Monday, 17 March 2014

கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகும் படங்கள் - சிறப்புக் கட்டுரை!



இந்த ஆண்டு கோடைவிடுமுறையைச் சிறப்பான முறையில் கொண்டாட மெஹா ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. அவற்றைப் பற்றிய சிறப்புப் பார்வை இதோ...


ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும்
கோச்சடையான் திரைப்படம் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்குவரவிருக்கிறது. சௌந்தர்யா அஸ்வின் இயக்கியிருக்கும் இப்படம்
பர்பாமென்ஸ் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியத் திரைப்படமாகும். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, நடித்து, இயக்கியிருக்கும் விஷ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான விஷ்வரூபம் -2 திரைப்படமும் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாத வெளியீடாக அமையலாம்.


தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றுடன் விஷாலின் நான் சிகப்பு மனிதன், வடிவேலுவின் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன், கவுண்டமணியின் 49-O முதலான படங்கள் இவ்வாண்டு கோடையில் வெளியாகி ரசிகர்களைக் குளிர்விக்கவுள்ளன. இவை தவிர அதிகப் பிரபலமில்லாத திரைப்படங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஜினி, கமல்,விக்ரம்,விஷால்,கவுண்டமணி, வடிவேலு ஆகிய திரைத்துறை ஜாம்பவான்களின் திரைப்படங்கள் இவ்வாண்டு கோடையில் வெளியாகவிருப்பதால் எல்லாத் தரப்பு ரசிகர்களும் கொளுத்தும் கோடையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

0 comments:

Post a Comment