Sunday, 16 March 2014

பாலாவின் பேச்சால் கலங்கிய விஷால்...!

விஷால் நடிப்பிலும் தயாரிப்பிலும் இயக்குனர் திரு இயக்கியிருக்கும் ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(13.03.14) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், விஜய் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு, விக்ராந்த், சாந்தனு, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில், வழக்கமான வாழ்த்துகள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான பேச்சுக்களும் இடம்பெற்றன. இயக்குனர் பாலா பேசியபோது “நான்...

மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் விமான ஓட்டிகள் அறையில் புகைபிடித்தார், ஜாலியாக பேசினார் இளம் பெண்..!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் என்ற இளம் பெண் மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி அப்துல் ஹமீது கடந்த 2011ம் ஆண்டு என்னை விமானத்தில் பைலெட்கள் அறைக்கு அழைத்து சென்றார் என்று கூறியுள்ளார். மேலும் மிகவும் ஜாலியாக பைலட்கள் பேசினார்கள் என்றும் முழு விமானம் முழுவதும் சுற்றினோம் என்றும் கூறியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் நானும் எனது தோழி ஜான் மாரியும் பூகெட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு காத்திருந்தோம். அப்போது...

நவீன யுக பாசமலர்கள் இவங்க தான்...!

காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது வாயை மூடி பேசவும் என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார். அடுத்ததாக ஒரு ஜாலியான காதல் கதை ஒன்றை தயார் செய்து தனுஷிடம் சென்று கதையை சொல்லி கால்ஷிட் கேட்டுள்ளார். கதையை கேட்டதும் மிகவும் ஆர்வமான தனுஷ், இதுமாதிரியான கதையைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். திரைக்கதையை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மிகவும் குஷியான பாலாஜி மோகன் தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில்...

மோகன்லால் புலம்பிய இயக்குனர்...!

தமிழில் மோகன்லால், ஜீவா நடித்த அரண் என்ற படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இப்படம் மலையாளத்தில் கீர்த்தி சக்ரா என்ற பெயரிலும் வெளியானது. மேலும் மோகன்லால் நடித்த கந்தகார், குருசேத்ரா ஆகிய படங்களையும் மேஜர் ரவி இயக்கினார். இந்நிலையில் இந்திய எல்லை பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார். இப்படத்தில் நடிக்க மோகன்லாலிடமே கால்ஷீட் கேட்டு வந்தார். கால்ஷீட் தந்துவிடுவார் என்று காத்திருந்த...

ட்ரைலரில் நம் வாய்யை மூட வைத்தார் இயக்குனர் பாலாஜி மோகன்...!

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான், நஸ்ரியா நடிப்பில் வாய்யை மூடி பேசவும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். குறும்படத்திலே தனது திறமையை காட்டியவர் பாலாஜி பின் வெள்ளித்திரையிலும் அவரது திறமை வெளிப்பட்டதை காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அவரது இரண்டாவது படமான வாயைமூடி பேசவும் திரைப்படத்தின் இசைவெளியீடு நேற்று சத்யம் சினிமாஸில் வைத்து வெளியிட்டுள்ளனர். மணிரத்னம், தெலுங்கு...

அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ருதிஹாசன்...!

சிவாஜிகணேசன்-கமல்ஹாசன் இருவரும் அப்பா மகனாக நடித்த படம் தேவர்மகன். இந்த படத்தில் சிவாஜியை போற்றும்படியாக அமைந்த போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை சில குழந்தைகளுடன் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதிஹாசன். அதிலிருந்து தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்த ஸ்ருதி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும் பிரவேசித்தார். அதையடுத்து நடிகை என்ற அரிதாரத்தை பூசிக்கொண்டபோதும், தொடர்ந்து பின்னணியும் பாடிவரும்...

இரட்டை வெடம் போடுவதில் புத்திசாலி ....உலகநாயகன்...!

'உத்தம வில்லன்' படத்தில் கமல் டபுள் ரோலில் நடிக்கிறார். உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கேரக்டரிலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரம் கேரக்டரிலும் நடிக்கிறார். மனோரஞ்சனின் குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார்.மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார். எட்டாம் நூற்றாண்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ம் நூற்றாண்டில் சினிமா ஸ்டார் கமலின் காதலியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். சர்வாதிகாரி...

சொகுசு பங்களாவில் வி.ஐ.பிக்களுடன் நடிகை நக்மா.. காரணம் என்னவோ...!

பாட்ஷா, காதலன், சிட்டிசன், வில்லாதி வில்லன், போன்ற பல படங்களில் நடித்த நடிகை நக்மா தீவிர அரசியலில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் கட்சியின் மூலம் தனது சேவையை செய்து வரும் நக்மா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்டிருந்தார். நேற்று வெளியிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் நக்மாவுக்கு மீரட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நக்மா காங்கிரஸ் தலைமையிடம் ராஞ்சி தொகுதியைத்தான் கேட்டிருந்தார்....

தல, தளபதியோடு மட்டுமே டீல் வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் ....!

'தீனா' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம். முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், 'துப்பாக்கி'யின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார். இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக...

கதை தேடும் ரஜினியுடன் ஒரு சந்திப்பு...!

'கோச்சடையான்’ படத்துக்காகத் தான் எழுதிய பாடல் வரிகளை வாசிக்கக் கொடுக்கிறார் 'கவிப்பேரரசு’ வைரமுத்து. வாசித்து முடித்து நிமிர்ந்ததும், 'எப்படி இருக்கு?’ என்று ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார். எத்தனை உயரம் தொட்டாலும், அந்த ஆர்வமும் துடிப்பும் வைரமுத்து ஸ்பெஷல்! ''கோச்சடையான் என்கிற படைத்தலைவன், ஒரு பெரிய போரில் வெற்றிவாகை சூடித் திரும்புகிறான். அவனுக்குப் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவு நல்ல பெயர். அவன் வீரன். அதே நேரத்தில் ஞானம் நிறைந்தவன்....

இனத்தோடு ஒன்றிய சரிதாவுக்கு சபாஷ்...!

ஈழத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பற்றி படம் எடுத்து வருகிறார் சந்தோஷ் சிவன். ஆங்கிலத்தில் சிலோன் என்ற பெயரிலும் தமிழில் இனம் என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதில் அரவிந்த் சாமி, சரிதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சரிதா இப்படத்தில் சுனாமி அக்கா என்ற பெயரில் சுனாமியில் குடும்பத்தை இழந்து, அனாதை இல்லம் நடத்தி வரும் ஒரு பெண்ணாக நடிக்கிறார். ஈழத்தமிழர்களின் நிலையை எடுத்துறைக்கும் ஒரு படமாக இனம் தயாரிக்கப்பட்டுள்ளது,...

நடிகையை ஆபாசமாக படம் எடுத்த பட அதிபர் ரவிதேவன்...நடந்த்து என்ன..?

விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமம் காவேரி தெருவை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (18). சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். உயிருக்கு உயிராக, நாடோடி பறவை போன்ற படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது ரவி தேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கியதாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். தாம்பத்ய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய...

மீடியாக்களின் டார்ச்சரால் கோபத்தில் உளறிய கமல்...!

ரஜினி, கமல் மாதிரியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றாலே ஊடகங்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸை சாப்பிட்ட திருப்தி தான். அந்தப்படத்தை ஆரம்பிக்கும் போதே ஆளாளுக்கு ஒரு கதையை எழுதி அதை படத்தின் கதையாக்கி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள். இந்த மாதிரியான மீடியாக்களின் சின்சியர் வேலைகள் பல நேரங்களில் சம்பந்தப்பட்ட படங்களுக்கு எதிர்வினையைத் தான் உண்டு பண்ணியிருக்கின்றன. இதையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்த கமல் தனது ‘உத்தம வில்லன்’ படத்தின் கதையை வேண்டுமென்றே...

சென்டிமெண்ட்டை மாற்றாத விஜய்...!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய படத்தின் முக்கிய வில்லன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகரான நீல் நித்தின் முகேஷ் விஜயின் வில்லனாக நடிக்கவுள்ளதாக முருகதாஸ் அறிவித்துள்ளார். வங்காள நடிகரான தோட்டா ராய் இப்படத்தின் வில்லனாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் முக்கிய வில்லன் இல்லை என்றும், முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபரைத் தேடிவருவதாகவும் முருகதாஸ் முன்னர் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. முருகதாஸ்...

நான் ஸ்டாப் - திரைவிமர்சனம்...! நான் ஸ்டாப் ஆக்‌ஷன் தான்...!

150 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்படுகிறது ஒரு தனியார் விமானம். இதில் பயணிகளின் ரகசிய பாதுகாவலராக பயணிகள் போல் நாயகன் நீசன் பயணிக்கிறார். இவருடன் மற்றொரு காவலரும் செல்கிறார். 6 வயது சிறுமி இறந்த துக்கத்தில் பயணம் செல்கிறார் நீசன். இந்நிலையில் நீசனின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. இதில் விமானம் நல்லபடியாக போய் சேர வேண்டுமானால் என்னுடைய அக்கவுண்ட் நம்பருக்கு 150 மில்லியன் டாலர் பணத்தை செலுத்த வேண்டும், இல்லையெனில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை...