Friday, 14 March 2014

‘ரஜினிக்கு சல்யூட் வைத்ததால் ஷாரூக்கானுக்கு....



நமது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சல்யூட் வைத்ததால், ஷாரூக்கானுக்கும் தமிழ் ரசிகர்கள் தங்கள் மனதில் இடம் தந்துவிட்டார்கள், என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.


கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், “இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுத வாய்ப்பளித்ததற்காகவும், இந்த மேடையில் பேச வாய்ப்புத் தந்ததற்காகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சவுந்தர்யாவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


நானும் நாற்பது படங்களுக்கு மேல் இயக்கிவிட்டேன். பொதுவாக மற்றவர்கள் கதையை, தட்டி சரிபார்த்து சினிமாவுக்கேற்ற மாதிரி திரைக்கதை எழுதிப் படமாக்கித்தான் எனக்குப் பழக்கம்.


 ஆனால் நான் எழுதிய கதையில் வெளியாகும் முதல் படம் கோச்சடையான்தான். அந்தப் பெருமையை எனக்கு அளித்தவர் சூப்பர் ஸ்டார்.


 கோச்சடையான் கதையைக் கேட்டதும் அவர் ரொம்ப நல்லாருக்கு ரவி.. இந்தக் கதையையே படமாக்கலாம் என்று ஒப்புதல் தந்தார்.


இயக்குநர் சவுந்தர்யா மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் அவர் எனக்கு அளித்த மரியாதை, பழகிய பண்பு..  அந்த ரத்தம் அப்படித்தானே இருக்கும்!


இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஷாரூக்கான் அவர்களே.. உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் தங்கள் மனதில் ஒரு இடம் அளித்துவிட்டார்கள்.


நம்ம தலைவர் சூப்பர் ஸ்டாருக்கு சல்யூட் அடித்தவர் என்ற வகையில் உங்களுக்கும் இதயத்தில் இடம் தந்துவிட்டார்கள். அதற்கு உதாரணம், உங்கள் சென்னை எக்ஸ்பிரசுக்கும் லுங்கி டான்ஸுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.


சூப்பர் ஸ்டார் ரஜினி இன்றைக்கு தமிழ் மக்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். அதற்கு வைரமுத்து ரஜினிக்காக எழுதிய தமிழ் வரிகளும் கூட ஒரு காரணம்,” என்றார்.

0 comments:

Post a Comment