Sunday, 23 March 2014

'சைவம்' படத்தில் ஒரு மணி மகுடமாக திகழும் நாசர்...!



நடிப்பில் தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர், தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு.


இதோ மற்றொன்று. சமீபத்தில் இயக்குனர் விஜய்யின் 'சைவம்' படப்பிடிப்பின் போது, அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதாபாத்திரத்துக்கு என்று பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டி இருந்தது , அவரது முன்தலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை.


இதனால் அவர் தற்போது நடிக்கும்  மற்ற படங்கள் பாதிக்கப்படுமோ என்று தயங்கிய போது   இயக்குனர் விஜய், ஒப்பனை கலைஞரும் சிகை அலங்கார நிபுணருமான பட்டணம் ரஷீத் அவர்களை கலந்து ஆலோசித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நாசரின் அசல் சிகை அலங்காரம் போலவே ஒரு விக் செய்தனர்.


அதன் உபயத்தில் நாசர் மற்ற படங்களில் இடையூறு இல்லாமல் நடித்தார். படத்தின் rushes பார்த்த இயக்குனர் பெருமிதத்தோடு நாசர் சார் நமக்கு கிடைத்த மிக அரிய வகை நடிகர்.


'சைவம்' படத்தில் வரும் அந்த முதியவர் கதாபாத்திரத்தில், நம் குடும்பத்தில் நாம் காணும் தாத்தாக்களை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று மெருகூட்டிய நாசருக்கு 'சைவம்' ஒரு மணி மகுடமாக திகழும் என கூறினார்.

‘எத்தனை கோடியில் படம் பண்ணுகிறோம் என்பது முக்கியமல்ல’



 ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ படங்களை அடுத்து ‘பப்பாளி’ படத்தின் மூலம் மீண்டும் கல்வியையும், காமெடியையும் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கோவிந்தமூர்த்தி. படத்தின் வெளியீடு, புரமோஷன் வேலைகளில் தீவிரம் செலுத்திக் கொண்டிருந்தவரை சந்தித்ததிலிருந்து…

‘பப்பாளி’ வழியே புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

இது முழுக்க முழுக்க பாசிடிவ் எனெர்ஜி படம். முந்தைய படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ பார்த்தவங்க பலரும் நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க. சிலர் சுமாராக இருக்கு என்றார்கள். அந்தப் படம் முழுக்க எதார்த்த மனிதர்களை பதிவு செய்திருந்தேன். அந்த எதார்த்தத்தை சொல்லவும் ஒரு அழகியல் தேவை என்பதை அந்தப்படத்தின் ரிசல்ட் எனக்கு புரிய வைத்தது. ‘பிதாமகன்’ சித்தன் கேரக்டர் அழகியல் இல்லாத ரோல்தான். அதற்கு விக்ரம் என்கிற ஹீரோ இருந்தாரே. அதுதான் எனக்கு அழகியலாக பட்டது. அப்படியான சில புரிதலோடு முதல் பாதியை காமெடியோடும், இரண்டாவது பாடியை கதையோடும் இந்தப் படத்தில் தந்திருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன்.

கல்வி, குடும்பம் என்று கதையின் களத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். படத்தில் அதை எப்படி பிரதிபலிக்கப் போகிறீர்கள்?

எல்லா காலகட்டத்துக்குமே தேவையான விஷயத்தைத்தான் எடுத்திருக்கிறேன். ஒரு பையனை பார்க்கும்போதெல்லாம் ‘நீ நல்லா வருவப்பா’ என்று பாசிடிவாக மட்டுமே அவனை உத்வேகப்ப டுத்திக்கிட்டே இருந்தால் நிச்சயம் அவன் வெற்றி பெற்றே தீர்வான். அவனுடைய முயற்சி, நம்பிக்கை எல்லாமே அந்த பாசிடிவான உத்வேக சொல்தான். அதற்காக ஏங்கி ஒரு கட்டத்தில் வெற்றியையும் அடையும் சாமான்யன்தான் என் ஹீரோ. இந்த விஷயம் இப்பவும், எப்பவும் தேவைதானே.

சிங்கம்புலி, சரண்யா பொண்வண்ணன், இளவரசு, ஆடுகளம் நரேன் இப்படி பலர் இருக்கிறார்களே?

நாயகன் செந்தில், நாயகி இஷாரா இருவரும் இளைய தலைமுறையின் சேட்டை, காமெடி, காதல் என்று வாழ்ந்திருக்காங்க. இளவரசு வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து வில்லனாக பார்த்து வரும் ‘ஆடுகளம்’ நரேன் இந்தப்படத்தில் நாயகியின் அப்பாவாக வருகிறார். முழுக்க பாசிடிவ் கேரக்டர். என் நண்பன் சிங்கம்புலி இது வரைக்கும் இல்லாத காமெடி கதாபாத்திரத்தில் வருவான். அவ்வளவு அழகான கதாபாத்திரம் அவனுக்கு.

‘நீ எதையாவது சாதிக்க விரும்பினால் திருமணத்திற்கு முன்பே சாதித்துவிடு’ என்று லியோ டால்ஸ்டாய் ஒரு இடத்தில் கூறியிருப்பார். அதை கொஞ்சம் மாற்றி யோசித்து இங்கே திருமணத்திற்கு பின்பும் சாதிக்க வழிகள் இருக்கு என்கிற விஷயத்தை இன்னும் புதுமை கலந்து சொல்லியிருக்கேன்.

இது பட்ஜெட் படம் மாதிரி தெரியுதே? எல்லா விஷயங்களையும் சமரசம் இல்லாமல் அடக்க முடிந்ததா?

பட்ஜெட் படங்கள் பணத்தை பொறுத்துதான் இங்கே தீர்மானிக் கப்படுகின்றன. ஒரு இயக்குநராக நான் என்ன நினைத்தேனோ, அந்த விஷயங்களை கொஞ்சமும் சமரசம் இல்லாமல் கொடுத்திருக்கிறேன். எத்தனை கோடியில் படம் பண்ணுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. எப்படி அழுத்தமான கதையை எடுத்துக்கிருக்கிறோம் என்பதுதான் என் பட்ஜெட் பார்முலா.

ஹீரோக்களை டம்மியாக்கவே நான் ஹீரோவாக நடிக்கிறேன்...! சந்தானம்



தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகரானவர் சந்தானம். அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் காமெடி நடிகரானார்.


சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருந்தார்கள். இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது.


ஹீரோவாக நடிப்பது ஏன் என்பது பற்றி சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஹீரோவாக நடிக்கணும், பன்ஞ் டயலாக் பேசி பத்து பேரை பறக்க விடணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனா இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவாக நடிக்க முடியும்.


அப்பாவியாகவும் இருக்கணும் ஹீரோயிசம் காட்டி கைதட்டலையும் அள்ளணும். இதை ஒரு பெரிய ஹீரோ செய்ய முடியாது. செய்தா ரசிக்க மாட்டாங்க. புதுமுகங்கள் இந்த கேரக்டரை தாங்க மாட்டாங்க. அதான் நானே நடிக்க தீர்மானிச்சேன்.


வழக்கமான என்னோட படத்துல வர்ற காமெடியை விட கூடுதலா கொஞ்சம் காமெடி சேர்த்துகிட்டு ஹீரோவாகிடவில்லை. நான் எது பண்ணினதாலும் மக்கள் ரசிச்சு கைதட்டுவாங்கன்னும் நினைக்கல.


ஸ்கிரிப்ட்டுதல ஆரம்பிச்சு நான் ஜிம்முக்கு போயி தயாரானது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருக்கோம். படம் வரும்போது அது தெரியும். என்கிறார் சந்தானம்.

முன்பு சூப்பர்ஸ்டார்,இப்ப அல்டிமேட்ஸ்டார் அசத்தும் ஷாருக்கான்...!!!



வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான்.

இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர்.

அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.

இந்த விஷயத்தை அறிந்த பாலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்கி பயிற்சி அளித்து வருகிறார்.

கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 6 பேக்ஸ் அல்லது 8 பேக்ஸ்ஸை காண ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.

கோச்சடையானில் ஷாருக்கான் ரஜினியை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. 

டானாவுக்கு பிறகு பார்ப்போம்- இயக்குனர் பொன்ராமை திருப்பி அனுப்பிய சிவகார்த்திகேயன்



வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த பொன்ராம், தன்னுடைய அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டராம் தெரிவித்தது.


தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தாக லிங்குசாமி தயாரிப்பில் தான் இந்த படம் படப்பிடிப்புக்கு போக வேண்டியது.


இன்னும் சொல்ல போனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம், ஆனால் இயக்குனரோ திட்டமிட்டபடி  இன்னும் கதையை ரெடி பண்ணவில்லையாம்.


அதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்டாகிவிட, முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு, பிறகு டாக்கிபோர்ஷனை எடுக்கலாம் என்று பொன்ராம் யோசனை சொன்னாராம்.


அதை நிராகரித்த சிவகார்த்திகேயன் நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பிறகு இந்த காம்பினேசனுக்கு ரொம்பவும் எதிர்பார்ப்பு இருக்கு, அதனால் எனக்கு விருப்பமில்லை.


எனவே இன்னும் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதோடு, தனுஷின் டானா படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டார்.


 எந்த விளம்பரமும் இல்லாமல் டானா படத்துக்கு பூஜை போடப்பட்டு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


இதனால் புள்ளி மான் வேகத்தில் கதை ரெடி பண்ணிட்டு இருக்கிறாராம் இயக்குனர் பொன்ராம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த பொன்ராம், தன்னுடைய அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டராம் தெரிவித்தது.
தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தாக லிங்குசாமி தயாரிப்பில் தான் இந்த படம் படப்பிடிப்புக்கு போக வேண்டியது.
இன்னும் சொல்ல போனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம், ஆனால் இயக்குனரோ திட்டமிட்டபடி  இன்னும் கதையை ரெடி பண்ணவில்லையாம்.
அதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்டாகிவிட, முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு, பிறகு டாக்கிபோர்ஷனை எடுக்கலாம் என்று பொன்ராம் யோசனை சொன்னாராம்.
அதை நிராகரித்த சிவகார்த்திகேயன் நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பிறகு இந்த காம்பினேசனுக்கு ரொம்பவும் எதிர்பார்ப்பு இருக்கு, அதனால் எனக்கு விருப்பமில்லை. 
எனவே இன்னும் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதோடு, தனுஷின் டானா படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டார். எந்த விளம்பரமும் இல்லாமல் டானா படத்துக்கு பூஜை போடப்பட்டு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனால் புள்ளி மான் வேகத்தில் கதை ரெடி பண்ணிட்டு இருக்கிறாராம் இயக்குனர் பொன்ராம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/cinema/20140322102323/#sthash.HLSujc4Y.dpuf