Friday, 21 March 2014

ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. சந்தானத்தின் கலகல பேட்டி

என்னது… சந்தானம், ஹீரோவா நடிக்கிறானா?’னு அதிர்ச்சியாகி நம்ம ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்தடுத்துப் பேசினாங்க. ‘மச்சான், எங்களுக்கு ஃப்ரெண்டா வந்து காமெடி பண்ணுவ. இப்ப நீயே ஹீரோ. இதுல உனக்கு யாரு ஃப்ரெண்டு?’னு போன்ல கேட்டான் ஆர்யா. ‘மச்சான் ஹாலிவுட்ல அர்னால்டுக்கு எல்லாம் ஃப்ரெண்டே கிடையாதுடா.  தனியா வந்து, தனியாவே ஃபைட் பண்ணிப் பட்டையைக் கிளப்புவாரு. அப்படித்தான் மச்சான் இதுல நான்’னு சொன்னேன். அவன் எகிறிக் குதிச்சுச் சிரிச்சது இந்த எண்ட்ல...

வரலெட்சுமியை சினிமாவை விட்டு ஓட வைத்தது பாலா தானா?

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார். பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே. வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம். மேலும்...

அமலாபாலை கூட்டிக்கொண்டு காட்டுக்குப் போகும் டைரக்டர் : எதுக்குன்னு மட்டும் கேட்காதீங்க…

‘நிமிர்ந்து நில்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார் டைரக்டர் சமுத்திரக்கனி. பல மாதங்களாக தயாரிப்பில் கிடந்த படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டதில் கொஞ்சம் மன வேதனையுடன் தான் இருந்தாராம் சமுத்திரக்கனி. ”என் எதிரிக்குக் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது” என்று தான் அந்த நேரத்தில் யோசித்தாராம் சமுத்திரக்கனி. இதனால் அடுத்த படத்தை ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கும் அவர் அந்தப்படம் முழுவதையும்...

ஈட்டியாக பாயும் அதர்வா!

ஸ்ரீதிவ்யா என்று சொல்வதைவிட ஊதா கலரு ரிப்பன்... என்று சொன்னால் தான் பலருக்கும் நினைவுக்கு வருவார் அந்த நடிகை. சிவகார்த்திகேயனோடு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா இப்போது பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து இந்த ஊதா கலரு ரிப்பன் அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஈட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ரவி அரசு இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ராஜா...

மான் கராத்தே இசை விமர்சனம்

எதிர்நீச்சல்’ ஆல்பத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் இன்னொரு ஆல்பம் என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதோடு, ஸ்ருதிஹாசன், தேவா, ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன் என பாடகர்களிலும் வெரைட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மற்ற ரசிகர்களைவிட ‘மான் கராத்தே’ ஆல்பம் எப்படி வருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ‘தல தளபதி’ ரசிகர்களுக்குதான் ஆர்வம்...

பரத்தின் ஐந்தாம் தலைமுறை! ஒரு சிறப்பு பார்வை...!

பரத் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ’ஐந்து ஐந்து ஐந்து’.  இந்தப் படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ’கில்லாடி’.  அத்துடன் ‘கூதரா’ என்ற மலையாள படத்திலும் நடித்து வரும் பரத், தமிழில் அடுத்து ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘ராஜம் புரொடக்‌ஷன்ஸ்’  மற்றும் ‘கவிதாலயா’  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தின்...

விஜய்க்கு ஈடு கொடுப்பாரா அனிருத்?

துப்பாக்கி’,  ‘தலைவா’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் ஒவ்வொரு பாடலை பாடிய விஜய், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்திற்காகவும் ஒரு பாடலை பாட இருக்கிறார்! ‘துப்பாக்கி’யில் ஹாரிஸ் ஜெயாராஜ், ’தலைவா’வில் ஜி.வி.பிரகாஷ்குமார், ‘ஜில்லா’வில் இமான் ஆகியோர் இசையில் பாடிய விஜய் இப்படத்தில் அனிருத் இசையில் பாட இருக்கிறார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸுடன் அனிருத் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே...

அமரன் - திரைவிமர்சனம்...!

மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ அமரன், நண்பர்களின் அவமானத்திற்கு பிறகு மதுரையில் உள்ள தனது அத்தையின் காய்கறிக்கடையில் வேலை செய்கிறார். அங்கு காய்கறி வாங்க வந்த போலிஸாருடன் சண்டை போடுவதோடு, போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார். இதனால் பயந்து போன அமரனின் அத்தை, அமரனை சென்னைக்கு அனுப்பிவிடுகிறார்.சென்னைக்கு செல்லும் ரயிலில் நாயகி சோனுவை சந்திக்கும் அமரன், அவர் மீது காதல் கொள்கிறார்....

புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தரும் டி.இமான்!

விஜய் டி.வி.யின் ‘ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்த திவாகருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வழங்கிய டி.இமான், அதற்கடுத்து கேரளாவை சேர்ந்த கண்பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியை ஒரு படத்தில் பாட வைத்தார்! இப்படி நிறைய புதியவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்கி வரும் டி.இமான், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சரத் சந்தோஷ் என்ற இளைஞருக்கும் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இமான் இசை அமைக்கும் ’பஞ்சுமிட்டாய்’...

ரசிகர்களை கடுப்பேத்தும் பார்ட் - 2 படங்கள்...! மாறுவார்களா இவர்கள்...!

சமீபகாலமாக வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் படமெடுப்பது தொடர்ந்து வருகிறது. சிங்கம்-2, பீட்சா-2 வில் ஆரம்பித்தது விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என பல படங்களின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா-சந்தானம் ஆகியோர் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம். இந்த படத்திலும் ஆர்யா-நயன்தாரா ஜோடி சேருவதோடு, இன்னொரு நாயகியாக தமன்னாவும் நடிக்கிறாராம். வழக்கம்போல்...

சந்தானத்தை ஓட,ஓட விரட்டிய சூரி...!

வடிவேலு வீழ்ச்சியினால் தனது காமெடிகளைக் கொண்டே முன்னணி காமெடியன் ஆனவர் சந்தானம். அதோடு சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்டார். ஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ஆல் இன் ஆல் அழகுராஜா, இது கதிர்வேலன் காதல் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களே ஊத்திக்கொண்டதால், இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு சந்தானத்தின் மீதான மோகம் குறைந்து விட்டது.  மாறாக,...

இன்றைய சினிமா; குக்கூ - திரைவிமர்சனம்!!!...சபாஷ்...!

தயாரிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இயக்கம் : ராஜு முருகன் நடிப்பு : தினேஷ், மாளவிகா, ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஒளிப்பதிவு : பி.கே.வர்மா இசை : சந்தோஷ் நாராயணன் எடிட்டிங் : ஷண்முகம் வேலுச்சாமி பஸ்களிலும், ரயில்களிலும் நாம் பயணிக்கும்போது எத்தனையோ பார்வையற்றோரைக் கடந்து வந்திருப்போம். நம்மைப் பொறுத்தவரை அவர்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள்! ஆனால், அவர்களுக்கும் ஒரு உலகம் இருக்கிறது. அவர்களுக்கும் பார்வை இருக்கிறது, ரசனை இருக்கிறது, அன்பு இருக்கிறது,...

நான் என்ன அடியாட்களை வெச்சு கட்ட பஞ்சாயத்தா நடத்துறேன் –டென்ஷனான சிவகார்த்திகேயன்

மான் கராத்தே பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதற்காக மான் கராத்தே பட குழுவினர் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் தயாரிப்பாளர் மதன், சிவகார்த்திகேயன், அனிருத், ஒளிபதிவாளர் சுகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் திருக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தை பற்றி மட்டுமன்றி பத்திரிகையாளர்கள் மான் கராத்தே இசை வெளியீட்டின் போது “பவுன்சர்”களால் நடந்த குளறுபடிகளால் நடந்த பிரச்சனைகளை பற்றி சரமாரியாக கேள்விகனைகளை...

தல படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர்...!

ஒரு திரைப்படத்தின் வெற்றியில் அப்படத்தின் கதை, ஹீரோவிற்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பது இசை. பெரும்பாலான பிரபல இயக்குனர்கள் தங்களின் படங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இசையமைப்பாளர்களையே அணுகிவந்துள்ளனர்.  குறிப்பாக மணி ரத்னம் படங்களுக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளனர். பாடல்களும் மாபெரும் வெற்றிப் பாடல்களாகவும் உருவெடுக்கும். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.  இயக்குனர்...

விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு கட்டம் கட்டிய விஷால்?

திரைத்துறையில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்வத் ஒன்றும் புதிதல்ல. ஒரு இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ சாதிக்க நினைத்துப் பின்னர் அதே திரைத்துறையில் தான் விரும்பி வந்த வேலையில் சாதிக்காமல் மற்றொரு வேலையினைச் செய்துவருபவர்களும் ஏராளம். இன்றைய சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் ஹீரோவாகும் எண்ணத்துடன் திரைத்துறையில் நுழைந்து, பின்னர் தனக்கு இயக்கம்தான் சரிப்பட்டுவரும் என்று இயக்குனராகப் புகழ்பெற்றும் விளங்குகின்றனர். அந்தவகையில் ஒரு...

கேரள நாட்டிளம் பெண்களுடனே - திரைவிமர்சனம்...!

நடிகர் : அபி சரவணன் நடிகை : காயத்ரி, தீக்சிதா, அபிராமி இயக்குனர் : எஸ்.எஸ்.குமரன் இசை : எஸ்.எஸ்.குமரன் ஓளிப்பதிவு : யுவா ஞானசம்பந்தம் சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் தமிழ்ப் பெண்ணான ரேணுகாவை மணக்கிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் நாயகன் அபி சரவணன். ஞானசம்பந்தம், ரேணுகாவை மணந்தாலும், காதலித்த கேரளப் பெண்ணை மணக்க முடியாமல் போன வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் தன்...

நல்ல படம் பார்க்க விரும்புவோர்க்கு ஒரு நற்செய்தி...!

அறிமுகப் படத்திலேயே தேசிய விருதுகளை வெல்வது அவ்வளவு ஒன்றும் எளிய விசயமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனை எளியதாக்கி, இரண்டு தேசிய விருதுகளைத் தனது அறிமுகப்படத்திலேயே வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படத்தின் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜாவிற்கு இது அறிமுகப்படம். ஆனால் படம் பார்த்தவர்கள் இவர் அறிமுக இயக்குனர்தானா என்று வியக்குமளவிற்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக...