Tuesday, 18 March 2014

பாருக்குள் நடக்கும் மது மாது சூது...!!



இப்போது வரும் தமிழ் சினிமாக்களில் டாஸ்மாக் பார் காட்சிகள் இல்லாமல் இருக்காது. மதுபானக்கடை என்ற சினிமா,


ஒரு டாஸ்மாக் பாருக்குள்ளேயே எடுக்கப்பட்டது. இப்போது மது மாது சூது என்ற படத்தை ஒரு ஹைடெக் பாருக்குள்ளேயே எடுத்திருக்கிறார்கள்.


சிலந்தி என்ற படத்தில் வில்லனாக நடித்த சந்துரு தனது பெயரை ராஜஷந்ரு என்று மாற்றிக் கொண்டு அவரே தயாரித்து, இயக்கி நடிக்கும் படம்தான் மது மாது சூது.

இதில் அவருக்கு ஜோடியாக பெங்களூரைச் சேர்ந்த சந்தனா, சென்னையை சோந்த விக்னேஷா நடிக்கிறார்கள்.


"போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் கதை. 2014ம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாட ஒரு ஹைடெக் பாருக்குச் செல்கிறான்.


அந்த பாரில் அவன் சந்திக்கும் திகிலான சம்பவங்களின் தொகுப்புதான் இந்தக் கதை. மது மாது சூது இந்த மூன்றிலும் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நிறையபேர் அவர்களுக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும்.


திருப்பூரில் உள்ள ஒரு ஹைடெக் பாரை வாடகைக்கு எடுத்து அதனை 50 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைத்து ஒரே கட்டமாக 40 நாளில் படப்பிடிப்பை முடித்து விட்டோம்.

ஸ்ரீனி என்பவர் இசை அமைக்கிறார். லி மற்றும் எம்எம்எம் சங்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்" என்கிறார் ராஜஷந்ரு.

உலக தரத்தில் 9 வது இடத்தைப் பெற்றார் - இசைஞானி இளையராஜா ...!


 

சினிமா தொடர்பான இணையதளமான டேஸ்ட் ஆஃப் சினிமா, உலகின் சிறந்த இசை அமைப்பாளர்கள் (கம்போசர்) பட்டியலை வெளியிட்டுள்ளது.


அதில் இந்தியாவை சேர்ந்த இளையராஜா 9வது இடத்தை பிடித்திருக்கிறார்.


இத்தாலியன் கம்போசர் மெர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசை அமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் இரண்டாவது இடத்தையும்,


 அமெரிக்க கம்போசர் ஜான் வில்லியம்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.



சிறந்த இசை கோர்ப்பு, இசை கருவிகளை ஒருங்கிணைப்பது, பாடகர்,


பாடலாசிரியர் ஆகிய சிறப்பு தகுதிகளின் அடிப்படையில் இளையராஜா இந்த இடத்தை பிடித்திருப்பதாக அந்த இணையதளம் பாராட்டியுள்ளது.


இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் 4500 பாடல்களுக்கும், 950க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் இளையராஜா,

தன் மகனுக்காக அலையோ அலைன்னு அலையும் தங்கர் பச்சான் ....!



அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களை இயக்கிய தங்கர் பச்சான் வெகுகாலம் முன் களவாடிய பொழுது என்ற படத்தையும் முடித்தார்.


களவாடிய பொழுது திரைப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் அப்படத்தை வெளியிட பெரும் பாடுபட்டிருக்கிறார்.


இப்படத்தை வெளிகொண்டு வர பல முயற்சிகளை எடுத்துள்ளார் ஆனாலும் அப்படம் வெளியிட முடியவில்லை.


சலித்துப்போன தங்கர்பச்சான் இனி இப்படத்திற்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என அடுத்த படத்திற்கு தாவி விட்டார்.


அந்த படத்தில் தன் மகனையே ஹீரோவாக நடிக்க வைக்க அவருக்கு ஜோடியாக முன்னனி ஹீரோயின்களை தேடி வருகிறாராம் தங்கர்பச்சான்.

ஸ்ருதிஹாசன் எடுத்த ரிஸ்க்...!



தனது சிறு வயதிலிருந்தே பாடத்தொடங்கிய ஸ்ருதி தற்போது நடிப்பு மற்றும் பாடல் துறையில் சக்கைப்போடு போட்டு வருகிறார்.


முதன்முதலில் ஸ்ருதி, சிவாஜிகணேசன் - கமலஹாசன் அப்பா மகனாக நடித்த தேவர் மகன் படத்தில் “போற்றிபாடடி பெண்ணே” என்ற பாடலை இளையராஜா இசையில் பாடியிருந்தார்.


அதிலிருந்து பல இசையமைப்பாளர்களிடம் பாடி வந்த ஸ்ருதி பின் உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார்.


தன் அப்பாவை போலவே நடிப்பிலும் ஹிட் கொடுத்து வரும் ஸ்ருதி தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஜோய்பவார் என்பவருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் உருவாக்கி வருகிறாராம்.


இப்பாடலுக்கு பாடல் வரிகள் கமல்ஹாசன் எழுதி கொடுத்துள்ளாராம், மேலும் விரைவில் ஸ்ருதி, கமல், ஜோய்பவார் கூட்டணியில் ஒரு ஹிட் ஆல்பத்தை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து வெள்ளி டாலரும் எனக்கே கெடைக்கனும் சொக்கா...!



தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார், கவுரிகனகு, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நடராஜ் வரவேற்று பேசினார்.


தெற்கு மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் கார்த்தி, பொருளாளர் நாகேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் தென்றல் செயலாளர் சுதாகர், பொருளாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் காந்தி வேடம், ரஜினி வேடம் அணிந்து மேடையில் தொண்டர்கள் தோன்றினர். 200க்கும் மேற்பட்டவர்கள் முகத்தில் ரஜினியின் மாஸ்க் அணிந்திருந்தனர்.


கூட்டத்தில் கோச்சடையான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ரதம் தயாரித்து அதை தமிழகம் முழுவதும் பவனி வர செய்து கோச்சடையான் திரைப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.


திரைப்படம் வெளிவரும் அன்று திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த வெள்ளி டாலர்களை வழங்குவது.


கோச்சடையான் திருட்டு சி.டி வெளிவராமல் தடுக்க ஆண், பெண் கொண்ட திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. கலைமணி நன்றி கூறினார்.