Sunday, 23 March 2014

திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!

சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படம் ‘வேட்டைக்காரன்’. குறுகிய கால தயாரிப்பு. எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனங்கள். கே.வி.மகாதேவன் இசை. 100 நாள் படம். 1965ல் ஸ்ரீதரின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான படம் ‘வெண்ணிற ஆடை’.  கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என நான்கு பொறுப்பையும் ஸ்ரீதர் கவனித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்தனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். அதேபோல்...

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு - அதிரடி முடிவு...!

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர் மவுனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996–ல் நடந்தது. அப்போது நடந்த சட்டமன்ற...

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பாயும் புகார்கள்....!

மதுரவாயல் அருகே உள்ள வானகரம்–அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து...

விக்ரமின் அடுத்த படம்: விஜய் மில்டன் இயக்குகிறார்..!

 விக்ரம் நடிக்கும் புதிய படத்தை ‘கோலிசோடா’ இயக்குநர் விஜய் மில்டன் இயக்கவிருக்கிறார். இந்தப்படத்திற்கு ‘இடம் மாறி இறங்கியவன்’ என்று பெயரிடப் பட்டுள்ளது. விக்ரம் மாறுபட்ட கதாபாத் திரங்களில் நடித்து வரும் ‘ஐ’ படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. வரும் கோடை விடுமுறை யில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலை யில் இப்படத்தை அடுத்து ஒளிப்பதிவாளரும், இயக்கு நருமான விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது...

'சைவம்' படத்தில் ஒரு மணி மகுடமாக திகழும் நாசர்...!

நடிப்பில் தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர், தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. இதோ மற்றொன்று. சமீபத்தில் இயக்குனர் விஜய்யின் 'சைவம்' படப்பிடிப்பின் போது, அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதாபாத்திரத்துக்கு என்று பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டி இருந்தது , அவரது முன்தலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. இதனால் அவர்...

‘எத்தனை கோடியில் படம் பண்ணுகிறோம் என்பது முக்கியமல்ல’

 ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ படங்களை அடுத்து ‘பப்பாளி’ படத்தின் மூலம் மீண்டும் கல்வியையும், காமெடியையும் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கோவிந்தமூர்த்தி. படத்தின் வெளியீடு, புரமோஷன் வேலைகளில் தீவிரம் செலுத்திக் கொண்டிருந்தவரை சந்தித்ததிலிருந்து… ‘பப்பாளி’ வழியே புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்? இது முழுக்க முழுக்க பாசிடிவ் எனெர்ஜி படம். முந்தைய படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ பார்த்தவங்க பலரும்...

ஹீரோக்களை டம்மியாக்கவே நான் ஹீரோவாக நடிக்கிறேன்...! சந்தானம்

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகரானவர் சந்தானம். அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் காமெடி நடிகரானார். சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருந்தார்கள். இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது. ஹீரோவாக நடிப்பது ஏன் என்பது பற்றி சந்தானம் விளக்கம்...

முன்பு சூப்பர்ஸ்டார்,இப்ப அல்டிமேட்ஸ்டார் அசத்தும் ஷாருக்கான்...!!!

வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான். இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர். அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது....

டானாவுக்கு பிறகு பார்ப்போம்- இயக்குனர் பொன்ராமை திருப்பி அனுப்பிய சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த பொன்ராம், தன்னுடைய அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டராம் தெரிவித்தது. தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தாக லிங்குசாமி தயாரிப்பில் தான் இந்த படம் படப்பிடிப்புக்கு போக வேண்டியது. இன்னும் சொல்ல போனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம், ஆனால் இயக்குனரோ திட்டமிட்டபடி  இன்னும்...

சமுத்திரகனியை பாராட்டிய சகாயம் IAS ...!

நிமிர்ந்து நில் படம் பார்த்து பலரும் தன்னை பாராட்டினர்கள் என்று சமுத்திரகனி தெரிவித்தார். அதில் முக்கியமாக சகாயம் IAS தன்னிடம் பேசும்போது ஊழலுக்கு எதிராக இந்த உலகில் யார் குரல் கொடுத்தாலும் அவன் என் நண்பன் என்று சொல்லி பாராட்டினார்.  அவரின் ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து’  என்ற வாசகத்தை தான் படத்தில் பயன்படுத்தினேன், அவர் அழைத்து பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது. ஜெயம் ரவியின் கதாபாத்திரதின் பெயர் அரவிந்த் என்று இருப்பதால்...

படத்தில் நடிக்க சம்பளம் தேவையில்லை...!காரணம் சொல்லும் நடிகை...!

வழக்கு எண் 18/9, படத்தில் பெண் தொழில் அதிபராக நடித்து புகழ்பெற்றவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளியாகி உள்ள நிமிர்ந்து நில் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.  "பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் பணம் வாங்காமலும் நடிக்க தயார்" என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை சினிமால நடிக்கிறதுக்கு அனுமதிக்கல....

எம்.ஜி.ஆரை புகழ்ந்து சிவாஜி பாடிய பாடல்...!

ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார். ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு. 'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன. அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்! பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக...

இவுங்க தாங்க சொந்த தியேட்டர்ல படம் காட்ரவங்க...!

சிவாஜி குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 13ந் தேதி ரிலீசானது. கும்கி படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு சரவணன் இயக்கும் படம் என்பதால்...

பாடல்களோடு வருகிறார் தெனாலி ராமன்!

நடிகர் வடிவேலுவின் ரீ-என்டிரி படமான ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’  படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ’ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.  ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக...