Thursday, 20 March 2014

ஹீரோவின் இமேஜை கெடுக்கும் ஸீரோக்கள்...!



தமிழர்களின் இசை ரசனையில் கானா பாடல்கள் பெரும் இடத்தைப் பெற்றுவந்திருக்கின்றன. அதேபோலவே கானா பாடகர்களுக்கும் தனி இடம் உண்டு. இசையமைப்பாளர் தேவாவின் அனேகப் படங்களில் கானா பாடல்களைக் கேட்கமுடியும்.


சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இடம்பெற்ற கானா பாடலான ”வாள மீனுக்கும் விளாங்கு மீனுக்கும்” கல்யாணம் பாடல் அப்படத்தின் வெற்றிக்குப் பேருதவி புரிந்தது நினைவிருக்கலாம். அந்தவகையில் இக்காலகட்டத்தின் மிகப் புகழ் பெற்ற கானா பாடகர்களான கானா பாலாவும், வேல்முருகனும் கலக்கிவருகின்றனர்.


கானா பாலா பாடிய “ ஆடி போனா ஆவணி” பாடலும், சூது கவ்வும் திரைப்படத்தில் பாடி, நடித்த “ காசு பணம் துட்டு” பாடலும் இன்றும் பலராலும்
முனுமுனுக்கப்படும் பாடலாக இருந்துவருகிறது. தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமடைந்துவரும் பாடகரான கானா பாலா விரைவில் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான கானா பாலா நடிக்கவுள்ள இத்திரைப்படமும், சென்னையைச் சார்ந்த கதையம்சம் கொண்ட கதையாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரு பாடகராக கொடிகட்டிப் பறக்கும் கானா பாலா, ஹீரோவாகவும் கலக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:

Post a Comment