Monday, 24 March 2014

கண்டிஷன்களைப் போட்டு கதறடிக்கும் கதாநாயகன்!

அட்டகத்தி படம் வெளியாகி இரண்டு வருடங்களாகிவிட்டன. அந்தப் படத்தில் அறிமுகமான தினேஷின் இரண்டாவது படமாக குக்கூ தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ் ஆகிய இரண்டு படங்கள் தயாரிப்புநிலையில் உள்ளன. அட்டகத்தி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் இளம் ஹீரோக்களுக்கான பந்தயத்தில் தினேஷ் மிகவும் பின்தங்கியே இருப்பதால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லையோ? என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை...

நக்மாவை கட்டிப்பிடித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., அத்துமீறல்!

சமீபகாலமாக நடிகைகளிடம் நரைமுடி அரசியல்வாதிகள் அத்துமீறி நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது உ.பி மாநிலம் மீரட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நக்மாவிடமும் ஒரு நரைமுடி எம்.எல்.ஏ அத்து மீறி நடந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மீரட் தொகுதியில் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நக்மா. அப்போது ஹாபூர் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். அங்கு பெருந்திரளாக பொதுமக்கள் கூடியிருந்ததால்...

சரத்குமார் படத்திற்கு பைனான்ஸ் தர யாரும் முன்வரவில்லையாம்...!

ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த சரத்குமாரை, பழசிராஜா, காஞ்சனா போன்ற படங்கள் அவருக்குள் இருந்த வித்தியாசமான நடிகரை வெளியே கொண்டு வந்தன. அதனால் அவரை இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவான படம்தான் வேளச்சேரி. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இனியா நடித்து வந்தார். சிறிய இடைவேளைக்குப்பிறகு சரத்குமார் கதாநாயகனாக நடிக்க கமிட்டான இந்த படத்தில் அவருக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வீதம் சம்பளம் பேசி படப்பிடிப்பு நடத்தி வந்தனர். அந்த...

தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் படம்...!

இது தேர்தல் சீசன். அதனால் அரசியலை மையமாக கொண்ட படங்கள் ரிலீசாவதில் மும்முரம் காட்டி வருகின்றன. சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி.அழகர் இயக்கி வரும் படம் பிரமுகர். திரிசூல், ஜெசி, மோகனவேல், மஞ்சுவா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்போது தேர்தல் நெருங்குவதால் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். காரணம் இது அரசியல் படம். அதைப் பற்றி இயக்குனர் ஜே.பி.அழகர் இப்படிக் கூறுகிறார். காதலுக்காக...

சிறுவர்-சிறுமிகளை மோதவிடும் இயக்குநர் விஜய்!

பசங்க படத்தில் முன்னணி நடிகர்களைப்போன்று சிறுவர்கள் பெரிய ஓப்பனிங் கொடுத்து படத்தை ஆரம்பித்தார் பாண்டிராஜ். அதேப்போல், ஒரு சிறுவன் ஹீரோ அவனைச்சுற்றி சில சிறுவர்கள், அதேபோல் ஒருவன் வில்லன் அவனைச்சுற்றி சில சிறுவர்கள் எனவும் கதை பண்ணியிருந்தார். அவர்களுக்கிடையே நிகழும் ஈகோப்போரை இயல்பாக படம் பிடித்திருந்தார். அதையடுத்து இப்போது ஏ.எல்.விஜய்யும், சிறுவர்-சிறுமிகளை மையப்படுத்தி சைவம் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமைக்கொண்டு...