Tuesday, 18 March 2014

“ திரிசா இலியானா நயன்தாரா” - இது நடிகை பேர் இல்லிங்க..இது ஒரு படத்தோட பேரு...!



இசையமைப்பாளராக ஜொலித்துவந்த ஜி.வி.பிரகாஷ்குமார் “ மதயானைக்கூட்டம்” திரைப்படத்தைத் தயாரித்து தயாரிப்பாளரானார்.


அத்துடன் நிற்காமல் தற்பொழுது “பென்சில்” படத்தில் நடித்துவருவதன் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார்.


பென்சில் திரைப்படத்தில் இவரின் நடிப்பினைப் பார்த்த அனைவரும் பாராட்டிவருவதோடு, பிரபல ஹீரோக்களும் இவரைப் பாராட்டிவருகின்றனர்.


இந்நிலையில் நடிப்பதா, இசையமைப்பதா என்ற குழப்பத்தில் இருந்துவந்த ஜி.வி.பிரகாஷ் தற்பொழுது பென்சில் திரைப்படத்திற்குப் பிறகு மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.



பென்சில் படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள இப்படத்திற்கு “ திரிசா இலியானா நயன்தாரா” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், ரிபெல்
ஸ்டுடியோஸ் இப்படத்தினைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


அறிமுக இயக்குனர் ஆதிக் இயக்கவுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.


 இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment