Thursday, 13 March 2014

பட வாய்ப்பு பறிபோவதற்கு காரணம் சீனு ராமசாமி தான்..இது பழிவாங்கும் செயல்...!



ஆதலால் காதல் செய்வீர், வழக்கு எண் போன்ற படங்களில் நடித்த மணிஷா யாதவ் இப்படங்களுக்கு பிறகு சிறு பட்ஜட் படங்கள் சில நடித்து வந்தார்.


பிறகு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பின் என்ன காரணம் என்று தெரியவில்லை அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.


அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


இப்போழுது அந்த படத்திலும் சிக்கல், சீனு ராமசாமிக்கும் மனிஷாக்கு ஒத்துப்போகாத நிலையில் இந்த படம் உனக்கு செட்டாகாது என மனிஷாவை கைக்கழுவ தற்போது நடிகர் சங்கத்தில் பஞ்சாயத்தில் நிற்கிறார் மனிஷா.


இடம் பொருள் ஏவல் படத்திற்காக தனக்கு வந்த படத்தை விட்டுவிட்டதாகவும் திடீர்னு இப்படி போக சென்னா தான் வீட்டிலிருக்கப்போகும் இந்த இரண்டு மாதங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் படி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் மனிஷா.

நா யாரையும் போட்டியா நினைக்கவில்லை - கவுண்டமணி...!



காமெடியில் சினிமா உலகத்தை புரட்டிப்போட்ட கவுண்டமணி, வடிவேலு என்ற இரண்டு ஜாம்பவான்களுமே சில வருடங்கள் வெள்ளித்திரையை விட்டு விலகி நின்றிருந்தனர்.


தற்போது இருவரும் தமிழ் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிருக்கிறார்கள்.


கவுண்டமணி ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் 49ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார்.


அதேபோல் வடிவேலுவும் ஜெகஜால புஜபல தெனாலி ராமன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.


ஏப்ரலில் ரிலீஸாகும் இந்த இரண்டு படமுமே முடிவடையும் கட்டத்தில் எட்டியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ்  களைகட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.


ஆக மொத்தத்தில் எப்பவும் போல கொண்டாட்டம் தான்!

கமலுடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைவதில் மகிழ்ச்சி...!



விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் உத்தம வில்லன்.


இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
பூ, மரியான் போன்ற படங்களில் நடித்த பார்வதி இந்த படத்தில் கமிட்டாகி நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் ஊர்வசி மற்றும் இயக்குனர் பாலசந்தரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.


இதற்கிடையில், உத்தம வில்லன் படத்தில் ஜெயராம் தானும் நடிக்க உள்ளதாக தனது மைக்ரோ பிலாகர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


மேலும் ஜெயராம் உத்தம வில்லன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.


ஜெயராம் உலக நாயகனுடன் தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் நடித்தவர்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கிரேசி மோகன் வசனங்கள் எழுதுகிறார். 

நடிகைகள் காதலிக்க கூடாதா..? கொலவெறியில் காஜல்...!



பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை.


 ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது.


அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு வந்தார் காஜல். அந்த நேரம் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைத்ததால் சென்னையிலேயே தங்கி விட்டார்.


அதையடுத்து ஆந்திராவுக்கு மீண்டும் அவர் சென்றபோது, பழைய தொழிலதிபர் சர்ச்சை காணாமல் போயிருந்தது. அதனால் நிம்மதியடைந்தார் நடிகை.


ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது ஒரு நபருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள் வெளியாக, மீண்டும் அதே தொழிலதிபர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.


இருப்பினும் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த காஜல்அகர்வால், தற்போது சில மீடியாக்களுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், நடிகைகள் காதலிப்பது ஒன்றும் பெரிய பாவச்செயல் அல்ல.


நடிகைகளுக்கும் மனசு உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள காஜல், தான் தொழிலதிபரை காதலிக்கவில்லை என்று மறுப்பு சொல்லவில்லை.


 மாறாக, இன்னும் மூன்று ஆண்டு கழித்து என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 

அவர் வேகத்திற்கு எங்களால் போக முடியாது...



அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.


அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.


அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.


இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல்,


அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார். ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.


அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல். அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும்,


தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.