேன்ற விமானத்தை 5000 அடி உயரத்திற்கு பறக்க வைத்துள்ளார். 10000 அடிக்கு குறைவாக விமானம் மிகவேகமாக பறந்தால்,


விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகி, விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து விமானத்தை தாழ்வாக பறக்க வைத்துள்ளார் விமானி.


ஒருசில இடங்களில் பறக்கும்போது, 5000 அடிக்கும் கீழே பறந்துள்ளதாகவும் தெரிகிறது. பெரிய மரங்கள், மலைகள் இவற்றின் மீது மோதுவதற்காஅ அபாயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் மலேசியாவில் Kelantan என்ற பகுதியில்தான் இந்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததாகவும், சம்பவ தினத்தன்று மிக அதிகளவிலான ஏதோ ஒரு சத்தம் கேட்டதாக Kelantan பகுதிகளில் உள்ள கிராமத்தினர் கூறியதாகவும் தெரிகிறது.


அதுமட்டுமின்றி மிகப்பெரிய வெளிச்சம் ஒன்று வானில் தெரிந்ததாகவும், கூறுகின்றனர்.


இவர்கள் சொல்வதை வைத்தும், ராடாரின் பார்வையில் இருந்து மறைவதற்காக விமானி வேண்டுமென்ற மிகவும் தாழ்வாக விமானத்தை பறக்க வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

‘‘விஜய்யிடம் கதை சொன்னது உண்மை! சமுத்திரக்கனி அதிரடி பேச்சு...!



நிமிர்ந்து நில்' படத்தின் வெற்றிவிழா பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய சமுத்திரக்கனி,


 ''இப்படம் மூலம் எனக்கு பல முக்கிய பிரமுகர்கள் நண்பர்களாகி வருகின்றனர்.


மேலும் சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் தேவாரம் ஆகியோர் படம் பார்த்துவிட்டு என்னை பாராட்டியதை மறக்கமுடியாது.


படத்தின் இரண்டாம் பாதியில் ஏன் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்தீர்கள் என சிலர் கேட்டனர்.


எனது எல்லா படங்களிலும் முதல் பாதியிலேயே கதையை அழுத்தம் கொடுத்து சொல்லி விடுவேன்.


அதற்கு பிறகு, காமெடி மற்ற அம்சங்கள் இருக்கும். ‘நிமிர்ந்து நில்’ படத்தை பொறுத்தவரையில் இரண்டாம் பகுதியை அதிகம் ரசித்துள்ளனர்.


நான் தேனி சென்றிருந்தபோது பலருக்கு படத்தின் இரண்டாம் பகுதி பிடித்ததாக கூறினர்’’ என்ற சமுத்திரக்கனியிடம்,


‘‘விஜய் படத்தை எப்போது இயக்குகிறீர்கள்?’’


 என கேட்டபோது, ‘‘விஜய்யிடம் கதை சொன்னது உண்மை!

நான் சொன்ன கதை அவருக்கும் பிடித்திருக்கிறது! கடைசிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

உறுதியான பின் அதுபற்றி அறிவிக்கிறேன்’’ என்றார்.