Wednesday, 19 March 2014

இதுதாங்க சனியன தூக்கி பனியன்ல போட்ட கதை...!

சிவமயமான அந்த திடீர் புகழ் நடிகருக்கும், அவரது நெருங்கிய நண்பராகவும், அண்ணனாகவும் இருந்த ஒல்லிப்பிச்சான் நடிகருக்கும் இப்போது அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம். சிவனின் அசுர வளர்ச்சி தன் மார்க்கெட்டுக்கே வேட்டு வைப்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்தாராம். ஒரு இயக்குனர் சிவனிடம் கதை சொல்லிவிட்டு இது ஒல்லிப்பிச்சானுக்காக எழுதின கதை, உங்களுக்கும் செட்டாகும் இன்றைய டிரண்டுல உங்க படத்துக்குதான் பிசினஸ் இருக்குன்னு சொல்லியிருக்காரு. இந்த விஷயம்...

விஜய் ஆண்டனிக்கு வொர்க் அவுட்டாகாத விஜய் ராசி!

திருமணம் ஆகும் வரை தன் பெற்றோருடன் நடிகர் விஜய் குடியிருந்த வீடு சென்னை, சாலிகிராமத்தில் உள்ளது.  திருமணத்துக்குப் பிறகு நீலாங்கரையில் குடியேறினார் விஜய். அவரது பெற்றோர் பெசன்ட் நகர் பக்கம் இடம் பெயர்ந்தனர். எனவே விஜய்யின் சாலிகிராமம் வீடு சும்மாவே பூட்டிக் கிடந்தது.  சில மாதங்களில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி. சில லட்சங்கள் வாடகை கொடுத்து விஜய் வீட்டுக்கு விஜய் ஆண்டணி குடியேறியதற்கு ஒரே காரணம்தான்....

கானும் லாலும் என் படத்தில் நடிக்கட்டும்! - காமெடி பண்ணும் தயாரிப்பாளர்...!

பேராசை பெரும் நஷ்டம் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஹரிதாஸ் படத்தைத் தயாரித்த டாக்டர்.ராமதாஸுக்கு மிகச்சரியாய் பொருந்தும். சீசெல்ஸ் என்ற வெளிநாட்டில் வசிக்கும் இந்தத் தமிழர், சில வருடங்களுக்கு முன் பல கோடிகளோடு கோலிவுட்டுக்கு வந்தார். பரத் நடித்த யுவன் யுவதி என்ற படத்தைத் தயாரித்தார். அதில் 3 கோடி நஷ்டம். அடுத்து சின்னத்திரை நடிகர் விஜய்ஆதிராஜ் இயக்கத்தில் புத்தகம் என்ற படத்தைத் தயாரித்தார். அதில் 6 கோடி காலியானது. படத்தயாரிப்பில்...

ஏ.எம்.ரத்னத்துக்கு இரண்டாவதுமுறையாக அஜித் ஏன் கால்ஷீட் கொடுத்தார்? - புதிய தகவல்கள்..!

அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு தடவை கால்ஷீட் கொடுத்தாலே கடவுளின் வரம் கிடைத்த மாதிரி என்பார்கள் தயாரிப்பாளர்கள். ஏ.எம்.ரத்னத்துக்கோ அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் அஜித். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஆரம்பம் படத்தில் நடித்த அஜித், தற்போது அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒரு சில தினங்களில் வரவிருக்கும்நிலையில்,...

ஐய்யா.. டாடா, பாய்...நா டெல்லிக்கு போறேன்...! குஷ்பூ

திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள குஷ்பூ கடந்த தேர்தல் வரை சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால், இந்த முறை அவர் கட்சியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை. அநத அளவுக்கு சத்தமே இல்லாமல் இருக்கிறார் நடிகை. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் பற்றி அவர் சொன்ன சில கருத்துக்கள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக, திருச்சியில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றபோது குஷ்பூவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் செருப்பை காட்டியும் எச்சரித்தனர். அதனால்...

நியாயம் கேட்டு வந்த நடிகையை மிரட்டி அனுப்பிய நடிகர் சங்க நிர்வாகி..!

தென்னிந்திய நடிகர் சங்கம் பல விஷயங்களில் தங்களுக்கு எதிராகவே நடந்து கொள்வதாக நடிகர் நடிகைகளின் மத்தியில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது..  நடிகர் மாதவன், உட்பட பல நடிகர்களின் சம்பள பிரச்னையில் பஞ்சாயத்து நடந்தபோது நடிகர் சங்கம் நடிகர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு. இந்நிலையில் இதோ இன்னொரு குற்றச்சாட்டு! அண்மையில் இயக்குநர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார் நடிகை மனிஷா யாதவ். இடம்...

சிறப்பு கட்டுரை: தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட்!

சினிமாவை பொறுத்தவரையில் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு டிரென்ட் உருவாகிக் கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் காமெடி ஒரு டிரென்ட் ஆக இருந்தது!  இதற்கு உதாரணமாக சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற பல காமெடி படங்களை சொல்லலாம்! சென்ற ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ் சினிமா புதிய ஒரு டிரென்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பழங்கால கலைகளான தெருக் கூத்து, நாடகக் கலை, கரகாட்டம் போன்ற கலைகள்...

விஷால் லட்சுமி மேனன் காதலை வெளிச்சம் போட்டு காட்டிய பார்த்தீபன்...!

விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் காதல் என்பதெல்லாம் போன நூற்றாண்டோடு முடிந்த போன விஷயம். இந்த நூற்றாண்டில் அவருடைய காதலி 17 வயசே ஆன லட்சுமிமேனன் தான் என்கிறார்கள். தனது ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனை ஹீரோயினாக்கிய விஷால் அடுத்த படமான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் அவரையே கமிட் செய்து விட்டார். இதுவரை தொப்புள் கவர்ச்சி கூட காட்டாத லட்சுமிமேனன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் மட்டும் விஷாலுக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்திருக்கிறார். அதுபோக படத்தில்...

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்...!

விஜயகாந்த் நடித்த அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பவர் நவ்னீத் கவுர். இவர் பஞ்சாபில் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏவை திருமணம் செய்துகொண்டார். அவர் கூறியதாவது:மகாராஷ்டிராவில் அமராவதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. சிவசேனா கட்சியை சேர்ந்த அத்சுல் எனக்கு போன் செய்து தேர்தலில் போட்டியிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுவதுடன்...

உண்மையை போட்டு உடைத்த ஜெயம் ரவி ...!

சாக்லெட் ஹீரோ இமேஜை உடைக்க போராடுகிறேன் என்றார் ஜெயம் ரவி.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது: பேராண்மை, ஆதி பகவன், நிமிர்ந்து நில் என ஆக்ஷன் படங்களில் நடித்தும் சாக்லெட் ஹீரோ இமேஜ்தான் தொடர்கிறதே என்கிறார்கள். இமேஜ் வட்டத்துக்குள் நான் சிக்க விரும்பாவிட்டாலும் அந்த இமேஜ் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அதை உடைக்கத்தான்...

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரஜினி முருகனா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் கமர்ஷியல் ஹீரோ சிவகார்த்திகேயன்! இவர் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘மான் கராத்தே’. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டாணா’.  இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு பிறகு ஹிட் அடித்த, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேன். இந்தப்...

வத்திக்குச்சியிலிருந்து குத்தூசிக்கு மாறியிருக்கும் திலீபன்...!

அஞ்சலியோடு ஜோடியா இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு பிறகு திலீபன் தற்போது குத்தூசி திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. லஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம். தியாகு தயாரிக்க சீனுராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த சிவசக்தி, தற்போது குத்தூசி திரைப்படத்தை இயக்கிவருகிறாராம். மேலும் இப்படத்தை பற்றி பேசிய...

தாதாவாகவும் ,ஐ.டி.இளைஞனாகவும் காட்சியளிக்கப்போகிறார் சூர்யா...!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துவருவதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் பரவியிருந்தன. ஆனாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே...

ஷகிலாவா அப்படின்னா யாரு..? ப்லேட்டை மாற்றிய அஞ்சலி...!

அஞ்சலியை மீண்டும் காணவில்லை. அமெரிக்காவில் தனது தொழிலதிபர் காதலருடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் திருமணம் செய்யப் போகிறார் என்று ஊடகங்கள் சமீபமாக செய்தி வெளியிட்டு வந்தன. இன்னும் சிலர், அமெரிக்காவில் இருக்கும் அஞ்சலி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். விரைவில் புதுப்பொலிவுடன் சினிமாவில் நடிப்பார் எனவும் பேசி வந்தனர். இந்த இரண்டு விடயங்களுமே அறுதியிட்டு சொன்ன ஒரு விஷயம், அஞ்சலியை காணவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில்...

இப்படி பேசி,பேசியே பெரிய ஆளா ஆக்கிடுவாங்க...இவங்க...!

எந்த ஒரு படம் என்றாலும் அதற்கான இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் சத்யம் திரையரங்கில் நடைபெறுவது வழக்கமான ஒன்று . சமீபத்தில் பிரம்மாண்டமாக கோச்சடையான் இசைவெளியீடும் அங்கு தான் நடைபெற்றது இதில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் ஸ்டார்ஸ் ஷாரூக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் கலந்துகொண்டபோது கூட எந்த ஒரு சச்சரவும் இல்லை . ஆனால் நேற்று முன்தினம் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திற்கு அவ்வளவு கூட்டம் சற்று பவர் ஸ்டார்...

அடம்பிடித்த சசிகுமாரை அடக்கிய பாலா...!

இயக்குனரும் நடிகருமான சசிக்குமாரை தாடியில்லாமல் காண்பது என்பது அரிதிலும் அரிது என்பதை விட, தாடியில்லாமல் சசிக்குமார் இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட டிரிம் செய்யப்பட்ட அழகான தாடியுடன் இதுவரை தோன்றிவந்த சசிக்குமார், விரைவில் துவங்கவுள்ள பாலா படத்திற்காக தாடியை எடுக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் கிராமத்து மற்றும் முரட்டுக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சசிக்குமாருக்கு அவரது தாடி ஒருவகையில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்குக்...