Monday, 24 March 2014

சிறுவர்-சிறுமிகளை மோதவிடும் இயக்குநர் விஜய்!



பசங்க படத்தில் முன்னணி நடிகர்களைப்போன்று சிறுவர்கள் பெரிய ஓப்பனிங் கொடுத்து படத்தை ஆரம்பித்தார் பாண்டிராஜ். அதேப்போல், ஒரு சிறுவன் ஹீரோ அவனைச்சுற்றி சில சிறுவர்கள், அதேபோல் ஒருவன் வில்லன் அவனைச்சுற்றி சில சிறுவர்கள் எனவும் கதை பண்ணியிருந்தார். அவர்களுக்கிடையே நிகழும் ஈகோப்போரை இயல்பாக படம் பிடித்திருந்தார்.


அதையடுத்து இப்போது ஏ.எல்.விஜய்யும், சிறுவர்-சிறுமிகளை மையப்படுத்தி சைவம் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமைக்கொண்டு அவர் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, பழைய தாத்தா- பாட்டி உறவுகளைப்பற்றியும் இப்படத்தில் சொல்லியிருக்கிறாராம் விஜய்.


அதோடு, பேபி சாரா, ஒரு சேவல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஒரு 7வயது சிறுவனை வில்லனாக சித்தரித்திருக்கிறாராம் அவர். அதனால் அன்பு பாசம் என்பது கதையின் சாரம்சமாக இருந்தாலும், சிறுவர்-சிறுமிகளுக்கிடையே நிகழும் போட்டி பொறமைகளையும் காட்சிபடுத்தியிருக்கும் விஜய், அவர்களையும் காரசாரமாக மோதவிட்டுள்ளாராம்.

பிரிந்த காதலர்கள் தம்பதியர்கள் ஆனார்கள்...!



சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.

அம்மாவை கேட்காம இந்த காரியத்த பண்ணலாமா? இப்ப பாரு என்ன ஆச்சு...!



பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நான்குமுனை போட்டியில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அதோடு சில கட்சிகள் நடிகர்-நடிகைகளையும் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.


இதில் அதிமுக சார்பில் நடிகர்கள் ராமராஜன், தியாகு, வையாபுரி உள்பட பல நடிகர்கள் தமிழகத்தின் பல ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.


அந்த வகையில், தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபன் என்பவரை ஆதரித்து கடந்த சில தினங்களாக தியாகு, வையாபுரி இருவரும் ஒவ்வொரு கிராமங்களாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.


அப்படி அவர்கள் செல்லும் ஊர்களில் பெண்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்களாம்.


அப்படி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதனால்,


அந்த ஏரியாவைச்சேர்ந்த பறக்கும் படை பிரிவு தாசில்தார் குணசேகரன் வையாபுரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தெடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விஜய்க்காக நிறைய யோசிக்கிறேன் அனிருத்!



தனுஷ், சிவகார்த்திகேயனின் பேவரிட் மியூசிக் டைரக்டரான அனிருத். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.


 சினிமாவுக்குள் வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில், விஜய் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் அனிருத், இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சில சிறிய பட்ஜெட் படங்களில் கூட கமிட்டாகி பின்னர் வெளியேறினார்.


மேலும், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே, விஜய் படத்துக்கான டியூன்களை ரெடி பண்ணத் தொடங்கி விட்டார். அப்படி தொடங்கியவர் இப்போது அப்படத்துக்கு தேவையான சில டியூன்களை ஓ.கே செய்து விட்டவர், விஜய் பாடும் டியூனை மட்டும் இன்னும் ஓ.கே பண்ணவில்லை.


ஏற்கனவே விஜய் பாட வேண்டிய டியூனை ரெடி பண்ணினபோதும், அதில் அனிருத்துக்கு போதுமான திருப்தி வரவில்லையாம். அதிலும், சமீபத்தில் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி என விஜய் பாடிய இரண்டு பாடல்களுமே ஹிட் என்பதால். அந்த இரண்டு பாடல்களையும் மிஞ்சும் வகையில் தனது இசையில் உருவாகும் பாடல் மெகா ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறாராம்.


அதனால், அந்த ஒரு டியூனுக்காக நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அனிருத்.

ஷங்க்ரின் ‘ஐ’ லேட்டஸ்ட் தகவல்கள்!



ஷங்கர் படம் என்றால் எதிர்பார்ப்பை பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால், எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சும் அளவில் ‘ஐ’ படம் இருக்கும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.


 ரொமான்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்திற்காக ‘ஹாபிட்’ போன்ற படங்களில் மேக்-அப் பணிகளைக் கவனித்த ‘வேட்டா’ நிறுவனம் ‘ஐ’ படத்தில் பணியாற்றுகிறது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து, இந்தியா முழுவதுமான பார்வை இப்படத்தின் மீது திரும்பி இருக்கிறது.


‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ போன்ற படங்களில் சமூக பிரச்சனைகளையும், ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் காதலையும், ‘எந்திரன்’ படத்தில் சயின்ஸ் ஃபிக்ஷனையும் மையப்படுத்தி படமெடுத்த ஷங்கர், ‘ஐ’ படத்திற்காக இதுவரை போகாத ரூட்டில் பயணித்திருக்கிறாராம். படத்தின் 30 சதவிகித படப்பிடிப்பை சீனாவில் நடத்தியிருக்கிறார்கள்.


‘ஐ’ படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சீனாவிற்கு ‘டேக் ஆஃப்’ ஆகி, இடைவேளை வரை அங்கேதான் பயணிக்குமாம். பெரிய பெரிய பூக்கள் நிறைந்த ஏரியாக்களில் நிறைய தூரம் பயணம் செய்து படமாக்கியிருக்கிறாராம். ‘அந்நியன்’ படத்தில் வரும் ஆம்ஸ்டர்டாம் தோட்டத்தைவிட இதில் வரும் பூந்தோட்டங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்குமாம்.


அதோடு ‘மென் இன் ப்ளாக்’கில் வேலை பார்த்த மேரி வாட், ‘ஐ’ படத்தில் ஒரு பாடல் பண்ணியிருக்கிறாராம். இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக உடலை மெலிய வைத்துள்ள விக்ரம், மேக்-அப் கலைஞர்களின் வேண்டுதலுக்கிணங்க தலையையும் மொட்டையடித்திருக்கிறார்.


படத்தில் வரும் அந்தக் கேரக்டர் மிகவும் பேசப்படும் என்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.


விக்ரமிற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை கோடைவிடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.