Saturday, 15 March 2014

நான் தேடும் ஹீரோயின் இப்ப இல்ல... பாரதிராஜா ஆவேசம்...!



ராட்டினம் படத்தை இயக்கிய கே எஸ் தங்கசாமி தற்போது எட்டுதிக்கும் மதயான திரைப்படத்தில் மூழ்கியிருக்கிறார்.


இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசியுள்ளார் பாரதிராஜா.


ராட்டினம் என்று படத்தின் பெயரை கேட்டதும் இப்படத்தை பார்க்க தவிர்த்த பாரதிராஜா, அதன் பின்னர் மலேசியாவிலிருந்து அவரது மகள் பேசியபோது இப்படத்தை பற்றி கூறியதால் படத்தை பார்த்தேன்.


பிறகு தான் யோசித்தேன் இப்படத்தை பார்க்காமல் தவிர்த்தது எத்தனை தவறு என்று கூறியுள்ளார் பாரதிராஜா.


மேலும் தங்கசாமியை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா தற்போதைய படங்களில் லிப் மூமண்ட்கேற்ப பாடல்காட்சிகள் அமைவதில்லை என்று கூறியுள்ளார்.


பாடல் வரிகளுக்கேற்ப வடிவம் அமைப்பதில்லை சுங்கிடிச்சேலையை பற்றிய வரிகளில் மாடர்னாக வெளிநாட்டை காண்பிக்கிறார்கள் இதன் இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை.


பாடல் வரிகளை எழுதுபவர்களாவது தனது வரிகளுக்கேற்ப காட்சிகள் வேண்டுமென எடுத்து கூறியிருக்கலாம். ஆனால் அதுவும் இல்லை என தனது வருத்தத்தை தெரிவித்து புதியதலைமுறைகளுக்கு இதைபற்றி வலியுறுத்தும் விதமாக பேசினார் பாரதிராஜா.

0 comments:

Post a Comment